Header Ads



சோம்பேறிகள் அதிபுத்திசாலிகளாக இருக்கலாம் - புதிய ஆய்வு முடிவு

அமெரிக்காவின் புளோரிடா கல்ப் கோஸ்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் அதிக சுறுசுறுப்பான 30 மாணவர்களையும், அதிகம் சிந்தனை செய்யும் 30 மாணவர்களையும் தேர்வு செய்து, ஒரு வாரத்திற்கு அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

ஒருவாரத்திற்கு பிறகு, ஆய்வில் கிடைத்த தகவல்களை ஆராய்ந்த போது சிந்தனை செய்யும் பிரிவை சேர்ந்த 30 பேரின் ஒட்டுமொத்த உடல் அசைவுகள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. அதிகம் சிந்தனை செய்யக்கூடியவர்கள் விரைவாக சலிப்படைந்து விடுகிறார்கள். ஆனால், இவர்கள்தான் அதிக நுண்ணறிவு திறன் கொண்டவர்கள் என்றும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அதேசமயம் சுறுசுறுப்பானவர்கள், சிந்தனை செய்வதில் இருந்து தப்பிப்பதற்காக தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நுண்ணறிவு திறன் குறைவு என்பது ஆய்வாளர்களின் முடிவு. 

இனி உங்களை யாராவது சோம்பேறி என்று திட்டினால், கோபப்படாதீர்கள். உண்மையில் அவர் உங்களை புத்திசாலி என்றுதான் பாராட்டுகிறார்.

No comments

Powered by Blogger.