August 08, 2016

இறைவனுக்கு பிறகு, றவூப் ஹக்கீமுக்குத்தான் இருக்கிறது - மௌலவி ஜலால்தீன்

(அகமட் எஸ்.முகைதீன், ஹாசிப் யாஸீன்)

ஒலுவில் மக்களின் கடலரிப்பு பிரச்சினையை தீர்க்கின்ற அதிகாரமும் சக்தியும் இறைவனுக்கு அடுத்தபடியாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமுக்குத்தான் இருக்கிறது. உதிரிக் கட்சிகளின் பின்னால் ஒலுவில் மக்கள் செல்லவும் அவர்களின் வாக்குறுதிகளை நம்பவும் தயாரில்லை என ஒலுவில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஐ.எல்.ஜலால்தீன் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக கரையோரப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் துறைமுக அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருடன் (07) ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா விடுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம்.மாஹிர், ஏ.எல்.தவம், அட்டாலைச்சேனை முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.அன்சில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, ஒலுவில் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், ஒலுவில் பிரதேச புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்கள் சார்பாக ஒலுவில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஐ.எல்.ஜலால்தீன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஊருக்குள் ஒரு பிரச்சினை என்றால் எல்லாக் கட்சிக் காரர்களும் ஓடிவருவது வழமை. எந்தக் கட்சிக்காரர் வந்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் ஊர் மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறோம். எமது கடலரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்;வினைப் பெற்றுத்தர முஸ்லிம் காங்கிரஸால் மாத்திரமே முடியும்.

ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இப்பிராந்தியத்தில் இல்லாத கட்சிகள் வந்து கூட்டங்களைக் கூட்டுவதில் எங்களுக்கு ஐயப்பாடு உள்ளது. இது இருக்கின்ற உதிரி வாக்குகளை பெறுவதற்கான நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கின்றோம். அத்தோடு ஒலுவில் மக்களின் பிரச்சினையினை முன்வைத்து தங்களை தேசிய தலைமையாக காட்ட முனைகின்றனர். இந்த மாயை வலையில் சிக்குண்டு எமதூரில் சில எடுபிடிகள் ஊரைக் குளப்புகின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அனுசரணையோடு இருக்கின்ற மத்திய அரசினை கொண்டு வந்து இந்த மக்களின் பிரச்சினையை தீர்க்கின்ற அதிகாரம் இறைவனுக்கு பிறகு தலைவர் றவூப் ஹக்கீமுக்குத்தான் இருக்கிறது, வேறு யாரையும் நாங்கள் நம்பத் தயாரில்லை.

  கடலரிப்பும் அதனோடு ஏற்பட்டுள்ள விளைவுகளும், மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவால்களும் மிக விரைவில் தீர்க்கப்படவேண்டிய விடயங்களாகும். கடலரிப்பினை தடுப்பதற்காக பல கோடி ரூபா பெறுமதியான நான்கு தடயங்கள் போடப்பட்டது. இருந்தபோதிலும் அவ்வெல்லைகளைத் தாண்டி கடலரிப்பு இடம்பெற்றுள்ளது என்பது கவலையான விடயமாகும்.

 இப்பிரதேச மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், கரைவலை மீன் பிடியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமம் முழுக்க முழுக்க மீன் பிடியாளர்களை கொண்டுள்ள ஒரு கிராமமாகும். இதனால் இந்த மக்கள் தொழிலை இழந்து இருக்கின்றனர். இந்த கடலரிப்பினால் கடலோரம் காணப்பட்ட ஆறு முற்றாக இல்லாமல் போயுள்ளது. எனவே கடலரிப்பை தடுப்பதற்கான உபாயங்களை கையாள்கின்றபோது மீன்பிடி தொழிலை பாதிக்காத வகையில் தீர்வினை வழங்க வேண்டும் எனவும் மௌலவி ஜலால்தீன் தெரிவித்தார். 

5 கருத்துரைகள்:

அரசியல்வாதிகளின் காலடியில் உலமாக்கள் மண்டியிடுவது அவர்களை துதி பாடுவது போன்ற விடயங்கள் உலமாக்களுக்கு ஏட்புடையது அல்ல .மாறாக உலமாக்களின் காலடியில் அரசியல்வாதிகள் மண்டியிடும் நிலையை ஏட்படுத்துங்கள் .அம்பாறை முஸ்லீம் மக்களின் வாக்குகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹக்கீம் அவர்களுக்கு அந்த பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு உழைப்பது அவரின் கடமையல்லவா ?

குர் ஆன் நபி வழி அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற கொள்கையுடன் ஆரம்பீக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டுமே இல்லாத நிலையில் இஸ்லாமிய அடிப்படை கொள்கையில் இருந்தும் விலகிசெல்லும் மட்டத்திலான ஒரு ஷிர்க்குடன் சம்மந்தப்பட்ட பேச்சைதான் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய மௌலவியான ஜலால்தீன் என்று சொல்லக்கூடியஇஸ்லாமிய அடிப்படை அறிவு கூட கொஞ்சமுஇல்லாமல் தலைவரை திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹ்வுக்க அடுத்தபடியாக றவூப் ஹகீமை சுட்டிக்காட்டி இருக்கிறார் இவ்வாறு வார்தைப்பிரயோகம் செய்யப்படும் போது உண்மையான தலைவர் பெருமையோடுஏற்றுக் கொள்ளாமல் அவ்வாறு சொல்ல வேண்டாம் என்று தடுக்க வேண்டும் றசூலுல்லாஹ் அவ்வாறு தடுத்துள்ளார்கள்.அல்லாஹ்வுக்கு அடுத்தபடியாக யாரையும் ஏன் .ஜிப்ரியீல்,மீகாயீல்.நபிமார்கள் கடைசியான சகல சிறப்புகளும் பெற்ற நமது முஹம்மது(ஸல்)அவர்களை கூட குறிப்பிட முடியாது சகலரும் அல்லாஹ்வின் அடிமைகள்.இது தெரியாத இந்த கூமுட்டை ஜலில் எந்த மத்ரசாவில் ஓதி பட்டம் எடுத்த உலக்கை.இந்த உலக ஆசை பிடித்த கேடுகெட்ட ஜலிலைவிட சாதாரணபொது மக்களிடம்தாராளமாக ஈமான் இருக்கிறது உடனாடியாக ஜலால்தீன் குப்ரு பேச்சில் இருந்து பாபஸ் பெற்று தௌபா செய்து இஸ்லாத்தை செரியான முறையில் பின்பற்றுவேன் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும், ,

முகமட் ஐவாமீல்: 8 August 2016 at 03:32
அரசியல்வாதிகளின் காலடியில் உலமாக்கள் மண்டியிடுவது அவர்களை துதி பாடுவது போன்ற விடயங்கள் உலமாக்களுக்கு ஏட்புடையது அல்ல .மாறாக உலமாக்களின் காலடியில் அரசியல்வாதிகள் மண்டியிடும் நிலையை ஏட்படுத்துங்கள் .அம்பாறை முஸ்லீம் மக்களின் வாக்குகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹக்கீம் அவர்களுக்கு அந்த பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு உழைப்பது அவரின் கடமையல்லவா ?

முகமட் ஐவாமீல்: 8 August 2016 at 03:32
அரசியல்வாதிகளின் காலடியில் உலமாக்கள் மண்டியிடுவது அவர்களை துதி பாடுவது போன்ற விடயங்கள் உலமாக்களுக்கு ஏட்புடையது அல்ல .மாறாக உலமாக்களின் காலடியில் அரசியல்வாதிகள் மண்டியிடும் நிலையை ஏட்படுத்துங்கள் .அம்பாறை முஸ்லீம் மக்களின் வாக்குகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹக்கீம் அவர்களுக்கு அந்த பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு உழைப்பது அவரின் கடமையல்லவா ?

சி.மு.கா,ஹாபரை கொண்டு வந்தது.கடலைக் கொண்டுவந்தது.மீனவரின் ஜீவனோபாயத்தை அழித்தது.காணிகளைப்பறித்தது......இவ்வளவு நடந்தும் படிப்பினை பெறாத உங்களை நினைத்து கவலையடைகிறேன்.வீடுவாசலை இழந்து மரநிழலில் தங்கும் நிலையேற்பட்டாலும் அப்போது சொல்வீர் மரக்கட்சிதான் எம்மைக் காப்பாற்றினான் என்று,அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

Post a Comment