Header Ads



வசிம் தாஜூடின் கொலையில், இப்படியும் ஒரு பாரபட்சம்

கடந்த நான்கு ஆண்டுகளில் இடம்பெற்ற மூவாயிரம் மோசமான வாகன விபத்துச் சம்பவங்களில், வசிம் தாஜூடின் சம்பவம் குறித்து மட்டுமே மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசாரணை நடத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2012ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரையில் இவ்வாறான பாரிய 3000 வாகன விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

உயிர் ஆபத்து இடம்பெற்ற வாகன விபத்துக்களின் போது குறித்த வாகனம் மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் ஒருவரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், தாஜூடின் மரணமடைந்த வாகனம் தொடர்பில் நாரஹென்பிட்டி பொலிஸார் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினரை அழைத்து விசாரணை நடத்தவில்லை.

அதிக வேகமாக தாஜூடின் வாகனத்தை செலுத்தியதனால் வாகனம் மதிலில் மோதி தீப்பற்றிக் கொண்டு, இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

அதிக வேகமாக வாகனம் செலுத்தப்பட்டமை குறித்த பொலிஸார் தீர்மானிக்க முடியாது எனவும், மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் ஒருவரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் புலனாய்வுப்பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது கோரப்பட்டது.

விசாரணைகளை மூடி மறைக்கும் நோக்கில் போலியான முறையில் வாகன விபத்து இடம்பெற்றதாக வேண்டுமென்றே பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிக்கை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இவ்வாறு அறிக்கை தயாரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.