Header Ads



ஹிஜாப் அணிந்துசென்ற பெண், வேலையிலிருந்த நீக்கம்


அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், வெர்ஜினியா மாநிலத்தில் Fair Oaks Dental Care clinic என்ற மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் Viriginia Najaf Khan என்ற இஸ்லாமிய பெண் பணியில் அமர்த்தப்பட்டார்.

இவர் மருத்துவமனைக்கு முதல் இரண்டு நாட்கள் சாதாரண உடையில் வந்துள்ளார், அடுத்த நாள்  ஹிஜாப்  அணிந்து மருத்துவமனைக்கு வந்தார்.

இதைக் கண்ட மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சக் ஜு அவரை அழைத்து, மெதுவாக இவ்வாறு ஹிஜாப் அணிந்து மருத்துவமனைக்கு வரக்ககூடாது.

இங்கே பல மதத்தை சார்ந்த நோயாளிகள் வந்து செல்லும் இடம், எனவே இதை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் Khan ஹிஜாப் கழற்ற முடியாது என கூறியதால், பொறுமை இழந்த சக் ஜு அவரை உடனடியாக வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

இது குறித்து Khan கூறுகையில், ஹிஜாப் அணிந்து வந்து வேலையை செய்வது பெரிய தவறில்லை, இதன் காரணமாக தன்னை வேலையை விட்டு நீக்கியது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.