Header Ads



ஜனாதிபதி மைத்திரி, பின்வாங்கியது உண்மையே..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்திருப்பவர்களை பழிவாங்குவதற்காகவோ ஓரங்கட்டவோ எவரையும் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கவில்லை என சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கட்சி வழங்கிய பொறுப்புக்களை நிறைவேற்றாததாலேயே 13 பேர் நீக்கப்பட்டு தகுதியான புதியவர்கள் நியமிக்கப்பட்டதாகவும் கட்சியை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் கட்சியை பலப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடக மாநாடு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சியில் கட்சியை பலப்படுத்துவதை விட ஒரு குடும்பத்தை மட்டும் பலப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர். தனிப்பட்ட ரீதியான பிரபலமோ வேறு விடயங்களோ எமக்கு முக்கியமல்ல. கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பதே பிரதானமானது எனவும் தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரானவர்கள் அல்லர். அவர்கள் கடந்த காலத்தில் அவரின் வெற்றிக்காக பாடுபட்டவர்களாவர். சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் காலங்களின் கட்சிக்காக பாடுபட்டவர்களே இன்று அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சி யாப்புக்கு முரணாக செயற்படுபவர்களை கட்சியை விட்டும் நீக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய அவர் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியை விட்டும் அகற்ற வேண்டிய தேவை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

கட்சி ஒற்றுமைக்காக கடந்த காலத்தில் முன்னெடுக்க இருந்த பல முடிவுகளை செயற்படுத்தாமல் பின்வாங்கியதாக சுட்டிக்காட்டிய அவர், மே தினத்தின் போதும் சில நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்ட பின்னர் செயற்படுத்தாமல் விட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கட்சியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்சி அமைப்பாளர்கள், கட்சி நடவடிக்கைகளுடன் இணைந்திருக்க வேண்டும். கட்சி முடிவுகளை கீழ் மட்டம் வரை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு கட்சி பொறுப்புகளை நிறைவேற்ற தவறியவர்களே அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு ஜனாதிபதிகளினதும் காலத்தில் கட்சி நடவடிக்கைகளுக்கு உதவிய மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்கு தெரிந்தவர்களே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமைப்பாளர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். கட்சியை பலப்படுத்தவே சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

கட்சி மாநாட்டிற்கு அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் அழைப்பு வழங்கப்படும். இது தவிர ஐ.தே.க. மற்றும் ஐ.ம.சு.மு. கூட்டு கட்சிகளுக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படும்.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்கள் தமது பொறுப்புகளை நிறைவேற்றா விட்டால் அவர்களையும் நீக்க வேண்டி வரும்.

தற்பொழுது அமைப்பாளர் பதவிகளில் இருந்த நீக்கப்பட்டவர்களை சு.க.வில் இருந்து அகற்ற நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.

கடந்த காலத்தில் ஜனாதிபதி பல முடிவுகளை எடுத்து பின்னர் கட்சி ஒற்றுமைக்காக அவற்றை செயற்படுத்தாது பின்வாங்கினார். இதனால் கட்சி ஆதாரவாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் கவனிக்கப்பட்டது wஎன்றார்.

No comments

Powered by Blogger.