Header Ads



மஹியங்கனை பௌத்த கொடி எரிப்பு - நீண்ட நாட்களுக்கு பின், முஸ்லிம்களுக்கு பிணை

-ARA.Fareel-

மஹி­யங்­க­னையில் பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 8 முஸ்லிம் இளை­ஞர்­க­ளையும் பதுளை நீதிவான் பிணையில் விடு­வித்­துள்ளார்.

மஹி­யங்­கனை பன்­ச­லையில் நடை­பெற்ற சமய நிகழ்­வொன்றின் போது பௌத்த குரு­வொ­ருவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து மஹி­யங்­கனை பங்­க­ர­கம்­மன தம்­ப­கொல்ல பகு­தியைச் சேர்ந்த 8 முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த கொடி­களை எரித்­த­மைக்கு எதி­ராக மஹி­யங்­கனை பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் முஸ்லிம் வீடு­க­ளுக்குச் சென்று சம்­பந்­த­பட்ட சந்­தே­க­ந­பர்­க­ளான இளை­ஞர்­களைத் தேடி­ய­தை­ய­டுத்து அவர்கள் பொலிஸில் ஆஜ­ரா­கினர். பின்பு இவர்கள் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 

பௌத்த கொடி எதிர்ப்­புக்கு கண்­டனம் தெரி­வித்து பொது­ப­ல­சேனா அமைப்பு மஹி­யங்­க­னையில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் நடாத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. பொலிஸார் முஸ்­லிம்­க­ளுக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தாக அவர்கள் குற்றம் சுமத்­தினர். 

மஹி­யங்­கனை பொலிஸார்.பங்­க­ர­கம்­மன பள்­ளி­வாசல் மற்றும் மஹியங்னை பன்சலைக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அங்கு சுமுக நிலை நிலவுவதாகவும் பங்கரகம்மன ஜூம்ஆ பள்ளிவாசல் உப தலைவர் முஹ்மூத் தெரிவித்தார்.

1 comment:

  1. After this try to think before you do any foolishness...!

    ReplyDelete

Powered by Blogger.