Header Ads



சிரியாவுக்குள் பிரிட்டன் சிறப்புப் படையினர்


சிரியாவுக்குள் பிரிட்டன் சிறப்புப் படையினர் செயற்படும் புகைப்படங்கள் முதல்முறை ஊடகங்களுக்கு கசிந்துள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்டதாக திகதி இடப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்களில் கனரக ஆயுதம் ஏந்திய பிரிட்டன் படையினரை காணமுடிகிறது.

இதில் பிரிட்டன் படையினர் பயன்படுத்தும் இராணுவ வாகனங்கள் சிரியாவின் ஈராக் எல்லையை ஒட்டிய சிரிய கிளர்ச்சி இராணுவ தளமாக அல் தனாப் முகாமிற்கு அருகில் காணமுடிகிறது. இந்த முகாம் மீதான ஐ.எஸ் தாக்குதலுக்கு பின்னர் பிரிட்டன் படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் பிரிட்டன் துருப்பினரை சிரியாவுக்கு அனுப்பும் பரிந்துரை ஒன்று அந்நாட்டு பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த பிரிட்டன் படையினர் சிரியாவில் ஒரு ரகசிய யுத்தத்தில் பங்கேற்றிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரிட்டன் சிறப்புப் படையினரை அனுப்புவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரட்டன் படையிடம் இருந்து தமக்கு இராணுவ பயிற்சிகள் கிடைப்பதை சிரிய கிளர்ச்சியாளர்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். 

No comments

Powered by Blogger.