August 31, 2016

மாலைதீவில் தீவு கொள்வனவு - இலங்கை அரசியல்வாதிக்கும் தொடர்பு

மாலைதீவில் தனியார் நிறுவனம் ஒன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட தீவு ஒன்றின் கொடுக்கல் வாங்கல்களின் பின்னணியில் பிரபல அமைச்சர் ஒருவர் செயற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா அதிகம் பங்கு வகிக்கும் ஹேலிஸ் பீ.எல்.சீ (HAYLEYS PLC) நிறுவனத்தினால் மாலைத்தீவில் தீவு ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது.

இதற்கான கொள்வனவு இலங்கையின் பிரபல அமைச்சர் ஒருவரின் தலையீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹேல்ஸிம் பீ.எல்.சீ. நிறுவனத்திற்கு துணை நிறுவனமாக மாலைத்தீவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Luxury Resort (Pvt) Ltd நிறுவனத்தினால், குறித்த தீவு 23 மில்லியன் அமெரிக்க டொலரிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஹேல்ஸிம் நிறுவனத்தின் துணை நிறுவனமான Luxury Resort (Pvt) Ltd நிறுவனத்தினால் Kudarah என்ற தீவு ஒன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீவை கொள்வனவு செய்வதற்காக தம்மிக்க பெரேராவின் ஹேல்ஸிம் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் குறித்த அமைச்சருடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு குறித்த அமைச்சர் நெருக்கமான ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தீவில் 51 ஆடம்பர மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தீவு, Amaya Kudarah Maldives என மீண்டும் பெயரிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment