Header Ads



நாட்டில் அல்­கைதா, ஐ.எஸ்., தலிபான் இல்லை - என்­றாலும் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இருக்­கின்­றன - சந்­தி­ரிக்கா

2014 ஆம் ஆண்டு அளுத்­க­மவில் இடம்­பெற்ற கல­வரம் தொடர்­பாக புத்­தி­ஜீ­விகள் கலந்­து­கொண்ட கலந்­து­ரை­யாடல் வெள்­ளிக்­கி­ழமை சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தில் நடை­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க கூறு­கையில்,

அளுத்­கம சம்­பவம் போன்று நாட்டில் பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இந்தச் சம்­ப­வங்­க­ளின்­போது அப்­போது இருந்த அர­சாங்­கங்கள் அதனை கட்­டுப்­ப­டுத்­தாமல் அதற்கு பின்­ன­ணியில் இருந்து செயல்­பட்­டுள்­ளன.  பொலி­ஸாரும் பக்­கச்­சார்­பா­கவே நடந்­து­கொண்­டுள்­ளனர்.

ஆனால் நாட்டில் இருந்த அர­சாங்­கங்கள் தோல்வி கண்ட இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளாக 83 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அளுத்­த­கம சம்­ப­வங்­களை குறிப்­பி­டலாம்.  இந்த இரண்டு சம்­ப­வங்­க­ளின்­போதும் அன்று இருந்த ஆட்­சி­யா­ளர்கள் கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­காமல் பின்னால் இருந்து செயற்­பட்­டுள்­ளனர்.

மேலும் எந்த இனத்தை சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் நாட்டு பிர­சை­களை பாது­காப்­பது அர­சாங்­கத்தின் கடமை. ஆனால் மற்றும் 2014 சம்­ப­வங்­களில் அர­சாங்கம் தோல்­வி­கண்­டுள்­ளது. அத்­துடன் 2014/ 15 காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்­களின் பள்­ள­வா­சல்கள் மற்றும் கடைகள் பாரி­ய­ளவில் சேதத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டமை சக­லரும் அறிந்த விடயம். ஆனால் இந்தச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாமல் இருந்­தது.

அதே­போன்று எனது தந்­தையின் ஆட்­சிக்­கா­லத்தில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக சம்­பவங்கள் நடந்­த­போது அதனை 3 தினங்­களில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்தார்.

எனது ஆட்­சி­யின்­போதும் கிறிஸ்­தவ ஆல­யங்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அதனை நாங்கள் பாரிய சம்­ப­வங்­க­ளாக மாறாமல் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்தோம். இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது அர­சியல் வாதிகள் தங்கள் அர­சியல் வட்­டத்­துக்குள் இருந்து வெளி­யேறி மக்­களை பாது­காக்க முன்­வ­ர­வேண்டும்.

மேலும் நாட்டில் அல்­கைதா, ஐ.எஸ்., தலிபான் போன்ற அமைப்­புக்கள் இல்லை. என்­றாலும் சிறு­சிறு அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இருக்­கின்­றன. அது சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இனங்­க­ளிலும் இருக்­கின்­றன. இலங்­கையில் மாத்­திரம் அல்ல அனைத்து நாடு­க­ளிலும் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் இருக்­கின்­றன. அத்­துடன் 1957 ஆம் ஆண்­டுக்கு பின்­னரே அடிப்­ப­டை­வா­திகள் நாட்டில் தோன்­றினர். அதற்கு அர­சாங்­கங்­களும் பின்­ன­ணியில் இருந்­துள்­ளன.

-விடிவெள்ளி எம்.ஆர்.எம்.வஸீம் -

3 comments:

  1. அம்மையாரின் கணிப்பின்படி இலங்கையில் முஸ்லிம்கள் 1957ம் ஆண்டின் பின்பேயே இஸ்லாமிய அடிப்படையில் வாழ ஆரம்பித்துள்ளனர்.

    அதற்கு அரசாங்கங்களும் பின்னணியில் இருந்துள்ளது நன்றிக்குரிய விடயம்!

    ReplyDelete
  2. 2001 மாவனல்ல கலவரம் யாருடைய ஆட்சியல் நடந்தது? ஆட்சி அதிகாரம் இல்லாத போது தான் சிலருக்கு நல்லது கெட்டது விளங்குகின்றது

    ReplyDelete

Powered by Blogger.