August 04, 2016

ரங்கா கைது செய்யப்படலாம்..?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகியோர் கைது செய்யப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி ஆவணம் தயார் செய்தமை, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியமை, அரச வளத்தை தவறாக பயன்படுத்தியமை, வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தியமை, நீதிமன்றத்தை அவமதித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன.

ஜே. ஸ்ரீ ரங்கா ஓட்டிச் சென்று, விபத்துக்கு உள்ளான வாகனத்தில் பயணித்த அவரது பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகஸ்தரின் தாய், பொலிஸ் திணைக்களத்தில் தாக்கல் செய்த மனு தொடர்பில் நடத்திய விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு 55 வயது வரை வழங்கப்பட வேண்டிய ஊதியம் வழங்கப்படாமை காரணமாக பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் சார்ஜன்ட்டுகளின் தர அடிப்படையில் இந்த மனுவை தாயார் பொலிஸ் திணைக்களத்தில் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை காப்பற்றி, செய்த தவறான செயலை பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் ஒன்றியம் கண்டித்துள்ளது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சட்ட ரீதியான உரிமைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

நடந்த உண்மை சம்பவம் குறித்த சாட்சியத்தை செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் அப்போது பணியாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், விசாரணையின் போது வழங்கியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கடும் மது போதையில் வீதியில் தடுமாறி நடந்து சென்றதாகவும், கிராம வாசிகளின் உதவியுடன் வாகனத்தின் இரும்பு தகடுகளை வெட்டி, விபத்துக்குள்ளான வாகனத்தில் முன் ஆசனத்தில் இறந்து கிடந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் உடலை மீட்ட விதம் குறித்தும் இவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அருகில் இந்த வாகன விபத்து நடந்தது.

ஜே. ஸ்ரீ ரங்கா வாகனத்தை ஓட்டிச் சென்றதற்கான போதுமான தெளிவான சாட்சியங்கள் இருந்தும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பாலசூரிய, பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன, செட்டிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு கடும் அழுத்தம் கொடுத்து, உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மதுபோதையில் பாதுகாப்பற்ற வகையில் வாகனத்தை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றத்திற்கு அறிக்கை கொடுக்க செய்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் இந்த செயல் காரணமாக, உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒழுக்கமின்றி நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவரை நம்பி வாழ்ந்த குடும்பத்திற்கு அவரது 55 வயது பூர்த்தியாகும் வரை செலுத்த வேண்டிய ஊதியத்தை பொலிஸ் திணைக்களம் செலுத்த மறுத்துள்ளது.

கீழ் மட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வந்த காரணத்தினால், உண்மையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால், அடுத்த கட்ட விசாரணைகளை உடனடியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றப்படும் சூழல் காணப்படுவதாகவும், விசாரணைகளை திணைக்களம் மேற்கொள்ளும் பட்சத்தில், மேற்கூறப்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 கருத்துரைகள்:

ஊடக தர்மத்தை கேலிக்கூத்தாக்கி கபட நாடகமாடி மற்றவரை சிண்டு முடிந்து நாரதர் வேலை பார்த்ததற்கு இந்த தண்டனையெல்லாம் ஆரம்பம்தான். இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்..!

Ranga unmaiyai pesinal silarukku pidikkathuu

Drunkards playing n vomitting havoc in media rampage ,real drama brought light on this media hooligan .

Sri Range used the "MINNAL" Talk show programme to propagate the worst deceptive media/TV campaign against the Sri Lanka Muslim community. Sri Ranga was a venomous snake under grass who cultivated hate against the Muslims among the Sinhala echelons during the Mahinda Rajapaksa regime and saw it that the political wedge between the Muslims and the Sinhala hierarchy was in place. Some of our cheap Muslim 3rd., level politicians aided and abetted Sri Range in these activities maybe knowingly or unknowingly, for publicity and Media popularity. There are similar political characters like Sri Range in the Muslim Community too. God AllMighty Allah will expose them soon and they to will be punished, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

ஆமாம் நீங்கள் சொல்வது சரி

Noor Nizam, I couldn't understand your English.

Unmaiyai oru naalum amukkamudiyathu

Salaams,
Dear Brother M.B.M. Mahir.
Can you explain what you could NOT understand please?
Noor Nizam.
Covener - The Muslim Voice".

Post a Comment