Header Ads



ஊடுருவ முயன்ற அமெரிக்க உளவு, விமானத்திற்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானிய வான் பகுதிக்குள் நுழைய முற்பட்ட அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் ஈரான் இராணுவத்தின் எச்சரிக்கையை அடுத்து அங்கிருந்து வெளியேறியுள்ளது.

“நாட்டின் கிழக்கு வான் பரப்புக்குள் நுழைய முற்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை ஈரானிய வான் பாதுகாப்பு இராணுவம் அவதானித்து எச்சரிக்கை விடுத்தது” என்று ஈரானிய இராணுவத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு செய்தி நிறுவனமான தஸ்னிம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானம் கடந்த திங்கட்கிழமை ஆப்கானில் இருந்தே ஈரானுக்குள் நுழைய முற்பட்டுள்ளது. தெற்கு ஆப்கான் மாகாணமான கந்தஹாரில் இருந்து புறப்பட்டிருக்கும் இந்த விமானம் ஈரானிய எல்லையில் 20 மைல்கள் வரை நெருங்கி வந்துள்ளது.

எனினும் இந்த ஆளில்லா விமானத்திற்கு ஈரான் எவ்வாறு எச்சரிக்கை விடுத்தது என்பது குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.

கடந்த 2012இல் பாரசீக வளைகுடா நீரில் ஊடுருவிய அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை ஈரானிய இஸ்லாமிய புரட்சிப்படை கைப்பற்றி இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில் ஆப்கான் எல்லையை ஒட்டிய ஈரானின் கஷ்மார் நகரில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று அதிக சேதம் இன்றி வீழ்த்தப்பட்டது. 

2 comments:

Powered by Blogger.