Header Ads



பக்டீரியாக்கள் பற்றி, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை

-குங்குமம் டாக்டர்-

முத்தம் இடும் போது ஒரு கோடி முதல் 100 கோடி வரையிலான பாக்டீரியாக்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எடை மட்டுமே ஏறத்தாழ 1.8 கிலோ!

கழிப்பறையில் இருப்பதை விட 400 மடங்கு பாக்டீரியாக்கள் நமது அலுவலக மேஜையில் இருக்கின்றன!

டாய்லெட் கைப்பிடிகளில் உள்ளதை விடவும் 18 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் நமது மொபைல் போனிலேயே  உள்ளன.

உலக மக்கள்தொகையை விட அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் நமது வாயிலேயே உள்ளன.

சுத்தமான வாயாக இருப்பினும், ஒவ்வொரு பல்லிலும் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கின்றன.

நமது தொப்புளில் 1,458 புதிய வகை பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நமது வியர்வை வாசனை அற்றதே. சருமத்தில் உள்ள பாக்டீரியா வியர்வையோடு கலக்கும்போதுதான் வாசனை உருவாகிறது.

கரன்சி நோட்டுகளில் 3 ஆயிரம் வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

பாக்டீரியாக்களை பயன்படுத்தியே பெரும்பாலான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

No comments

Powered by Blogger.