Header Ads



கீப்பர் முனாஸ்

-Jan Mohamed-

1990 ஆம் ஆண்டு மே மாதம், யாழ் முஸ்லிம் அணி பல சம்பியன் பட்டக்களை குவித்திருந்த ஆண்டு. மே மாதம் யாழ் மாவட்ட உதவி அரச அதிபர் பிரிவுகளுக்கிடையிலான உதைப் பந்தாட்டப் போட்டி யாழ் வேலனை கத்தொலிக்க பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. காலையில் இரண்டு போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு யாழ் முஸ்லிம் அணி தயாரானது. ளுஹர் தொழ வேண்டிய நேரம். எனவே மண்கும்பான் போக தீர்மானிக்கப் பட்டது.

கடலைக் கண்டவுடன் அதற்குள் இறங்காமல் இருக்க மனம் வருமா என்ன! என்னையும் ஜாபிர் மௌலவி இன்னொருவர் நசூர் என நினைக்கின்றேன் எல்லொரும் கடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்தனர். நாங்கள் குளிக்காமைக்கு காரணம் விளைட்டுப் போட்டிகள் உள்ள நாட்களில் குளிப்பது வெய்யிலில் திரிவது அதிகம் சாப்பிடுவது என்பதை தவிர்க்குமாறு எமது அதிபர் மர்ஹூம் ஹாமீம் அவர்கள் கன்டிப்பான கட்டளை. பாடசாலைப் பருவம் முடிந்தும் இன்று வரை அதைக் கடைப் பிடிக்கின்றோம். கடலில் இறங்கியவர்கள் இளரத்தமல்லவா ஆளாளை துறத்தி விளையாடியதில் கீப்பர் முனாஸுக்கு கல் ஒன்று அடித்து கால் பெரிய விரலில் பெரிய காயம் ஏற்பட்டது.

அதனுடன் விளையாடுவது என்பது இயலாது என்பது தான் எல்லா வீரர்களினதும் முடிவு. ஆனால் முனாஸ் தளரவில்லை. தன்னால் முடியும் என்றான். சாப்பிட்ட பின்னர் போட்டி நான்கு மணிக்கு ஆரம்பம். மூன்று மணிக்கு முனாஸை ஏற்றிக் கொண்டு அமீனின் மோட்டார் சைக்கிள் பிலிப் வைத்தியசாலை நோகிச் சென்றது. மூன்றரை மணிக்கு முனாஸின் பெருவிரலில் மரப்பு ஊசி ஏற்றப் பட்டது. அது ஒரு மணிநேரம் தான் தாக்குப் பிடிக்கும். அதனுடன் வந்து கள்மிறன்கினான் முனாஸ்.

இறுதிப் போட்டி என்பதால் முனாஸ் இல்லாவிட்டால் கொஞ்சம் சிரமம் தான். விரைப்பு ஊசியுடம் சப்பாத்தையும் போடமுடியாமல் போட்டுக் கொண்டு களமிறங்கினான் முனாஸ். பொற்பதி அணியுடனான அப்போட்டியில் கடுமையான பௌல்களுக்கு மத்தியில் யாழ் முஸ்லிம் அணி 6 கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது.

அந்த வெற்றி தான் யாழ் முஸ்லிம் அணியை கொழும்புக்கும் அகில இலங்கைப் போட்டியில் விளையாட வழிவகுத்தது. 

கீப்பர் முனாஸ் சிறந்த கீப்பர் மட்டுமல்ல போடிகளில் அணி சறுக்கும் சமயமெல்லால் தனியே நின்று எதிரியை திக்கு முக்காட வைத்து கோல் செல்லாமல் காப்பாற்றுவான். முனாஸுக்கும் எனக்கும் ஒரு சைகை பாஷையிருந்தது. நான் தனியாகச் சென்று ஓரிடத்தில் நின்று கையைக் காட்டினால் முனாஸ் தனக்கு கிடைக்கும் பந்தை எனது காலுக்கு கிடைக்குமாறு சரியாக அடிப்பான். இது பல கீப்பர்களால் இன்று வரை முடியாத ஒன்று.

சில வேளைகளில் இருபது அடிக்கு கூட பாய்ந்து பந்தை தட்டும் திறமை வாய்ந்த ஒரு வீரன் முனாஸ். முனாஸின் திறமைகள் புதிய கோல் காப்பாளர்களும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவது கழகத்தின் ஆதரவாளர்களின் பொறுப்ப் அல்லவா!

2 comments:

  1. யாழ் முஸ்லிமிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றுதான் கூறவேண்டும் இவரை கொண்டு பல வீறர்கலை உருவாக்கவேண்டும்,

    ReplyDelete

Powered by Blogger.