August 29, 2016

உம்மத்தே, மறந்து விடாதீர்கள்..!

-Rizam Al Hakeem-

BIஸிமித் என்ற புனைபெயரில் எழுதுகின்ற பிரபலமான ஒரு எழுத்தாளரால் துருக்கிமொழியில் உம்மத்தை விளித்து எழுதப்பட்ட ஒரு கடிதத்தின், (தழுவி எழுதப்பட்ட) தமிழ் வடிவம் இது.

உம்மத்தே! மறந்து விடாதீர்கள்!

இன்று உலகில் அநியாயக்கார மேற்கின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது எனில் அதற்கான முழுமுதற் காரணம் இந்த முஸ்லிம் உம்மத்தாகும்.
மேற்குலகின் யதார்த்தமான நிலையை அவதானியுங்கள், இப்படிப்பட்ட பலவீனமான ஒரு கூட்டமா எம்மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கின்றது என்பதை எண்ணி வெட்கித் தலைகுனிவீர்கள்.
பிறப்பு வீதத்தை விட இறப்பு வீதம் அதிகமான, அதாவது இளைஞர்களை விட வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகமான, வயது முதிர்ந்த நிலையில் தள்ளாடுகின்ற ஒரு சமூகம் அந்த மேற்கு சமூகம்.
அந்த வயோதிபர்களுள் அதிகமானவர்கள், அன்பையும் ஆதரவையும் இழந்தவர்களாக விரக்தியின் எல்லையில் இருக்கின்றனர். தம் முகத்தைப் பார்த்துப் புன்னகைக்கவோ, தமது உளக்குமுறல்களை வெளிப்படுத்தவோ யாரும் இல்லாத அவல நிலை அவர்களுக்கு. செய்த அக்கிரமங்களின் தண்டணையை உலகிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் போலும்.
அவர்களது இளைஞர்களோ, மது, மாது, களியாட்டங்கள் என்று இழிந்த இச்சைகளால் கட்டுண்டு, மானசீக ரீதியில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றனர். அந்த இளைஞர்கள் தமது பெற்றோராகிய வயோதிபர்களைத் தம்மீதுள்ள மிகப்பெரிய சுமையாகக் கருதுகின்றனர். அவர்கள் மிகவுமே வெறுத்தொதுக்குவது மரணத்தையாகும். அதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே விரும்புவதில்லை. அங்கு மரணச்சடங்குகளில் இளைஞர்களின் சமூகமளிப்பு மிகவும் அரிதாகவே காணப்படும். ஏனெனில், மரணத்தை நினைத்தால் தாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அந்த அனைத்துத் தற்காலிக இன்பங்களும் அவர்களுக்கு கொடிய வேதனைகளாக மாறி விடுகின்றன. மரணம் பற்றிய ஏதாவது ஒரு செய்தி காதில் விழுந்தாலே அன்றைய தினத்தை அவர்கள் அபசகுணமாகப் பார்க்கின்றார்கள். அவர்களது உடம்புகள் வேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கலாம். ஆனால் அவர்களது உள்ளங்களோ உக்கிப்போய் ஊனமாகிக் கிடக்கின்றன. அவர்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் விரும்புவதில்லை. ஆம், மனம்போன போக்கில் இச்சைகளின் பின்னால் அலைந்து திரிகின்ற காலத்தில், இருக்கின்ற பெற்றோரைக் கவனிக்கவே அவர்களுக்கு நேரமில்லை, பிள்ளைகளைப் பெற்றுப் பராமரிக்கவா நேரம் இருக்கின்றது. அவர்களது வைத்தியசாலைகளில் “பிள்ளையைப் பெற்று இங்கே விட்டுச் செல்லுங்கள், அரசாங்கம் பராமரிக்கும்” என்று அறிவிப்புப் பதாகைகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் பெண்மையை இழந்த அவர்களுடைய பெண்கள் தனது பிள்ளையைப் பத்து மாதம் வயிற்றில் சுமப்பதை அல்லவா சுமையாகக் கருதுகின்றார்கள்.
போதாக்குறைக்கு தமது கிறிஸ்தவ மார்க்கத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நாத்திகத்திற்குள் தஞ்சமடைந்த அவர்களது ஆன்மாக்கள் எந்தவிதப் பிடிமானமும் அற்றுப் போய் அலைக்கழிந்துகொண்டிருக்கின்றன.
ஹொலிவூட் படங்கள் மூலமாகவும், ரெஸ்லின் போட்டிகள் மூலமாகவும் அவர்கள் உங்களுக்குக் காட்ட விரும்பும் அவர்களது பொய்யான வீரதீரங்களைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள். தம்மிடம் மருந்துக்கும் இல்லாது போன வீரத்தை நடிப்பில் காட்டி மானசீகமாக எங்களை மிகைத்துவிட நாடுகின்றார்கள். அந்தப் படங்களை ‘அப்பப்பா….ஹ்’ ‘இப்படியுமா?’ என்று வாயை இழித்துக்கொண்டு பார்க்கும் கேனயர்களாக நீங்களும் ஆகி விடாதீர்கள். அதனால் உங்களது உள்ளங்கள் அவர்கள் மீது மோகம் கொண்டு விடலாம்.
அவர்கள் திரைக்கு முன்னால் மேக்கப்புக்குள் மறைந்துகொண்டு விடும் புன்னகைகளை சந்தோஷத்தின் வெளிப்பாடு என்று எடை போட்டு விடாதீர்கள். மேக்கப்புக்குள் மறைந்திருக்கும் அவர்களின் உண்மையான முகங்களில் கவலையின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன.
விஞ்ஞானத்திலும் தொழிநுட்பத்திலும் அவர்கள் முன்னேறிவிட்டார்கள் என்று மலைத்துப்போய் விடாதீர்கள். இதற்காகப் பங்களிப்புச் செய்பவர்களின் எண்ணிக்கை அவர்களது மொத்த சனத்தொகையின் ஒரு வீதத்தையும் தாண்டாது. அதிலும் அதிகமானவர்கள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் இருந்து பணத்துக்கு வாங்கப்பட்ட மூலைகளாகும்.
இப்போது இப்படிப்பட்ட பலவீனமான நொந்து நொடிந்து போன ஒரு சமூகம் எப்படித்தான் உலகத்தைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது என்பதைச் சிந்தியுங்கள். ஒரே காரணம் முஸ்லிம்கள் ஒருவரோடொருவர் சண்டை பிடித்துக்கொண்டிருப்பது தான். சிந்தியுங்கள்! மரணத்திற்கு அஞ்சாத, ஷஹாதத்தை செங்கம்பலம் போட்டு வரவேற்கின்ற ஒரு சமூகம், உலகத்தில் முஸ்லிம்களைத் தவிர வேறு யார் தான் இருக்கின்றார்கள்? ஈமானுள்ள முஸ்லிம் ஏற்கனவே ஷஹாதத்தை நேசிக்கின்றவனாக இருக்கின்றான். பாவியான முஸ்லிமும் கூட தான் ஷஹீதாகினால் எனது பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விடும் என்று ஷஹாதத்தை நேசிக்கின்றவனாக இருக்கின்றான். ஏனெனில் முஸ்லிம்களைத் தவிர யாருமே மரணத்திற்குப் பின்னர் ஒரு நீண்ட நித்திய வாழ்க்கை இருக்கின்றது, அது தான் உண்மையான வாழ்க்கை என்பதை நம்புவதில்லை. என்னதான் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்கும் மிகப்பெரிய பலம் இதுதான். இந்தப் பலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்கக் கூடிய எந்தவொரு சக்தியும் உலகத்தில் இல்லை. முஸ்லிம்களைப் பிணைக்கக் கூடிய மிகப்பெரிய பலமும் இது தான். ஆனால் துரதிஷ்டம் என்னவெனில் முஸ்லிம்கள் இந்த ஈமானிய வலிமையை தமது சகோதரர்களின் இரத்தத்தை ஓட்டுவதற்காக விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதைத் தான் மேற்கும் விரும்புகின்றது. இதற்காகத் தான் இந்த மேற்கு இவ்வளவு சதிக்கு மேல் சதிகளைத் தீட்டுகின்றது; முஸ்லிகளை ஒன்றுசேரவிடாதிருப்பதற்காக முடியுமான அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றது. அதாவது நாம் இங்கு எமது சகோதர இரத்தத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் காலமெல்லாம், தனது சகோதரனைக் காபிர் என்று கூறி அவர்களைக் கொன்றொழிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் மேற்குலகம் அங்கு நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றது. ஏனெனில், இரண்டு பெரும் வீரர்கள் தமக்குள் மோதிக்கொள்ளும் போது ஒரு சிறுபிள்ளைக்குக் கூட அவர்களை வீழ்த்தி விட முடியுமாக இருக்கும். இந்த உண்மையை இப்போதிருக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ளப் போவதுமில்லை, அவர்களால் ஒரு மாற்றம் வரப்போவதுமில்லை. ஏனெனில் மேற்கு செய்துகொண்டிருக்கும் இந்த மகத்தான சூழ்ச்சிகளின் முன்னனிக் கதாபாத்திரங்கள் அவர்கள் தான். ஆனால் எப்போதையும் விட அதிகமாக இந்த உண்மையை முஸ்லிம் உம்மத் இன்று நன்றாகவே விளங்கி வைத்திருக்கின்றது.
எனவே இந்த உம்மத் ஒன்றிணையப் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த நாளுக்காக இன்றிலிருந்தே தயாராகுங்கள்.
எங்களுக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் ஒருவரையொருவர் வெறுத்தொதுக்குவதற்கான காரணிகளாக அமைந்து விடாதிருக்கட்டும். ஏனெனில், இந்த உலகத்தை அழிவின் விளிம்பிலிருந்து பாதுகாப்பதற்கு, நாளை நானும் நீங்களும் ஓரணியில் நின்று எமது பொது எதிரிக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதாவது நாளை நாம் கட்டாயமாக ஓரணியில்சேர இருப்பதால் இன்று ஒருவரையொருவர் வெறுத்தொதுக்குகின்ற விதமாக நடந்துகொள்ளாதிருப்போம் என்று சொல்ல வருகிறேன்.
நாளை ஒரு நாள் வரலாம், அந்த நாளில் துருக்கியுடன், சிரியர்களும், தாஇஷ் எல்லைக்குற்பட்ட மக்களும், ஈராக்கியர்களும் ஓரணியாகத் திரண்டு ஒரு பெறும் படையாக வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கலாம். அதே நாள், ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்ட ஒரு இஸ்லாமியப் படையும் மேற்கிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கலாம். தெற்கிலிருந்து சவூதியர்கள், யெமனியர்களையெல்லாம் உள்ளடக்கிய ஒரு படை அதே நோக்கத்திற்காகப் புறப்படலாம்.
அந்த நாளில் மேற்கின் நவீன தொழிநுட்பங்களும், நவீன இராணுவத் தளபாடங்களும், மரணிப்பதற்காகப் புறப்பட்ட இந்தப் படைக்கு முன்னால் சருகுகளாகி விடும். மரணத்தை வெறுக்கின்ற அந்த மன்மதர்களின் கரங்களில் அந்த ஆயுதங்கள் செல்லாக்காசுகளாகி விடும்.
உம்மத்தே அந்த நாளுக்காகத் தயாராகுங்கள்! எம்மிடம் இருக்கின்ற ஈமான் அனைத்துத் தடைகளையும் தாண்டுவதற்குப் போதுமானதாகும்.

4 கருத்துரைகள்:

முற்றிலும் உண்மை.
முஸ்லிம்கள் ஆடம்பரத்துக்கும் பெருமைக்கும் அடி பணிந்து செய்தானை பின்பற்றி மறுவுலக வாழ்வை எப்பாேது மறந்தார்ளாே அன்றிலிருந்து காபிர்களின் தண்டனைக்கும் காெடுமைகளுக்கும் இழக்காகி தவிக்கின்றனர். முஸ்லிம்களை நெறிப்படுத்த வேண்டிய சில உலமாக்களே பேராசை, பாெறாமைகளால் தங்களுக்குள் சகாேதரத்துவத்தை இழந்து அப்பாவி முஸ்லிம்களை பலிக்கடாவாக்கி முழு சமூகத்தையும் காட்டி காெடுக்கின்ற துர்ப்பாக்கியமான காலம் இது. May Allah protect our innocent brothers and sisters in islam not be guided by unqualified Ulamas - Satans.

மாஷா அல்லாஹ். ஈமானிய வரிகள்.மரணத்தை செங்கம்பளமிட்டு வரவேற்கின்ற கூட்டம் முஸ்லிம்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள். அதைத்தான் அன்று காலித் இப்னு வலீத் (ரலி) எதிர் தரப்பு தளபதிக்கு எழுதிய கடிதத்தில் “ நீங்கள் மதுவை எவ்வாறு விரும்புகிறீர்களோ அதே போன்று மரணத்தை அதிகம் விரும்புகின்ற ஒரு கூட்டம் என்னிடம் இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

Post a Comment