Header Ads



ஜம்மியத்துல் உலமாவுக்கும், முஸ்லிம் தலைமைகளுக்கும் சிங்கள ராவய பாராட்டு..!

-விடிவெள்ளி  ARA.Fareel-

முஸ்­லிம்கள் தமது சமயக் கட­மை­யான குர்­பானை நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக ஏனைய இன­மக்­களின் மனதைப் புண்­ப­டுத்­தா­த­வாறு நிறை­வேற்றிக் கொள்­வதில் சிங்­கள ராவ­ய­வுக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை.

முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக குர்ஆன் கட­மையை நிறை­வேற்ற நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருப்­பது பாராட்­டத்­தக்­கது என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையும் இது விட­யத்தில் தலை­யிட்டு நாட்டின் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக குர்பான் கடமை நிறை­வேற்­றப்­படும் என அறி­வித்­துள்­ள­மை­யையும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

முஸ்லிம் அமைச்­சர்­களும் உலமா சபையும் குர்பான் கடமை தொடர்பில் தெரி­வித்­துள்ள கருத்­து­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது சமயத் தலை­வர்­க­ளதும் அர­சியல் தலை­வர்­க­ளதும் கட­மை­யாகும்.

முஸ்­லிம்கள் தமது குர்பான் கட­மையை சட்­டங்­களை மீறி பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் மேற்­கொண்டால் அது ஏனைய இனத்­த­வரின் உணர்­வு­களைப் பாதிக்கும்.

இதனால் முறுகல் நிலை உரு­வா­கலாம் என்றே சிங்­கள ராவய சம்­பந்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி செயலாளர்களையும் ஆணையாளர்களையும் குர்பான் கடமையின் போது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தது என்றார். 

7 comments:

  1. என்ன ஓநாய் அழுகின்றது ஆடு நனைகின்றது என்று ?

    ReplyDelete
  2. சொல்பவரைப் பார்க்காமல் விமர்சிப்பதென்றால்......
    நல்ல கருத்து.
    நம் சமூகம் பிழை விடும் இடங்களை கண்டு பிடித்து அவற்றில் இருந்து மீண்டு விட்டால் நம் இருப்பு பலப்படும்

    ReplyDelete
  3. இதுவும் ஒரு வகையில் சரிதான் அவர்கள் தடுக்கவில்லை சட்டத்தை மதிக்கச் சொல்கின்றார்கள்,
    மாடுகளை அறுக்க வேனாம் என்று முழுமையாக கூறவில்லை, சொல்லப்போனால் அரபு நாடுகளிலும் சட்டமுலம்தான் அறுக்கப்படுகின்றது,

    ReplyDelete
  4. Let us keep our personal feelings to ourselves and correct our side.

    ReplyDelete
  5. குர்பான் கால்நடைகள் முறையாக பணம் கொடுத்து வாங்கப்பட்டு , உரிய முறையில் மனிதாபிமான முறையில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு , அனுமதிக்கப்பட்ட முறையில் அறுக்கப்படுவதை உறுதி செய்ய ஒரு தர கட்டுப்பாடு முறையை,ஹலால். ஆரம்பிக்கலாமே !

    ReplyDelete
  6. நாம் எமது விடயங்களை சரியாக அடுத்தவரைப் அசௌகரியப்படுத்தா வண்ணம் மேற்கொண்டால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். செய்திக்கான புகைப்படம் தவறு என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  7. Respect the Law of the Land take your cattle to the abotaire the official slaughter house and fulfill your kurbani.

    ReplyDelete

Powered by Blogger.