Header Ads



பள்ளிவாசலில் கொலை வெறியாடிவிட்டு, கோழைப் புலிகள் தப்பியோடிய போது..!

-
எம்.எல்.எம். அன்ஸார்-

-03-08-1990- பள்ளி வாயலில் தொழுது கொண்டிருக்கும் போது ஷஹீதாகுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்!

அந்த ரப்புல் ஆலமீன் நாடாவிட்டால் எப்படி மெளத்தாகுவது?

காத்தான்குடி முதலாம் குறிச்சி பள்ளி வாயலுக்கு அப்போது (1990) மஹ்ரிப் தொழப் போனால் இஷாவையும் தொழுதுவிட்டு இரவு பத்து மணியும் பிந்தித்தான் வீட்டுக்குப் போவேன். 

03-08-1990 மஹ்ரிப் தொழுதுவிட்டு ஹவுழுப் பக்கம் உள்ள படிக்கட்டில் நானும் கவிஞர்களான ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.ஜுனைதீன் மற்றும் ஆரிப் (ஹயாத்துக்கான் மாஸ்டரின் இரண்டாவது மகன்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் ஜவ்பர்கான், வீட்டுக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு இஷாவுக்கு அதான் சொல்ல முதல் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஜுனைதீன், ஆரிப், நான் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே இஷாவுக்கு அதான் ஒலிக்கிறது. மூவரும் வுழூவுடனேயே இருக்கிறோம். ஜுனைதீனின் ராத்தா பரீனாவின் வீடு பள்ளிக்கு பக்கத்தில் இருப்பதால் இகாமத் சொல்லுவதற்கிடையில் தேநீர் அருந்திவிட்டு வருவோம் என்று ஜுனைதீன் சொல்கிறார். ஆரிப், " நான் வரவில்லை. பள்ளிக்குள் போகிறேன். நீங்கள் ரெண்டு பேரும் தேநீர் குடித்துவிட்டு வாருங்கள் " என்று சொல்லிவிட்டு பள்ளியின் உள்ளே போய்விட்டார்.

பரீனா ராத்தா ஊற்றித் தந்த தேநீர் கொதிக்கக் கொதிக்க கடும் சூடாக இருந்தது. அவசரமாகக் குடிக்க முடியவில்லை. எங்களோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஜுனைதீனின் நானா அக்பர் அவசரமாகக் குடித்து முடித்து விட்டு பள்ளிக்குப் போய்விட்டார். அவ்வல் ஜமாஅத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று என்னை ஜுனைதீன் அவசரப் படுத்திய போதும் தேநீரை சுடச் சுட என்னால் குடிக்க முடியவில்லை. 

ஆற்றிக் குடித்து முடிவதற்கிடையில் இகாமத் சொல்லி தொழத் தொடக்கியும் விட்டார்கள். அவசரமாக நானும் ஜுனைதீனும் எழுந்து பள்ளியை நோக்கிப் போக தெருவுக்கு வந்ததுதான் தாமதம். பள்ளிக்குள் ஆயுதங்களால் சுடுகின்ற சத்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பயங்கரமாக கேட்கிறது.

“புலிகள் பள்ளிக்குள் புகுந்து சுடுகிறார்களாக்கும் அன்ஸார்....! இருட்டாகவும் இருக்கிறது. பள்ளிக்குள் போவோமா? இல்ல.... என்ன ஏதென்று பார்த்துவிட்டு போவோமா?” என்று ஜுனைதீன் எனது கைகளைப் பற்றிப் பிடித்தவாறு கேட்கிறார்.

சில நொடிகள் நாங்கள் இருவரும் தாமதிகின்றோம். என்ன செய்வதென்றே புரியாத பயம். வீதியெங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. துப்பாக்கி, குண்டு. கிரனைட் என்று ஆயுதங்கள் வெடிக்கும் பெரும் சத்தம் உயிரை உறைய வைக்கிறது. 

வீதியை விட்டு மேலும் அகல விடாமல் ஜுனைதீனின் வீட்டார் எங்கள் இருவரையும் தடுத்துவிடுகிறார்கள். என்றாலும் பள்ளிக்குள் போய் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற அவசர உணர்வில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு இருவரும் வேறு வீதி ஊடாக சென்று பள்ளியை அடைகிறோம்.

நாங்கள் போய்ச் சேரும் போது பள்ளிக்குள் கொலை வெறியாடிவிட்டு கோழைப் புலிகள் ஓடித் தப்பிவிட்டார்கள். பள்ளி வாயல் ஜனாஸாக்களாலும் இரத்த வெள்ளத்தாலும் நிரம்பி இருக்கிறது. அழு குரல்கள் ஓங்கிக் கேட்கின்றன.

நண்பர்கள் ஜவ்பர்கான், ஜுனைதீன் ஆகிய இருவரின் வாப்பா மாரும் உடல் முழுக்க துப்பாக்கி சன்னங்கள் துளைத்த நிலையில் ஷஹீதாகி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். எங்களோடு பள்ளி வாயல் படிக்கட்டில் பேசிக்கொண்டிருந்த அருமை நண்பர் ஆரிபும் ஷஹீதாகி இருக்கிறார். பரீனா ராத்தாவின் வீட்டில் எங்களோடு தேனீர் அருந்திவிட்டு அவ்வல் ஜமாஅத்தில் இணைந்து கொள்வதற்காக அவசரமாகச் சென்ற ஜுனைதீனின் நானா அக்பர் படு காயத்தோடு கண்களின் பகுதி சிதைவடைந்த நிலையில் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்.

" அன்ஸார்....அன்ஸார்....என்னத் தூக்கு....." என்று மரணத் தறுவாய் முணக்கம் ஒன்று எனக்குப் பின்னால் இருந்து கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். என்னுடைய மாமா. கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களோடு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை தூக்கி எடுத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வீட்டை நோக்கிச் ஓடுகிறேன். 

போகும் வழியெங்கும் இருள் சிவப்பு நிறத்தில் தெரிகிறது! 
03-08-2016

8 comments:

  1. இதேபோன்ற பாதகமான ஈனச்செயலைதான் இன்றும் செய்து கொன்று இருக்கின்றார்கள்
    மீள் குடியேற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த வன்னம் உள்ளார்கள், இதற்கு இனிமேல் இடம் அளிக்காதீர்கள், இந்த பாசிச புலிகளினால் உருவாக்கப்பட்டவர்களதான் இன்றைய இன வாதிகள் சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு செய்தால் படுகொலை இதே பாசிச புலிகள் முஸ்லிம்களுக்கு செய்தால் துன்பவியல்,

    ReplyDelete
  2. எப்பவோ நடந்தது இது. இதை விட மோசமாக தமிழர்களுக்கும் நடந்தது.

    புலி தலைவர்கள் உயிரோடு இருக்கும்போது பதியுதீன்-யை வன்னிக்கு அனுப்பி இதை கேட்டிருக்க வேண்டும். அப்போது கட்டிலுக்கு அடியில் இருந்து பதுங்கி இருந்து விட்டு இப்போது எங்களை கேட்பது அநியாயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆயுதங்களைகொண்டு நிராயுத பாணிகளை மிரட்டிகொண்டும் குண்டு வைத்து அப்பாவிகளை கொன்று குமித்த காட்டு மிராண்டிகளிடம் நியாயத்தை எப்படி எதிர்பார்த்திருக்கமுடியும்? அதற்கும் துப்பாக்கி வெட்டுகள் தான் அந்த பேய்களிடம் பதிலாக கிடைத்திருக்கும்.

      Delete
  3. Perpetarator if this heinous crime is mahindas buddy. SLFP vice president and still scot free.

    ReplyDelete
  4. இவ்வளவு முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த தமிழ் சமூகம் இன்னமும் முஸ்லிம்களை அனுதாப கண்கொண்டு பார்ப்பதாக தெரியவில்லை .ஒருபக்கம் நிர்வாக பயங்கர வாதம் இன்னொரு பக்கம் மீள் குடியேற்ற தடை .

    ReplyDelete
  5. அஜன் அந்தோனிராஜ்; எப்பவோ நடந்தது என்று 83 இனக்கலவரத்தையும் கைவிடுவார்களா?
    புலித்தலைவர் இல்லாத தனால் இவர்களின் ஆட்டம், புலித்தலைவர் இருக்கும்போது றிசாட்டும் அகதிதான்,

    ReplyDelete
  6. முஸ்லிம்களே சிந்தியுங்கள் வடகிழக்கு இணைந்தால் முஸ்லிம்களின் நிலையென்னவென்று. வடகிழக்கு இணைப்பை சிங்களவர்களோடு இணைந்தே எதிர்ப்போம்

    ReplyDelete
  7. ajan ........பயங்கரவாதி புலியிடம் ஏதும் மனித தன்மை இருக்குமா அவர்களிடம் போய் பேசுவதட்கு.....நீங்களும் அதில் ஒரு அங்கத்தவரா?....ஒவ்வொரு சமூகத்துக்கும் தீவிரவாதத்தால் அநியாயம்தான் வேறொன்றுமில்லை...எங்கள் சமூகத்துக்கு தீவிரவாதிகளால் ஏட்பட்ட கொடுமைகளை நாங்கள் பேசி அழுதாள் நீங்கள் ஏன் இவ்வாறு நாகரிகம் இல்லாமல் எழுத்திக்கிறீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.