Header Ads



வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி குறித்து, சுவாமிநாதனின் நெத்தியடி பதில்

வட மாகாணத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக இந்த மண்ணை விட்டு வெளியேறிய சிங்கள, முஸ்லிம் மக்களை, மீண்டும் அம் மாவட்டத்தில் குடியமர்த்தும் நோக்கிலேயே மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு மேலதிகமாக எந்தவொரு செயற்பாடுகளையும் எங்கள் செயலணி மேற்கொள்ளாது, இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார் மீள்குடியேற்ற இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன். 

சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் யாழ். மாவட்டப் பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்தியில் நடாத்திய வருடாந்த விளையாட்டுத் திருவிழாவின் இறுதிப் போட்டி நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர் ஒருவர் "மத்திய அரசாங்கம் வடமாகாண சபையை ஓரங்கட்டித் தனியே சிங்கள, முஸ்லிம் மக்களை மாத்திரம் மீள்குடியேற்றுவதற்காக உருவாக்கியிருக்கும் மீள்குடியேற்றச் செயலணி தொடர்பாக வினவினார். 

இதற்கு பதிலளித்த போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், 

வட மாகாண மீள்குடியேற்றச் செயலணியின் உருவாக்கப்பட்டது, முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் இடம்பெயர்ந்து வெளியிடங்களில் வசித்து வரும் நிலையில், அவர்களை மீண்டும் வடமாகாணத்தில் மீளக் குடியமர்த்தும் நோக்கிலேயே ஆகும். 

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் யாரும் பேச விரும்பினால் பேசலாம். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். எந்தவொரு அரசியல்வாதிகளும் எதிர்க்க வேண்டிய தேவையில்லை என்பதைத் தெளிவாகக் கூறி வைக்க விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார். 

3 comments:

Powered by Blogger.