Header Ads



சிரந்தி நுழைந்தமையால் மூடப்பட்ட கோயில், மரண அச்சுறுத்தல் விடுத்த மஹிந்த

ஊடகவியலாளர் லசந்தவின் கொலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தவே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று அத்தனகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் கோவில் ஒன்றுக்குள் மஹிந்தவின் மனைவி சிரந்தி உள்நுழைந்தமையால் குறித்த கோவிலானது பல வாரங்கள் மூடப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்தத் தகவலை தனது பத்திரிகையில் வெளியிட்ட லசந்தவிற்கு மஹிந்த தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் , இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு சில வாரங்களுக்கு பிறகு லசந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரண அச்சுறுத்தல் தொடர்பில் லசந்த தன்னிடம் தெரிவித்ததாகவும், சந்திரிக்கா தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. It's an imperative accusation of Chandrika. Therefore bring up both erstwhile presidents for introspection regarding Lasantha's assassination.

    ReplyDelete

Powered by Blogger.