Header Ads



முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்களா..?

-Azeez Nizardeen-

புலிகள் முஸ்லிம்களுக்கு எந்த தீங்கையும் இழைக்கவில்லை இஸ்ரேலும் இலங்கை இராணுவமும்தான் காத்தான்குடி படுகொலையை செய்தது என்று புலி ஆதரவாளர்கள் அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

புலிகள் தான் செய்த படுகொலைகளை எப்போது ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்?

இஸ்ரேல் வந்துதான் முஸ்லிம் தமிழ் உறவை சீர்குலைத்ததா?

வடமண்ணிலிருந்து வேரோடு முஸ்லிம்களை பிடுங்கி எறிந்ததும் இஸ்ரேலிய மொசாத் அமைப்பா?

அப்படியென்றால் மொசாட் அமைப்பின் ஏஜன்டாக புலிகள் இருந்திருக்கின்றார்கள்.

விகடர் ஒஸ்ரோக்கியின் "By the Way of Deception" நூலில் இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இஸ்ரேல் ஒரே இடத்தில் பயிற்சியளித்ததாக கூறியிருக்கிறார். புலிகளும், இலங்கை இராணுவமும் இஸ்ரேலின் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள்.

இது புலிகளுடனான இஸ்ரேலின் உறவையே காட்டுகிறது. அன்றும் என்றும் புலிகள் வெளிநாட்டு சக்திகளின் ஏஜன்ட்களாகவே இருந்திருக்கின்றார்கள்.

எனவே இஸ்ரேல் செய்திருந்தாலும் புலிகள் செய்திருந்தாலும் முஸ்லிம்களைப் பொறுத்த வரை இரண்டும் ஒன்றுதான். இரண்டு அணியினரின் கைகளிலும் படிந்திருப்பது இரத்தம்தான்.

2

புலி ஆதரவாளர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டுதான் முஸ்லிம்கள் காட்டிக்கொடுத்தார்கள் என்பது.

கருணாவும், பிள்ளையானும் எப்போது முஸ்லிமானார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

2005ம் ஆண்டு மஹிந்தவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வன்னி மக்களின் வாக்குகளுக்கு தடை விதித்த அந்த 'முஸ்லிமை' நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சுனாமி வீடமைப்புத் திட்டம் ஒன்றை அமைப்பதாகக் கூறி பசில் ராஜபக்ஸவிடமிருந்து பல மில்லியன் ரூபாய்களை இலஞ்சமாக பெற்று மஹிந்தவை ஜனாதிபதியாக்கிய அந்த ' முஸ்லிமை' இன்னும் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

3

சிங்களப் பெரும்பான்மை தமிழினத்தை நசுக்கினால் அது அடக்குமுறை.
வடக்கு கிழக்கில் உள்ள சிறுபான்மை சமூகமான முஸ்லிம் இனத்தை புலிகள் நசுக்கினால் இது விடுதலைப் போராட்டமா?
புலிகளின் அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் இனம் செயற்பட்டால் அது காட்டிக்கொடுப்பா?
சிங்கள அதிகார வர்க்கம் தமிழினத்தை நசுக்கும் போது தமிழ் சமூகம் காட்டிய எதிர்வினையை முஸ்லிம் இனம் அது நசுக்கப்படும் போது காட்டக் கூடாதா?
சிங்கள ஆதிக்கச் சக்திகள் தமிழர்களுக்கு இழைத்த அநீதியை புலிகள் அதே வடிவில் முஸ்லிம்களுக்கு இழைத்தார்கள்.
அடக்கு முறைக்கு எதிராக தமிழினம் போராடியது விடுதலைப் போராட்டமானது. வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் அடக்குமுறைக்கு எதிராக போராடியது காட்டிக் கொடுப்பாகிறது.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்வதில் உள்ள தயக்கத்தின் பின்னால் இனவாதம் ஒளிந்திருக்கிறது.
இந்த விடயத்தில் சிங்கள ஆதிக்க சக்திகளுக்கும், தமிழ் ஆதிக்க சக்திகளுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை.

-Ashroff Shihabdeen-

இதை நானும் அவதானித்தேன் நிஸார்தீன். காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலைகளை நினைவுகூர்வதானது சிலருக்கு மனதுக்குள் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இது மட்டுமல்ல, இந்தப் படுகொலைகள் நடந்து ஒரு வாரத்தில் ஏறாவூரில் 140 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அது பெரிதாகப் பேசப்படுவதில்லை. இதையெல்லாம் திசை திருப்பிப் பேச ஆரம்பிப்பவர்கள் யாரெனில் கொழும்பில் பத்திரமாக இருந்து கொண்டு “பெடியள் அடிப்பினம்“ என்று சொன்ன பரம்பரையின் விழுதுகள். இந்தப் படுகொலை விசேடமாகப் பேசப்படுவதற்குக் காரணம் பள்ளியில் தொழும் போது கேவலமாகக் கொலை செய்தார்கள் என்பதுதான். இந்த அவமானத்தை ஏற்றுக் கொள்ள அவர்களது மனது மறுக்கிறது. வேறு கதைகள் புனைய ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கொலைகளை மட்டுமல்ல எந்தக் கொலைகளும் கண்டிக்கத் தக்கதே. இதைக் கொண்டு யாரும் ஒட்டுமொத்தத் தமிழர்களை குற்றவாளிகளாகப் பார்க்கவில்லை. இப்படியொரு கேவலம் தமிழ் விடுதலையின் பெயரால் பள்ளிவாசலில் நடந்தது என்பது மட்டுமே இது வருடாவருடம் நினைவுபடுத்தப்படுவதற்கான காரணமாக இருக்கிறது!

9 comments:

  1. புலி காட்டுமிராண்டி கூட்டமும் அதன் அடிமைகளும் என்று செய்த தவறை உணர்ந்துள்ளனர்? உலகில் இவர்களை போல முட்டாள்களை காண்பது அரிது. 7 வருடங்களுக்கு முன் தலை சிதறி தான் செய்த பாவத்திற்கு எல்லாம் பரிகாரமாக ஒரு நாயை போல செத்த பிரபாகரனை கூட இவர்கள் இன்னும் உயிரோடு தான் இருக்கான் என்று தம்பட்டம் தானே அடித்துக்கொண்டுள்ளனர். இப்படி ஒரு தீவிரவாத சிந்தனைக்கு அடிமைப்பட்ட கூட்டம் உலகறிய செத்து மடிந்த ஒரு தீவிரவாதியின் இறப்பையே ஏற்க மறுக்கும் போது அவனால் மேற்கொள்ளபட்ட அக்கிரமங்களை எப்படி ஏற்பார்கள்?

    ReplyDelete
  2. வடக்கும் கிழக்கும் இணையும் சமஷ்டியில் முஸ்லிம்களை அடக்கியாளலாம் என்று கடைசிவரை கனவுமட்டும் காணுங்கள் தமிழ் தீவிரவாதிகளே

    ReplyDelete
  3. 1990ம் ஆண்டு சம்பவங்களின் பின்னணி முழுமையாக தெரியாது. எனக்கு சிறு வயது அப்போது.

    ஆணால் தற்போது முஸ்ஸிம்கள் தமிழர்களின் உரிமை போராட்டங்களை காட்டிக்கொடுக்க முயற்சிப்பது உண்மை.

    1. ஜெனீவாவில் தமிழர் சார்பு தீர்மானங்களை தோக்கடிக்க முஸ்ஸிம் நாடுகளின் ஆதரவுகளை ராஜபக்‌ஷக்கு பெற்று கொடுத்து முயற்சி செய்தார்கள்.
    2. ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்து, ராஐபக்‌ஷக்கு ஆதரவாக UN/USA/UK க்கு எதிராக கொழும்பில் ஊர்வலங்கள் செய்தார்கள்.
    3. வடகிழக்கு இணைப்பை எதிர்க்கிறார்கள்.
    4. வடகிழக்கில் இராணுவ இருப்பை ஆதரிக்கறார்கள்
    5. வட முஸ்ஸிம் குடியேற்றங்களில் CM உடன் இணைந்து போகாமல் NPC அரசில் தலையிடுகிறார்கள். CM யை அவதூறு செய்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jenivavil nadanthathu thamilarkaanathalla puli payangaravaathigalai nallavargalaaga kaatta muyatchiththathu.

      Delete
  4. Ajan Antonyraj

    இப்டி தான் 1990 ஆம் ஆண்டுகளிலும் உங்களுக்கு சார்பான விடயங்களை மட்டும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்திவிட்டு அவர்கள் மறுக்க அதை துரோகமாக சித்தரிக்கின்றீர் என்பதை இன்று கண்கூடாக காண்கின்றோம்.

    வட கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களுக்கான நன்மை என்ன?

    இன்று அதிகாரம் இல்லாமலே விக்னேஸ்வரன் போன்ற கடும்போக்குவாதிகள் இத்தனை ஆட்டம் போடும்போது நாளை கிழக்கு முஸ்லிம்களும் விக்னேஸ்வரன் போன்றவர்களின் ஆளுகைக்குட்படும்போது முஸ்லிம்களின் நிலை என்ன? ஏற்கனவே உங்கள் அநீதிகளை வடகிழக்கு இணைப்பில் சந்தித்த சமுதாயம் நாங்கள்.

    தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடக்கில் சிங்கள ஆதிக்கத்தை எதிர்க்கும் நீங்கள் கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் (சிங்கள + முஸ்லீம் ) சமுதாயங்களை உங்கள் ஆளுகைக்குட்படுத்த வேண்டும் என்பதின் நியாயம் என்ன?

    நாம் என்றுமே பிரிவினைவாதத்தை ஆதரிக்காமல் இலங்கையர் என்று வாழும் போது இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கூட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்பதின் நியாயம் என்ன? நாம் இலங்கையர் எனும் போது நாம் இலங்கைக்கு விசுவாசமாக இல்லாமல் கனவு ஈழ தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது பக்கா முட்டாள் தனம்.

    நீங்கள் தனியாக பிரிந்து போக ஆசைப்படும் போது நாம் இலங்கையோடு சேர்ந்து வாழ ஆசைப்பட கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன அறுகதையுண்டு?

    கேவலம் ஒரு கரையோர மாவட்டத்தையே கொடுக்க வயிற்றெரிச்சலில் மறுக்கும் நீங்கள் எம்மிடம் கிழக்கை எந்த முகத்தை கொண்டு கேட்பீர்கள்? வடக்கொடு கிழக்கு இணைய வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டியது கிழக்கிலங்கை மக்கள். அங்கே ஒரு சர்வஜன வாக்குப்பதிவு நடத்தப்பட்ட இந்த பிரச்சினைக்கு ஒரு மிக பெரிய வரலாற்று முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

    எனவே நிகழ்காலத்தில் கூட நீங்கள் செய்துகொண்டிருக்கும் இனவெறிவாதத்தை விட்டு விட்டு அடுத்த மக்களோடு ஒன்றி வாழ பழகிக்கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Realy super bro, wikneswaran oru arasiyalukku layakku illatha aal athu maddumalla ina thuwesam athiham irukku

      Delete
  5. ithai kathaika thakuthi attavargal ilankai vaal LTTE Tamilargal

    ReplyDelete
  6. summa engalai theevira vaathi enru ulagame solluthu naangal unmaiyaaga theevira vaathiyaanaal ilangai alla ulagame thaangaathu ippothum naangal sollalum kallalum sandai seihinrom ayuthathaal sandai seithaal ?????

    ReplyDelete

Powered by Blogger.