Header Ads



மனைவிக்கு இன்ப அதிர்ச்சியளிக்க, புர்கா அணிந்த கணவன் - "சம்­ப­வமும் பின்­ன­ணியும்"

-விடிவெள்ளி MFM.Fazeer-

முஸ்லிம் பெண்கள் தமது உடலை முழு­மை­யாக மறைக்கும் வித­மாக அணியும் ஆடையே 'புர்கா' வாகும். முகம் உள்­ளிட்ட அனைத்து அங்­கங்­க­ளையும் மறைக்கும் வித­மாக அணி­யப்­படும் இந்த ஆடை­யா­னது, முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ராலும் மாற்று மதத்­த­வர்­க­ளாலும் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் தவ­றான செயல்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை கடந்த காலங்­களில் அவ­தா­னிக்க முடிந்­தது.

இதன் கார­ண­மாக பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் புர்­கா­வுக்கு எதி­ரான  குரல்­களும் பல்­வேறு தரப்­பி­னரால் எழுப்­பப்­பட்­டதும் நினை­வி­ருக்கும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் கண்டி - மஹி­யாவ பகு­தியில் உள்ள அரச வங்­கி­யொன்­றினை கொள்­ளை­யிட முயற்சி இடம்­பெற்­றது. இது ஒரு இரா­ணுவ வீர­ரினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட முயற்­சி­யாகும். இதன் போது குறித்த இரா­ணுவ வீரர் இஸ்­லா­மிய பெண்கள் அணியும் புர்கா ஆடையை அணிந்தே வங்­கிக்குள் சென்­றி­ருந்தார். 

எனினும் அங்கு கொள்­ளை­யிட அவரால் முடி­யாமல் போனது. வங்­கி­ய­ருகே வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்து கண்டி நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்த நிலையில் அவர் குற்­றத்தை ஒப்புக் கொள்ள இரண்டு வருட சிறைத் தண்­டனை அவ­ருக்கு அளிக்­கப்­பட்­டது. இத­னை­விட இரா­ணுவ நீதி­மன்றில் இவ­ருக்கு எதி­ராக பிரத்­தி­யேக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு இரா­ணு­வத்­தி­லி­ருந்தும் பணி நீக்கம் செய்­யப்­பட்டார்.

இது இவ்­வா­றி­ருக்க கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி மாளி­கா­வத்தை பகு­தியைச் சேர்ந்த பிர­பல பாதாள உலகத் தலை­வ­ரான மாமாஸ்மி எனப்­படும் காதர் மொஹம்மட் அஸ்மின் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் பொரளை, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்­துக்கு பின்­பு­ற­மா­க­வுள்ள வீதியில் வைத்து ஆயுதம் காட்ட அழைத்துச் செல்­லப்­பட்ட போது சுட்­டுக்­கொல்­லப்­பட்டார். மாளி­கா­வத்­தையில் உள்ள அவ­ரது வீட்டில் வைத்து கைது செய்­யப்­பட்டே இவ்­வாறு அவர் அழைத்துச் செல்­லப்­பட்டு தப்பிச் செல்ல முற்­பட்­ட­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக பொலிஸார் அப்­போது தெரி­வித்­தனர்.

இந் நிலையில் மாமாஸ்மி எனும் பாதாள உலகத் தலை­வரை பொலிஸார் பல வரு­டங்­க­ளாக தேடி வந்த நிலையில் அவரும் ஹபாயா, புர்கா ஆடை­க­ளுக்குள் மறைந்தே பொலி­ஸாரின் கண்­க­ளுக்கு மண் தூவி வந்­த­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் உறுதி செய்­யப்­பட்­டது.

இவ்­விரு சம்­ப­வங்­களும் முஸ்லிம் பெயர் தாங்­கி­யோ­ராலும் மாற்று மதத்­த­வர்­க­ளாலும் புர்கா தவ­றான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட உதா­ர­ணங்­களே. இத­னை­விட பல பெண்­களும் புர்­காவை தவ­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­திய பல சம்­ப­வங்கள் பொலிஸ் புத்­த­கங்­களில் பதி­வா­கி­யுள்­ளன.

இந்த வரி­சையில் தனது மனை­விக்கு அதிர்ச்சி அளிக்க இஸ்­லா­மிய பெண்­களின் புர்­காவை அணிந்த முஸ்லிம் கணவர் ஒருவர் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து அண்­மையில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். புர்கா ஆடையின் நோக்­கத்தை அனைத்து முஸ்­லிம்­களும் பொது­வாக தெரிந்து வைத்­தி­ருந்­தாலும் பொது­வான இடங்­களில் செய்யும் இவ்­வா­றான முட்டாள் தன­மான நட­வ­டிக்­கை­களும் தவ­று­களும் புர்­கா­வுக்கு எதி­ரான கோஷங்­க­ளையே பலப்­ப­டுத்­து­கின்­றன. ஆம், அது கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி. கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் வெளிச் செல்லும் வாயில் அருகே புர்கா ஆடை­யுடன் நின்­றி­ருந்த மொஹமட் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

மொஹ­மட்டை பற்றி கூற­வேண்டும். மொஹமட்  தற்­போதைய் அர­சாங்­கத்தின் பிர­பல அமைச்சர் ஒரு­வரின் உற­வுக்­காரர். கொழும்பு வாழைத் தோட்டம் பகு­தியைச் சேர்ந்த அவ­ருக்கு 27 வய­துதான் ஆகி­றது. சதொச நிரு­வ­னத்தின் நிறை­வேற்­றுத்­தர அதி­காரம் கொண்ட பத­வியில் உள்ள அவர் புர்கா ஆடை­யுடன் கட்­டு­நா­யக்க விமான நிலைய வாயிலில் கைது செய்­யப்­பட்­டமை பொலி­ஸா­ருக்கே அதிர்ச்­சியை கொடுத்­தது. ஏனெனில் அவர் எதற்­காக புர்கா ஆடை அணிந்து அங்கு நட­மாட வேண்டும், அதன் நோக்கம் என்ன என்­ப­வற்­றுக்கு மேல­தி­க­மாக ஏதேனும் சட்ட விரோத செயலை முன்­னெ­டுக்க அவர் முயற்­சித்­தாரா என்ற சந்­தேகம் பொலி­ஸா­ருக்கு அதி­க­ரித்து காணப்­பட்­டது.

கட்­டு­நா­யக்க விமான நிலைய போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­க­ளிடம் மொஹமட் ஆரம்பம் முதல் இறுதி வரை சொன்­ன­தெல்லாம் மூன்று வரு­டங்­க­ளுக்கு பிறகு தன்னை காணப்­போகும் தனது மனை­விக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்­கவே தான் புர்கா அணிந்­தி­ருந்தேன் என்­ப­தாகும். எனினும் அந்த சூழலில் அதனை நம்­பு­வ­தற்கு பொலிஸார் தயா­ராக இருக்­க­வில்லை. மொஹ­மட்டின் மனைவி சஹானா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) நோர்­வேயில் தொழில் புரிந்து வந்தார். சஹா­னாவின் சொந்த இடம் முல்­லை­தீவு ஆகும். எனினும் யுத்தம் கார­ண­மாக அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்­தி­ருந்த சஹா­னாவின் குடும்­பத்தார் தற்­போது புத்­தளம் மாவட்­டத்­தி­லேயே வசித்து வரு­கின்­றனர்.

மொஹ­மட்டும் சஹா­னாவும் ஒரு­வரை ஒருவர் சந்­தித்­துக்­கொண்­டது இங்­கி­லாந்­தி­லாகும். இரு­வரும் இங்­கி­லாந்தில் தமது கல்­வியைத் தொடர சென்­றி­ருந்த சமயம்  இந்த சந்­திப்பு ஏற்­பட்டு பின்னர் அது காத­லாக மாறி­யுள்­ளது. இந்­நி­லை­யி­லேயே கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் இங்­கி­லாந்­தி­லேயே அவ்­வி­ரு­வரும் திரு­மணம் செய்து கொண்­டுள்­ளனர். திரு­ம­ணத்தில் சில வாரங்­களின் பின்னர் சஹானா தொழில் நிமித்தம் நோர்வே சென்­று­வி­டவே மொஹமட் இலங்­கைக்கு திரும்­பி­யுள்ளார்.

இந்­நி­லையில் சுமார் மூன்று வரு­டங்­களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி சஹானா, தனது கணவர்,  குடும்­பத்­தாரை காண இலங்­கைக்கு வரு­வ­தாக முன்­கூட்­டியே கண­வ­ரான மொஹ­மட்­டுக்கு அறி­வித்­தி­ருக்­கின்றார். இந் நிலையில் தான் மூன்று வரு­டங்­களின் பின்னர் இலங்கை வரும் மனை­விக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மொஹமட் சிந்­தித்­துள்ளார். அதன் வெளிப்­பாடே இந்த புர்கா நாடகம். சஹானா நோர்­வேயில் இருந்து இலங்­கைக்கு நேரடி விமான சேவைகள் எதுவும் இல்­லாத நிலையில் கட்­டா­ருக்கு வந்து அங்­கி­ருந்து கொழும்பு நோக்கி வர­லானார்.  சஹானா பண்­டா­ர­நா­யக்க விமான நிலை­யத்தில் வந்து இறங்­கு­வ­தற்கு சுமார் ஒரு மணி நேரத்­துக்கு முன்­ன­ரேயே மொஹமட் விமான நிலையம் சென்­றுள்ளார்.

சில நிமி­டங்கள் விமான நிலைய வெளி­யேறும் பகு­தியில் காத்­தி­ருந்த மொஹமட், கையில் ஒரு பையுடன் திடீ­ரென அங்­கி­ருக்கும் ஆண்கள் கழி­வ­றைக்குள் சென்­றுள்ளார். கழி­வ­ரைக்குள் சென்ற மொஹமட் வெளியே பெண் வேடத்தில் புர்­கா­வு­ட­னேயே வந்­துள்ளார். ஆண்கள் கழி­வ­றைக்குள் இருந்து புர்கா அணிந்த பெண் ஒருவர் வெளியே வரு­வது விமான நிலை­யத்தின் சி.சி.ரி.வி. கண்­கா­னிப்பு பணியில் இருந்த அரச உளவுப் பிரி­வி­னரால் அவ­தா­னிக்­கப்­ப­டவே அது அவர்­க­ளுக்கு பாரிய சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

பெண் ஒருவர் ஆண்கள் கழி­வ­றைக்குள் செல்­வது சி.சி.ரி.வி. கண்­க­ணிப்பு கம­ராவில் பதி­வ­கி­யி­ருக்­காத போதும், கழி­வ­றைக்குள் இருந்து  எப்­படி புர்கா அணிந்து பெண் ஒருவர் வர முடியும் என சந்­தே­கித்த உளவுப் பிரி­வினர் உட­ன­டி­யாக அந்த தக­வலை கட்­டு­நா­யக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கினர்.

உட­ன­டி­யாக செயற்­பட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர், விமான நிலை­யத்தின் வெளி­யேறும் வாயில் அருகே சென்று அங்கு நின்­றி­ருந்த புர்­கா­வுடன் கூடிய ஆடையை அணிந்­தி­ருந்த மொஹ­மட்டை கைது செய்து தமது விசா­ரணை தளத்­துக்கு அழைத்துச் சென்­றனர். அங்கு வைத்து பொலிஸார் விசா­ரணை செய்த போதும், எவ்­வித பதற்றம், பயம் இன்றி தனது மனை­வியை இன்ப அதிர்ச்­சியில் ஆழ்த்­தவே இவ்­வாறு புர்கா அணிந்­த­தாக அவர் தெரி­விக்­க­லானார்.

இந் நிலையில் அவர் தெரி­விக்கும் காரணம் உண்­மை­தானா என்­பதை கண்­ட­றிய வேண்­டிய தேவை பொலி­ஸா­ருக்கு இருந்­தது. இத­னை­ய­டுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரி­வினர் மொஹ­மட்டை கட்­டு­நா­யக்க பொலி­ஸா­ரிடம் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக கைய­ளித்­தனர். கட்­டு­நா­யக்க பொலிஸார் மொஹ­மட்டை கையேற்று பொலிஸ் சிறைக் கூடத்தில் அடைத்து விசா­ரணைச் செய்­தனர்.  இந் நிலையில் சஹா­னாவும் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்ளார்.

இதனை அங்­கி­ருந்த பொலிஸார் அவ­தா­னித்­தனர். தனது கணவர் தன்னை கட்டித் தழுவி வர­வேற்க விமான நிலை­யத்தில் காத்­தி­ருப்பார் என்ற எதிர்ப்­பார்ப்­புடன் அங்கு வந்த சஹா­னா­வுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்­சியே காத்­தி­ருந்­தது. சஹானா தன்னை தனது கணவர் வர­வேற்பார் என்று எண்­ணியே வந்த நிலையில் அங்கு வர­வேற்க ஒரு பொலிஸ் குழுவே காத்­தி­ருந்­தது. சஹா­னாவை விமான நிலை­யத்­தி­லி­ருந்து பொலிஸார் நேர­டி­யாக பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்­றனர்.

அங்கு சிறைக் கூண்டில் மொஹமட் இருப்­பதை அவ­தா­னித்த சஹா­னா­வுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. மொஹமட் கொடுக்க நினைத்த இன்ப அதிர்ச்­சியை விட நிச்சயம் சஹானாவை அது பாதித்திருக்கும். சஹானாவிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.  இதனையடுத்து அவ்விரு வாக்குமூலங்களும் பரஸ்பரமாக இல்லை என்பதையும், மொஹமட் கூறிய விடயங்கள் உண்மையே என்பதையும் உறுதிச் செய்துகொண்ட பொலிஸார் நீர்கொழும்பு நீதிமன்றம் ஊடாக அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

உண்மையில், உலகளவில் இஸ்லாமிய அடையாளங்களைப் பயன்படுத்தி பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளும், பயங்கரவாத நடவடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டு வரும் இன்றைய சூழலில், அதி உயர் பாதுகாப்பு வழங்கப்படும் விமான நிலையம் போன்று ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க பொது இடத்தில் பாதுகாப்பு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்படும் விதத்தில் இத்தகைய முட்டாள் தனமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். 

11 comments:

  1. First of all, Islam knows well aabout these idiots behaviors... Islam knows that will be easy for everyone behind this type os dress (you call Furqa)....BUT
    ISLAM never say to wear this type of dress and every women they show their face & forehand....then only Islam knows the respect will be given by non-muslims tooo....
    So, I dont know from where they chosed or selected this kind of dress which ISLAM is not approach...
    There is no any meaning of FURQA...USELESS... GUIDING COMMUNITY IN A WRONG WAY

    ReplyDelete
  2. ஆயிஷா (றழி) முகத்திரை அணிந்ததாக அபுதாவுத் கிரந்தத்திலே வந்துள்ளது.சஹாபா பெண்மணிகளைின் வழிமுறையைப் பினபற்றாமல் நவீனத்துவ வாதிகளின் இஸ்லாத்தையா பின்பற்றவது.

    ReplyDelete
    Replies
    1. முதலாவது அபாயா புடைவையை மாத்துங்க , அது பிலேடவிட மெல்லிசா இருக்கு

      Delete
  3. ஒருவர் முட்டாள்தனமான செயலைச் செய்தார் என்பதற்காக சஹாபாப் பெண்மணிகள் அணிந்ததை எங்கிருந்து வந்ததெனக் கேட்கலாமா சஹாப்தீன் அவர்களே!

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர். ..சகோதரரே. ..

      Delete
  4. Covering the face is an Arabic culture. Ayeesha (Rali) is an Arabian woman. Quran clearly says, what needs to be covered. You are not allowed to create new rules in Islam.

    ReplyDelete
  5. ஏன் சஹாபாக்கள் அணியும் ஆடை அணிந்து தாடி வளர்த்து தலைப்பாகை கட்டிச்சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கலாமே

    ReplyDelete
  6. nabi sal.avarnalin pengalukku irangiya ayathu nisa al nabi appo ellapengalukkum enru solli ayatha maatha poringala ippo acju.othu kondathu anniyan thadukkum vidathil allah sattam irakka maatan

    ReplyDelete
  7. ivar abaya podanum poumblaya anupi sambarippavan daily abaya podanum ithula vera supprise

    ReplyDelete
  8. "பெண் வேடம் போடும் ஆடவரை அல்லாஹ் சபிக்கிறான்".
    இவனுகளுக்குத்தான் சொல்றது "படித்த முட்டாள்" என்று.

    மேலும், இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாதென்றுசஹாப்தீனுக்கு சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  9. அரசியல் அதிகார மமதை சிந்தனையையை மறைத்திருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.