August 08, 2016

முஸ்­லிம்­ கடை­களை, பகிஷ்­க­ரிக்­கு­ம் சிங்களவர்கள் - ஞானசாரரும் தீ பற்றவைக்க விரைகிறான்


குரு­நாகல், வாரி­ய­பொல  நிரு­பர்கள்  குருநாகல் மாவ­­ட்­டத்­தி­லுள்ள மும்மானை கிரா­மத்தில் வர்த்­தகம் செய்யும் முஸ்­லிம்­களின் கடை­களை பகிஷ்­க­ரிக்­கு­மாறும் அவற்றில் பொருட்­க­ளை கொள்­வ­னவு செய்யக் கூடாது எனவும் 'பொது தேபல சுர­­கிமே ஜனதா எக­மு­து­வ' எனும் அமைப்பு வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­து.

இதன் கார­ண­மாக கடந்த ஒரு மாத காலத்­திற்கும் மேலாக அப் பகு­தியில் உள்ள முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களின் வியா­பா­ரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்டப்­ப­டு­கி­றது.  

மும்­மானை முஸ்லிம் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்திற்குச் சொந்­த­மான காணியை அப் பிர­தே­சத்தின் பொதுக் காணி­யாக மாற்­றி­ய­­மைக்­கு­மாறு பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு குழு­வினர் கடந்த பல மாதங்­க­ளாக கோரிக்­கை­களை விடுத்து வரு­வ­தா­கவும் இதற்கு பாட­சாலை நிர்­வாகம் சம்­மதம் தெரி­விக்­கா­த­தை­ய­டுத்தே அப் பகு­தியில் அமைந்­துள்ள சுமார் 15க்கும் மேற்­பட்­ட முஸ்­லிம்­களின் வியா­பார நிலை­யங்­க­ளை பகிஷ்­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­கயை முன்­­னெ­டுத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­ற­து.

இது தொடர்பில் குரு­நா­கல், தம்­ப­தெ­னி­ய, மும்­மானை மஸ்­ஜிதுர் ரஹ்­மா­னியா ஜும்ஆ பள்­ளி­வா­ச­லினால் வெ ளியி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்றில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வ­து,  குரு­நாகல் மாவட்­டத்தின் கடு­கம்­பள தேர்தல் தொகு­தியில் கிரி­யுள்ள பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பகுதி­யில் மும்­மானை கிராமம் அமைந்­­துள்­ளது.

மும்­மா­னை கனிஷ்ட முஸ்லிம் வித்­தி­யா­லயம் 1962 ஆம் ஆண்டு இப் பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான மைய­வாடிக் காணியில் அமைக்­கப்­பட்­டது. 1970 ஆண்டு பிர­தே­ச தன­வந்தர் ஒருவர் இப் பாடசா­லைக்­கெ­ன ஒரு ஏக்கர் காணியை அன்­ப­ளிப்­பாக வழங்கினார். 1978 ஆம் ஆண்டு இக் காணியை அர­சு­டை­மை­யாக சுவீ­க­ரித்து பாட­சா­லைக்குச் சொந்­த­மாக வழங்­கு­வ­­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. எனினும் அக் காலப்­ப­கு­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் இது­வரை முழு­மை­யாக முற்றுப் பெற­வில்லை.

இருந்த போதிலும் கடந்த 40 வருடங்­க­ளுக்கும் மேலாக இக் காணி­ பாட­சாலை விளை­யாட்டு மைதா­ன­­மா­கவே பயன்ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இந்­நி­லை­யில்தான் மும்­மானை மற்றும் அதனை அண்­டி­யுள்ள கிராமங்­களைச் சேர்ந்த பெரும்­பான்மை இன குழு­­வொன்று பாட­சா­லைக்­கு­ரிய மைதா­ன காணியை பொது­க் காணி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை விடுத்து வரு­கி­றது. இதற்கு பாட­சாலை நிர்­வா­க­மும் பிர­தேச முஸ்­லிம்­க­ளும் மறுப்புத் தெரி­வித்­ததைத் தொடர்ந்தே அப் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத பிர­சா­ரங்­களை தூண்­டி­விட்­டுள்­ளதுடன் முஸ்­லிம்­க­ளின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குச் செல்லும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை வீடு தேடிச் சென்று அச்­சு­றுத்­­து­கின்­ற­னர்.

இது தொடர்பில் பாட­சாலை மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வா­க­ங்­கள் பிர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளிடம் முறை­யிட்­டுள்ள போதிலும் எவரும் இது விட­யத்தில் அக்­க­றை­யுடன் செயற்பட முன்­வ­ர­வில்லை என்­ப­­தையும் கவ­லை­யுடன் தெரி­வித்துக் கொள்­கிறோம்'' என குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­து.

இதே­வேளை இந்த விவ­காரம் தொடர்பில் மும்­மானை முஸ்லிம் கனிஷ்ட வித்தியா­ல­யத்தில் அதிபர் எம்.சுஹைப் விடிவெள்ளிக்கு கருத்து வெளியி­­டு­கை­யில், குறித்த மைதா­னக் காணி பாட­சா­லைக்குச் சொந்­த­மா­னது என்­ப­தற்­கான சகல ஆதா­ரங்­களும் ஆவ­ணங்­களும் எம்­மிடம் உண்டு.

இதனை அர­சு­டை­மை­யாக்கி பாட­சா­­லை­க்கு கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளை அமைச்சர் காமினி ஜய­விக்­ரம பெரேரா 1978 இல் மேற்­­கொண்டார்.

1979 இல் நில அளவையும் செய்­யப்­பட்­டது. இதற்­காக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய 9 கட்ட வேலை­களில் 7 வேலைகள் முடிந்­து­விட்­டன. 

இந் நிலை­யில்தான் தற்­போது சில சக்­திகள் பாட­சா­லைக்குச் சொந்­த­மான காணியை பொதுக்­ காணி­யாக மாற்­று­மாறு கோரி வரு­கின்­றன. இந்த விவ­கா­ரத்தை அர­சாங்க அதி­காரிகள் மூல­மாக சுமு­க­மாக தீர்ப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­­கொண்டு வரு­கிறோம் என்­றார்.

இதற்­கி­டையில் குறித்த பகு­திக்கு எதிர்­வரும் 10 ஆம் திகதி பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் வருகை தர­வுள்ளதாக மும்­மான பிர­தே­ச­மெங்கும் சுவ­ரொட்­டிகள் ஒட்டப்­பட்­டுள்­ளன.

பாட­சாலை மைதானக் காணி விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் நின்று செயற்­ப­டு­கின்ற, முஸ்­லிம்­களின் வியா­பார ஸ்த­லங்­களை பகிஷ்­க­ரிக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்ற 'பொது தேபல சுர­­கிமே ஜனதா எக­மு­து­வ' எனும் அமைப்பே இந்த சுவ­ரொட்­டி­களை ஒட்டி­யுள்­ள­து.ஞான­சார தேரர் குறித்த பகு­திக்கு வருகை தரு­வ­தா­னது அங்கு மேலும் பதற்ற நிலையைத் தோற்­று­விக்கும் என பிர­தேச முஸ்­லிம்கள் அச்சம் வெ ளியிட்­டுள்ளனர்.

இது தொடர்பில் பிர­தேச பொலிஸ் நிலை­யத்­திலும் முஸ்­லிம்கள் சார்பில் முறைப்­பாடு ஒன்றும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­­து.

5 கருத்துரைகள்:

Where are our political leaders,?

உரிய நேரத்தில் வருவார்கள்,ஆனால் வரமாட்டார்கள்!

அவனுகளுக்கு அது ஒன்றும் தெரியாது

Our leader varukirar varukirar

Mr. Mohammed, if you through a piece of bone toword politician then thay would come on the road.

Post a Comment