Header Ads



ஜேர்மனியில் புர்கா அணிய, நிரந்தரத் தடை - பாராளுமன்றத்தில் மசோதா தாக்குதல்

ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, ஆளும் கட்சியான கிறித்துவ ஜனநாயக கட்சி இன்று நாடாளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்கிறது.

‘பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் முழு உடலையும் மறைக்கும் புர்கா அணிய தடை விதிக்க’ இந்த மசோதா வலிறுத்தும்.

இன்று நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அந்நாட்டு உள்துறை அமைச்சரான Thomas de Maiziere தாக்கல் செய்கிறார்.

இந்த மசோதாவை அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பின்னர் இச்சட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்படும்.

பிரான்ஸ் நாட்டில் இச்சட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஜேர்மனியும் இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. ஜேர்மனியில் தீவிரவாதம் அதிகரிப்பதற்கும் முஸ்லிம் பெண்கள் புர்க்கா அணிவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் உண்மையில் ஜேர்மனியில் இஸ்லாம் வேகமாக வளர்வதுதான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக முதலில் புர்க்காவுக்கு தடை விதிக்கிறார்கள். பின்னர் படிப்படியாக ஒவ்வொன்றாக தடை செய்வார்கள். ஐரோப்பா கிறிஸ்தவக் கண்டம் இஸ்லாத்திற்கு எதிராக
    என்னதான் சூழ்ச்சி செய்தாலும் இன்சா அல்லாஹ் அந்நாடுகளில் இஸ்லாத்தை அல்லாஹ் வளர்த்தே தீருவான். யா அல்லாஹ் விரைவில் உனது மார்க்கத்தை பெரும்பாண்மை மக்கள் பின்பற்றும் மார்க்கமாக மாற்றுவாயாக.

    ReplyDelete
  2. Islam Ulagengum azivegamagap paravukinrazu enru koochchal
    poadupavargal ellorum engey ? Arivinmaiyaal koochchal
    podugiraargalaa allazu pilaippukkaga appadi seygiraargala ?

    ReplyDelete

Powered by Blogger.