Header Ads



குழந்தையை விற்ற இலங்கை பெண், சார்ஜாவில் கைது - உடனடியாக நாடுகடத்தவும் உத்தரவு

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தன் இரட்டை குழந்தைகளில் ஒரு பிள்ளையை விற்பனை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள Sharjah நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றார் என்ற தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பின்னர் பொலிஸ் அதிகாரி குழந்தையை வாங்குபவர் போல் நடித்து,குறித்த பெண்ணிடம் ”ரூபா 2500 டெர்காம் பணம் தருகின்றேன் குழந்தையை தருமாறு” கூறியுள்ளார்.

குறித்த பெண்ணும் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை பொலிஸாரிடம் கொடுத்துள்ளார்,அடுத்த கனமே குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொண்ட போது,

திருமணமாகி தான் இந்த இரட்டை குழந்தைகளை பெற்றேன்,ஆனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தன்னிடம் பணம் இல்லை என்றும்,என்னுடைய ஒரு குழந்தைக்கு கடுமையான சுகயீனம் அதற்கு மருத்துவ வசதிகள்

செய்துக் கொள்ள கூட தன்னிடம் பணம் இல்லை அதனால் தான் விற்க முயற்சித்தேன் என குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தல் என்ற குற்றச்சாட்டின் பேரின் குறித்த பெண் மீது Sharjah நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Sharjah நீதிமன்ற தலைமை நீதவான் Yaqoub Al Hamadi,குறித்த பெண்னை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.