August 30, 2016

மஹரமில்லாமல் வரக்கூடியவர்களுக்கு அனுமதியில்லை, சவூதி அரேபியா திட்டவட்டம்

உலகம் முழுவதிலிருந்தும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற லட்சக்கணக்கான மக்கள் மக்கா மாநகருக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் கென்யா நாட்டை சேர்ந்த 30 பெண் ஹஜ் பயணிகளுக்கு சவூதி அரேபிய அரசு ஹஜ் செய்ய அனுமதி மறுத்து விட்டது.

அனுமதி மறுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் கென்யா அரசு அதிகாரிகள் மூலமாக எவ்வளவோ எடுத்துக்கூறியும் எவ்வித மாற்றமும் இல்லை.

இதற்கிடையில் கென்யா நாட்டிற்கே ஹஜ் செய்ய சவூதி அரேபிய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும், கென்யாவில் பரவி வரும் தொற்று நோயின் காரணத்தினாலும் சவூதி அரேபிய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் வதந்திகள் வேகமாக பரவியது.

இதுதொடர்பாக சவூதி அரேபிய அதிகாரிகள் கூறுகையில்,

சவூதி அரேபிய நாட்டு சட்டப்படி ஹஜ், உம்ரா செய்ய வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய 40 வயதுக்கு உட்பட்ட பெண் பயணிகள் மஹரமான ஆண் துணையுடன் வர வேண்டும். மஹரமில்லாமல் வரக்கூடியவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை,

அந்த வகையில் மட்டுமே கென்யாவை சேர்ந்த 30 பயணிகள் மஹரம் இல்லாமல் வந்ததால் அவர்களை திருப்பி அனுப்பியதாகவும், மார்க்க விசயத்தில் எந்தவித சமரசத்தையும் சவூதி அரேபிய அரசு செய்து கொள்ளாது என்று தெரிவித்தார்.

30 கருத்துரைகள்:

மார்க்க விசயத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்றால், ஹவுஸ்மேட் மார்கள் மட்டும் மஹ்ரம் இல்லாமல் எப்படி சவுதிக்குள் அனுமதிக்கப் படுகின்றார்களாம்?

So, hereafter, Saudi Government will NOT PERMIT any HOUSEMAIDS below 40 years who come to Saudi alone, without their husbands: When husband & wife go to Saudi, who is going to take care of their children? So better take their children as well.

அப்படியானால் சவூதிக்கு வரும் பணிப்பெண்களுக்கு மட்டும் மஹரம் தேவையில்லையோ...?

Then housemaid? according to islam Sharia law same is applied for Muslims women and girls. We well come this if this being applied to housemaid too

மார்க்க விசயத்தில் எவ்வித சமரசமும் இல்லை. விஷயம் தெரியாதவர்கள் பேசாமல் இருப்பதும் ஒரு நல்ல விசயமே. சவூதி நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண்கள் என்ற பெயரில் அனுமதிக்கப் படுபவர்கள் மார்க்கம் சொல்லியுள்ள மில்குல் யமீன் (வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்) என்கின்ற முறையிலேயே அனுமதிக்கப் படுகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு, இமாம்களின் பத்வா உண்டு, இதனை உலகில் இன்று எந்த இமாமும் பிழை என்று எதிர்த்ததாகவும் இல்லை. வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணின் மீது எஜமானுக்கு முழு அதிகாரம் உள்ளது. மஹ்ரம் என்ற விடயம் அங்கே தேவையே இல்லை, அதுதான் நபிவழி ஆகும்.

Yes they should ban the housemaids too.
அப்பதான் இலங்கையில் இருக்கும் இனவாதிகளுக்கு நல்ல ஆப்பு கிடைக்கும்.

அன்வார், இஸ்லாம் மதம் பணிப்பெண்களை அடிமைகாக (வலக்கரம்) ஆக்கி, எஜமானர்களுக்கு அவர்களை கற்பழிக்கவும் அனுமதி கொடுத்து இருக்கின்றது என்றால், அனைத்து மக்களையும் சமமாக மதிக்க சொல்ல வேண்டிய கடவுளின் மதமாக இருக்குமா?

இதனை சரி காண, இந்து மதத்தில் இருக்கும் வர்ணாஸ்ரம கொள்கையை இழுத்து நியாயப் படுத்த முடியாது, பிழை பிழைதான், எங்கே இருந்தாலும், எங்கே நடந்தாலும்.
அடிமைத்தனத்தை இந்த நூற்றாண்டிலும் மதத்தின் பெயரால் சரி காண்பது எவ்வளவு மோசமான செயல்?

பணிப்பெண்கள் மில்குல் யமீன் பட்டியலில் அடங்குவர் எனும்,கருத்தானது கண்டிக்க வேண்டியதும் அது இஸ்லாத்தின் கருதத்தும் அல்ல.என்பதை இக்கருத்தை முன் வைத்தவர் மீட்டிப்பார்க்க வேண்டும்.இவ்வாறான விடயம் ஆபத்தானது.இது பற்றிக் கூறிய இமாம்களை இவர்குறிப்பிட்டிருக்கலாம்.இதுவும் அல்லாது மில்குல் யமீன் என்பது முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டு அதில் கைதிகளாக பிடிப்பட்டவரகள் தான் இந்த மில்குல் யமீனில் அடங்குவர்.மாறாக பணிப்பெண்கள் இப்பட்டியலில் அடங்கமாட்டாரகள்.அவர்கள் சுதந்திரமான பெண்களாவர்.

peace world, ஒரு விடயத்தில் தமக்கு அறிவில்லை என்றால் அதனை பேசாமல் இருப்பதும், ஓரளவாவது தேடித் தெரிந்துகொண்டதன் பின்னாலே அதனைப் பற்றி வாய் திறப்பதும் சிறந்ததாக இருக்கின்றது என்பது நமக்கு ஐமதுல் முஸ்லிமீன் காட்டித்தந்த சிறப்பான வழிமுறை ஆகும். மில்குல் யமீன் என்னும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் யுத்தத்தில் மட்டும் பிடிக்கப் படுவதில்லை, ஒருவர் தனது பொறுப்பில் உள்ள பெண்களை அன்பளிப்பாகவும் கொடுக்கலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நபி (ஸல்) அவர்களின் வலக்கரமாக இருந்த மரியதுல் கிபதிய்யா (ரலி) அவர்கள் விளங்குகின்றார்கள். வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட மில்குல் யமீன் பெண்களுடன் எஜமானருக்கு உடலுறவு கொள்ள ஏழு வானங்களுக்கு மேலால் இருந்து அல்லாஹ் இறக்கிய குரானிலேயே அனுமதியை நேரடியாக கொடுத்து விட்டான்.

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏

23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.ஆகவே இவற்றைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணுடன் எஜமான் அவளது சம்மதமின்றி உடலுறவு கொண்டாலும், அந்தப் பெண் யாரிடமும் முறையிட அனுமதி இல்லை. இதன் அடிப்படையிலேயே ஹவுஸ்மேட்களின் பாலியல் தொடர்பான எந்த முறைப்பாடுகளும் போலீஸில் பதிவு செய்யப்படுவதில்லை. சர்வதேச அழுத்தங்கள் காரணமாக சவூதி அரசாங்கம் சில பொழுதுகளில் இதில் வழுக்கினாலும், இஸ்லாமிய சட்டம் இதுதான்.

Hari, எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அவனது நேரான வழியை காட்ட அவனிடமே பிரார்த்திக்கின்றேன். நேர்வழியை அடைந்துகொள்ளாத, ஈமானின் சுவையை உணர்ந்து கொள்ளாத ஒரு மனிதனின் மனமானது சைத்தானின் ஊசலாட்டன்களால் அலைக்கழிக்கப் பட்டதாகவே இருக்கும். அல்லாஹ்வுக்கே நீதி சமத்துவம் சொல்லிக்கொடுப்பதை இஸ்லாம் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை. முஸ்லிம் என்றால், அவன் அல்லாஹ் மற்றும் அல்லாஹ்வின் தூதருக்கு மட்டும் கட்டுப்பட்டவனாகவும், அதில் முரண்பாடு கொள்ளாதவனாகவும் இருக்கவேண்டும்.

நீங்கள் அதனை கற்பழிப்பு என்று சொன்னாலும், உங்களையும், என்னையும் விட யாவற்றையும் நன்கறிந்த அல்லாஹ் அதனை மூமின்களுக்கு ஆகுமானதாக ஆக்கியே இருக்கின்றான், ஆகவே வார்த்தை ஜாலங்களுக்கு ஒரு மூமின் மயங்கிவிட மாட்டான். அல்லாஹ்வின் சட்டங்களை சொல்வதற்கும் அவன் வெட்கப்பட மாட்டான்.

மனித குலத்திற்கு எதிரான மிக மோசமான அடிமைச் சட்டம், பாலியல் வன்புணர்வு (கற்பழிப்பு) ஆகியவற்றை அல்லாஹ்வின் பெயரால் சரிகாண்பது மிகவும் கேவலமான செயல் ஆகும். அதே போன்றுதான் சிறுமிகளை திருமணம் செய்வதையும் சரி காண்பது ஆகும். இவ்வாறான காரணங்களால் தான் பலர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி, நாஸ்தீகர்களாக மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். உலகம் மாறிவிட்டது, முன்னேறி விட்டது, காட்டுமிராண்டி யுகத்தின் கதைகளை சொல்லி மக்களை முட்டாளாக்க வேண்டாம், இதனை அன்வர் அலி சலபி அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

The servants who work in households do not come under the same rulings as slaves, whether male or female. Rather they come under the ruling of private workers who are hired to work for the employer, and are like any other employee. They are working under an employment contract for monthly salary with in a service period. The person who apply housemaid visa has to be a married person if he is a male. expats in those countries also can apply for the same provided required conditions are met. I don't know about the rulings in Islam.

الفتوى رقم (10529
س: هل يجوز مجامعة الخادمة، وهل تعتبر بمثابة جارية مملوكة (عبدة)؟
ج: يحرم مجامعة الخادمة التي تستأجر من أجل العمل؛ لأن ذلك زنى، وهو من أكبر الكبائر التي حذرت الشريعة منها، وأما المملوكة التي أباحت الشريعة وطأها فهي المرأة التي استرقت رقا شرعيا. وبالله التوفيق، وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم.
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء
الرئيس: عبد العزيز بن عبد الله بن باز
نائب الرئيس: عبد الرزاق عفيفي
عضو: عبد الله بن غديان
هل يجوز معاشرة الخادمة تحت شعار وما ملكت أيمانكم في زمن أنجب فيه عصر الإماء والعتاق أمرا في غاية الخطورة من ضياع الأنساب وارتكاب الفاحشة التي تسبب الكوارث بغضب من الله. والله المستعان؟
فالخادمة لا تدخل في ملك اليمين، وحكمها حكم غيرها من النساء الحرائر، ومعاشرة مخدومها لها بغير زواج شرعي إنما هو زنا يوجب غضب الله، والاجتراء على مثل ذلك دليل على فساد الدين وضياع المروءة. وراجعي الفتوى رقم: 37893
هل تعتبر الخادمة من ملك اليمين؟ وهل يجوز جماعها؟ أثابكم الله
لحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما بعد: فإن الخادمات الموجودات اليوم في البيوت نساء حرائر، وظن البعض أنهن ملك يمين خطأ عظيم وجهل فاحش، فملك اليمين هن الإماء المسترقات، وللاسترقاق أسباب لا علاقة لها البتة بموضوع الخادمات، ولتعلم أن الخادمة أجنبية عن صاحب البيت وأولاده، وتعامل معاملة الأجنبية، فلا يحل مسها ولا الخلوة بها، ولا النظر إلى عورتها وغير ذلك مما لا يحل من المرأة الحرة الأجنبية، وانظر في معنى ملك اليمين الفتوى رقم:6700. والله أعلم.

அல்லாஹ்வே அறிவை அதிகப்படுத்தி தருவாயாக,இன்னும் எம்மை சீரான வழியில் செலுத்துவாயாக.
பணிப்பெண்களின் நிலை என்ன என்பதைப்பற்றி சில விடயங்களை இஸ்லாமிய அறிஞரகளின் கருத்துக்கள் என்ன என பாரக்கும் போது.அவற்றில் சில அறபு மொழியுடன் தமிழாக்கம்.
வினா,பணிப்பெண்களுடன் உறவு வைத்துகொள்ள முடியுமா,இன்னும் இவர்கள் அடிமைகள் பட்டியலில்,சேர்வார்களா?
பதில் -பணிக்கென கூலிக்கு அமர்த்தப்படும் பெண்களுடன் உறவு கொள்வது ஹராமாகும்,இது தடுக்கப்பட்டதாகும்.இன்னும் இது விபச்சாரமாகும்,அது இஸ்லாம் எச்சரித்த பெரும் பாவங்களில் ஒன்றாகும்.இஸ்லா் உறவு கொள்வதற்கு அனுமதியளித்துள்ளவர்கள் இஸ்லாமிய மார்க்கம் அங்கிகரித்த பிரகாரம் அடிமைக்குட்பட்டவர்களாவர்.இந்த மாரக்கத்தீரப்ப சவூதியில் அமைந்துள்ள அறிவு சார் ஆய்வுகளுக்கும் மார்க்கத்தீர்ப்புக்குமான ஒன்றியத்தின் மூலம் வழங்கப்பட்டது.இதில் தலைவராக அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் ரஹ் அவர்கள் தலைவராகவும்,பிரதித்தலைவர்.அப்துர்ரஸ்ஸாக் அஃபீஃபீ அவர்களும்.உறுப்பினராக அப்துல்லாஹ் பின் கத்யான் அவர்களும்,இதில் பங்கு கொண்டு இதை வெளியிட்டனர்,மார்க்க தீரப்பு இலக்கம் 10529,

பணிப்பெண்கள் மில்குல் யமீனில் அடங்க மாட்டார்கள்,அவர்களது சட்டம் ஏனைய சுதந்திரமான பெண்களின் சட்டமாகும்.இவ்வாறு இவர்களுடனான மார்க்க முறைப்படியான திருமணமின்றி உறவு வைத்து கொள்வதானது நிச்சயமாக அது விபச்சாரமாகும்.அது அல்லாஹ்வின் கொபத்தை கொண்டு வரும்,இவ்வாறு இதன் பால் துணிச்சல் கொள்வதானது அவரிடத்தில் மார்க்கமும்,மரியாதையும் இல்லாமல் பொயுள்ளதை காட்டுகின்றது.மாரக்க தீரப்பு இலக்கம் 37893,கேள்வி -பணிப்பெண்கள் மில்குல் யமீனாக கருதப்படுவார்களா,அவர்களுடன் உறவு கொள்ள முடியுமா,?
பதில் புகழனைத்தும் அல்லாஹவுக்கு,ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் குடும்பத்தார் தோழர் மீதும் உண்டாகட்டும் என்றதன் பின்.இன்று வீடுகளில் உள்ள பணிப்பெண்கள் சுதந்திரமான பெண்களாவர்,சிலர் அவர்கள் மில்குல் யமீன் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர் இது ஒரு பாரிய தவறும்,தெளிவான மடைமையுமாகும்,மில்குல் யமீன் என்போர் அடமைகளான பெண்களாவர்,இந்த அடமைத்தனத்துக்கான -மில்குல் யமீனுக்கான-காரணிகள் இருக்கின்றன அவை இந்த பணிப்பெண்கள் விடயத்தில் எவ்வித தொடர்ப்பும் கிடையாது.இந்த பணிப்பெண்கள் வீட்டுடையவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அஜ்னபிய்யாகும்-ஆகவே அவர் அண்ணிய பெண்ணாகவே நடாத்தப்படவார்.அவளுடன் தனித்து நிற்பதும் உறவு கொள்வது கூடாது,அவளது மறைவான பகுதிகளைப்பார்க்கவோ இன்னும் அந்நிய சுதந்திரமான பெண்களுடன் கூடாத அனைத்தும் ஆகுமாக மாட்டாது.இன்னும் பார்க்க மில்குல் யமீன் என்றால் என்ன என்பதை எண்6700,
இவையனைத்தும் சவூதியில் அமைந்துள்ள அறிவு சார் ஆய்வுகளுக்கும் மார்க்கத்தீர்ப்புக்குமான ஒன்றியத்தின் மூலம் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களாகும்.யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்,

தவறான தகவல். சவுதிக்கு பணிப்பெண்கள் அடிமைகள் சட்டத்தின் கீழேயே அனுமதிக்கப் படுகின்றனர்.

இல்லாவிட்டால், மஹ்ரம் இல்லை என்று ஹாஜிகளை திருப்பி அனுப்பிய சவூதி அரேபியா, பணிப்பெண்களுக்கு மட்டும் விசா கொடுப்பது எப்படி?
அடுத்து, பணிப்பெண்கள் பாலியல் வன்முறை குறித்து எவ்வித முறைப்பாடும் செய்ய முடியாது.

அன்வர் சலபி போன்ற முட்டாள்கள், மார்கத்தை தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்ல, அவர்கள் புரிந்து வைத்துள்ளதே மார்க்கம் என்று பத்தாம் பசலித்தனமாக வாதிடுவார்கள். அரை குறை அறிவும் கல்வியும் கொண்ட இவரைப் போன்றவர்கள், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சிறுமைப்படுத்தும் கைங்கரியத்தையே செய்வார்கள். மில்குல் யமீன் என்பதன் கருத்து என்ன ? அது யாரைக்குறிக்கும் என்ற அடிப்படை அறிவுகூட அன்வர் சலபிக்கு இல்லாதிருப்பது மிகவும் வியப்பாகும். சாதாரண தரத்தில் படிக்கும் இக்காலத்து மாணாக்கர்களிடம் கேட்டால் விரிவாகக் கூறுவார்கள்.
இவரது கொள்கைப் பிரகாரம் நமது நாட்டில் வீடுகளில் வேலை செய்யும் எல்லோருமே மில்குல் யமீன் சட்டத்தின் கீழ் தான் கையாளப் படவேண்டும் போல் தெரிகிறது.

இஸ்லாம் தெளிவான மதம், ஒரு சந்தேகமும் இல்லை என்று மேடைகளில் முழங்கும் உங்களால் ஏன் ஒரே பதிலை சொல்ல முடியாமல் இருக்கின்றது? முஸ்லிம்களுக்கு ஒருமாதிரியான பதிலும், முஸ்லிமல்லாத மற்ற மதத்தவர்களை ஏமாற்ற இன்னொருவிதமான பதிலும் சொல்கின்றீர்களோ என்று சந்தேகமாக இருக்கின்றது.

Anvar ali salafi அவர்களே sub ,ajent ,arab boss களுக்கு எமது பெண் பிள்ளைகளை தாரைவார்து விட்டு அதட்கு விலக்கம் சொல்கிரீர்கள் இதுதான் நீங்கள் படித்த இஸ்லாமோ உங்கள் சகோதரி என்றாலும் இதுதான் விளக்கமா?

104: I work in a governmental office, my wife is a teacher, and we have children; all praise be to Allah Alone. The point is that we have brought a housemaid from outside the country without a Mahram (spouse or permanently unmarriageable relative). What is the ruling on this? A: Presence of a housemaid in a home without her spouse is dangerous. To be on the safe side, you should not employ this housemaid. This is because it is possible that you may be in a Khulwah (being alone with a member of the opposite sex) with her and some evil can take place, causing troubles with your wife. However, you may have two housemaids or you may have one housemaid in case that somebody other than your wife lives in the same house, such as your mother or sisters. Concerning the Mahram, it is Wajib (obligatory) that a housemaid has a Mahram. Her family must not allow her to travel without a Mahram. You have to insist upon this for the Messenger (peace be upon him) said: A woman has not to travel except with a Mahram. Again, it is Wajib on the family of such housemaids to send Mahrams with them, but because most of them are greedy and indifferent they send them without Mahrams. May Allah protect us!

This is the Fatwa of shakyh Abdul Azeez ibn Baz.

Please ignore the talk of Anwar.

http://www.alifta.net/Fatawa/fatawaDetails.aspx?languagename=en&BookID=14&View=Page&PageNo=1&PageID=4141

This is Fatwa of imam Ibn baz.

Nothing to do the what that Anwar talks.

பணிபெண்களை கற்பழிக்க (சம்மதம் இல்லாத உடலுரவு) இஸ்லாம் அனுமதிக்கிறது என இந்த பதிவுகள் மூலமே அறிந்தேன்.
அதிர்ச்சி அடைந்தேன். இது மிகவும் கேவளமான நடைமுறை. (Sorry for my words)
கட்டிய மனைவியை தொடுவதற்கு கூட சம்மதம் தேவையான இந்த காலத்தில் இப்படியா?.

What will stupid UN do about it?
நீங்கள் இந்த காலத்துக்கு ஏற்ப இந்த பழங்கால சட்டங்களை மாற்றுவது நல்லது, எனது கருத்து.

அம்ஜி ஹனியா
இஸ்லாத்திலிருந்து நாத்திகர்கள் ஒருபோதும் உருவாக மாட்டார்கள். அப்பெடி மாறிய ஒருவரையாவது உங்களுக்குத் தெரியுமா? நாத்திகர்கள்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள். சிறுவயது திருமணம்?????? உங்கள் கருத்து ஒரு முஸ்லிமுடைய கருத்தைப் போல் இல்லையே?

Hari Thivahar நீங்கள் எல்லா பதில்களையும் பாருங்கள். இஸ்லாத்தை கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க முடியும். நீங்கள் எந்த அளவு இஸ்லாத்தை வெறுக்கிறீர்களோ அந்த அளவு இஸ்லாத்திற்கு நெருங்கி வருகிறீர்கள்.

Dear Non Muslim ,

Please ignore the speech of the individual.

Full fatwa commitee Rejected warned many years, recruting of housemaid with out mahram.

Awam ( general people) do not follow the advices of scholars. They recruit
Considering what is profit to them.

Mere naming ibrahim or muhammed or salafi.
Salafi and salafi scholars far from him.

பெண்களுக்கு அதிக உரிமை கொடுக்கும் இந்தியா இனிமேல் வீட்டு பணிப்பெண் வேளைக்கு அரபு நாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துங்கள்.
அவர்கள் பெண்களைபாதுகாப்பதற்காக இனி பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என சட்டம் கொண்டுவருவார்கள்.

அன்வர் ஸலபி ஒரு மனநோயாளியைப்போன்று கருத்தை பதிவிட்டு இருக்கிறார் விபச்சாரத்தையும்.கற்பழிப்பையும் ஊக்குவிக்கும் குப்பை மத்ஹபுகளை படித்துவிட்டு இவ்வாறு பகிரங்கமாக விபச்சாரத்துக்கு துணை நிற்பது எவ்வாறு ஒரு முஸ்லிமால் முடியும் .உங்கள் சகோதரி இவ்வாறு செய்தால் நீங்கள் அதையும் ஏற்றுக் கொள்வீர்களா?அல்லது அதக்கு வேறு பத்வா கொடுப்பீர்களா?சவுதிக்கு பணிப்பெண்ணாக பெண் சென்றால் அது ஹறாம் ஹலால் என்பது ஒருபுறம் இருக்க தனக்கு எவ்வித அறிவுமே இல்லாத ஒரு விடயத்தில் தலையிட்டு பத்வா கொடுத்து இஸ்லாத்துக்கும்.முஸ்லீம்களுக்கும்.அல்லாவுக்கும் அவன் திருமறைக்கும்,நபிக்கும் நபியின் வாழ்க்கை நெறிக்கும் அவதூறும் இழுக்கையும் ஏற்படுத்தும் வீதமாக எழுதும் நீங்கள் எந்தவகை முஸ்லிம் .அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டாமா?நீ பெரும் அநியாயக்காறனாகவே இருக்கிறீர்,எல்லோரும் அறிந்த விடயம் மஹ்ரமி இல்லாமல் ஒரு பெண் ஹஜ்ஜுக்கு போக முடியாது என்பது அதை பணிப்பெண் விடயத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது தவறு.அதை வேலைக்கு எடுப்பவனான அறபியானாலும் அனுப்பும் கேடுகெட்டவன் ஆனாலும் செரி அதற்கு அவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் ,ஆகவே இவ்வாறான மூளை குழம்பிய வேலைகளை செய்யாமல் தனக்கு எதில் போதிய அறிவு இல்லையோ அல்லது சந்தேகம் இருந்தால் வாய் மூடி இருப்பதுதான் சிறந்த வழி,

Saudi செய்கிறது என்பதால் அது இஸ்லாமிய சட்டமாக மறாது . பணிபெணகள் மலக்குஅய்மானுக்ககும் கூட்டத்தில் வரவே மாட்டார்கள் . அடிமைகள் எனபது யுத்தத்தில் பிடிபட்ட பாதுகாப்பு அற்ற பெண்கள் . அவர்களுடன் உறவு கொள்ள முதல் அவர்களும் திருமணம் செய்யபட வேண்டும் , அதுவும் அவர்களின் சம்மதத்துடன் . இல்லையெனில் அது விபச்சாரம் . அவர்கள் பத்தினித்தனமையைநாடுவார்களானாள். அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்கிறது குர்ஆன் . சூரா நிசா 24 - 25 சவுதி அரசாங்கம் அதன் தேவைக்கேற்ப சட்டத்தை மாற்றி அமைக்கிறது . அது ஒரு இஸ்லாமிய நாடே இல்லை . அதன் அழிவு தொலைவில் இல்லை.

அன்புக்குரிய ajan-- வெறுமனே இங்கே உள்ள பதிவுகளை வைத்து இஸ்லாத்தை பற்றி தவறாக எடை போட்டு விட்டீர்கள். ஒரு மதத்தை பற்றி சரியாக அறிவதற்கு அதை சரியாக பினபற்றுபவரை பார்க்க வேண்டும் அல்லது அதன் வேத நூல்களை படிக்க வேண்டும் . நீங்கள் குர்ஆனை படித்தால் இதற்கான சரியான விடை கிடைக்கும். பெண்கள் என்ற சூராவில் 24-25 வசனங்களை படித்தால் .. அடிமைகள் எனபது யுத்தத்தில் பிடிபட்ட எந்தவித பாதுகாப்பற்ற பெண்கள் அல்லது ஆண்கள் . இவர்களில் பெண்களை திருமணம் செய்யுமாறே குர்ஆன் கூறுகிறது . அதுவும் அவர்களின் சம்மதத்துடன் . அவர்கள் பத்தினித்தனமையை நாடு வார்களானாள் அவர்களை விட்டு விடுமாறு குர்ஆன் கூறுகிறது . மாறாக தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களை நடத்த முடியாது .இன்னும் யுத்தத்தில் பிடித்த அடிமைகளை எவ்வாறு நடத்த வேண்டும் எனபதை இஸ்லாம் கூறும் போது அவர்கள் தனது எஜமானர்களுக்கு கீழே இருப்பார்கள், அவர்கள் . சுதந்திரமாக நடமாட முடியும் . இன்று என்ன நடைபெறுகிறது ? யுத்தத்தில் பிடிபட்டவர்கள் தனது ஆயுளையே சிரையில் கழிக்க வேண்டிய நிலை . அதுவும் சித்திரவதைகளுடன். சற்று சிந்தியுங்கள் , இன்று யுத்தத்தில் பிடிபட்ட பெண்களை எவ்வாறு நடத்துகின்றனர் ? படையினரின் முதல் வேலை அவர்களை கறபழிப்பார்கள். அதுவும் கொடூரமாக கூட்டாக.இதனை யாராலும் மறுக்கமுடியாது . எமது நாட்டிலும் இதுதானே நடந்தது . இப்போது சொல்லுங்கள் இந்த முறை நல்லதா? அல்லது இஸ்லாம் கூறுவது போன்று அவர்களை முறைப்படி திருமணம் செய்து அவர்களின் உரிமைகளை வழங்குவது சிறந்ததா ?

ashif இது சரி என்று கூறவருகிறீர்களா? சவுதி அரசாங்கம் செய்வது இஸலாமே இல்லை. அது ஒரு இஸ்லாமிய அரசும் அல்ல . அவர்கள் செய்வது முற்றிலும் அராஜகம் . பக்க சாரபானவர்கள். ஒரு ஆசிய நபர் கொலை செய்தால் அவரை கொலைசெய்வார்கள் . ஆனால் ஒரு அமெரிக்கன் செய்தால் அவனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை . இது அண்மையில் நடந்த ஒரு உண்மை .

சவுதி மட்டுமல்ல எல்லா மன்னர்கள் கொண்ட நாடுகள் அமெரிக்காவின் அடிமைகள் முகம்மது நபி ஜனநாயக வாதி அவர்களுக்கு பின்னர் அவர்களின் பிள்ளைகள் ஆட்சி செய்ய வில்லை தகுதியானவர்கள் ஆட்சி செய்தார்கள்

Appo innum oruwanukku sondamana pennai athawathu manaiviyai kasu koduttu wangi awaludan udalurawu kondal athu wifachcharam aahatha anda pen athukku Udan pada wittal athu yeppady nabi wali aahum anda pennudayya kanawan uirudan Iirundal awal yeppady ottukkolwal ithu yenda withattula ghayam aahum pengal awarhaludayya kastataththukahatan welinadu selhinranar ithai yeppadi anda weettu yejamanarhal awarhalukku sathahamaha payanpaduttalam

Post a Comment