August 17, 2016

நாமல் ராஜபக்ஸவுக்கு உதவிய, விமானப் பணிப்­பெண் கைது

கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­யொன்றில் வெளிப்­பட்ட இரு வேறு சட்ட விரோத கொடுக்கல், வாங்­கல்கள் தொடர்­பி­லான விவ­கா­ரங்கள் குறித்து விமானப்  ணான நித்­திய சேனாத்தி சம­ர­நா­யக்க நேற்று -16- கைது செய்­யப்பட்டார். இந்த விவ­காரம் குறித்து பிர­தான சந்­தேக நப­ரான அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல்

ராஜ­பக் ஷ கைது செய்­யப்பட்டு எதி­ர­்வரும் 22 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கோட்டை பிர­தான நீதி­வானும் கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய லங்கா ஜய­ரத்ன ஏற்­க­னவே உத்­த­ரவு பிறப்­பித்திருந்தார் இந் நிலை­யி­லேயே தேடப்­பட்டு வந்த சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான குறித்த விமானப் பணிப்பெண் நேற்று கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்பட்டார்.

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­துக்கு நேற்று காலை சென்ற நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் 2 ஆம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் மொஹம்மட் சாஜித் தலை­மையிலான குழு­வினரால் நித்­திய சேனாதி சம­ர­நா­யக்க பணி நிமித்தம் டில்லி நோக்கி செல்ல இருந்த நிலையில் கைது செய்­யப்­பட்டார். இத­னை­ய­டுத்து அவர் கொழும்பு மேல­திக நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் நேற்று பிற்­பகல் ஆஜர் செய்­யப்­பட்டார்.

நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு சொந்­த­மா­னது என கூறப்­படும் ஹெலோ கோப் நிறு­வ­னத்தின் 100 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பங்­கு­களை கொள்­வ­னவு செய்த விதம் தொடர்பில் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் போது வெளிப்­ப­டுத்­தப்ப்ட்ட, குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னருக்கே சொந்­த­மான என்.ஆர். கன்­சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்­ரேஷன் ஆகிய நிறு­வ­னங்கள் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் புரி­யப்­பட்­ட­தாக கூறப்­படும் குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பி­லேயே அந்த சட்ட விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவி ஒத்­தாசை புரிந்தார் எனும் குற்றச் சாட்டில் குறித்த விமானப் பணிப்பெண் கைது செய்­யப்பட்டார். கைது செய்­யப்பட்ட குறித்த விமானப் பணிப்­பெண்­ணான நித்­தியா சம­ர­நா­யக்க என்.ஆர். கன்­சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்­ரேஷன் ஆகிய இரு நிறு­வ­னங்­க­ளி­னதும் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யவர் என நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று மன்­றுக்கு அறி­வித்­தது.

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பவித்ர தயா­ரத்­னவின் மேற்­பா­ர்வையில் 2 ஆம் இலக்க விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் மொஹமட் சாஜித் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட அறு­வ­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன. இந் நிலையில் நேற்று முன் தினம் நாமலும் அவ­ருக்கு கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்­புக்கு உத­வி­ய­தாக கூறப்­படும் சுதர்­ஷன பண்­டார கனே­கொ­டவும் கைது செய்­யப்பட்டு கொழும்பு மேல­திக நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

'ஊழல் ஒழிப்பு குரல் ' அமைப்பின் தலைவர் வசந்த சம­ர­சிங்க கடந்த 2015.07.28 ஆம் திகதி நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக ஆரம்­பிக்­கப்பட்ட விசா­ரணை தொடர்­பி­லேயே பிர­தான சந்­தேக நப­ராக நாமல் ராஜ­பக்ஷ அடை­யாளம் காணப்­பட்டு சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய கைது­செய்­யப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை ஹலோ கோப்ஸ் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக கோட்­டையில் உள்ள நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு விடுக்­கப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய நாமல் ராஜ­ப­க்ஷவும் சுதர்­ஷன பண்­டார கனே­கொ­டவும் அங்கு ஆஜ­ரா­கினர். இதன்­போதே அவர்கள் கைது செய்­யப்பட்­டனர். அத்­துடன் விசா­ர­ணைக்கு அழைக்­கப்பட்­டி­ருந்த மேலும் இரு சந்­தேக நபர்­க­ளான நித்­தியா சேனாதி சம­ர­நா­யக்க என்ற விமானப் பணிப்பெண், சுஜானி போகல்­லா­கம என்ற பெண் ஆகியோர் நிதிக் குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­க­வில்லை. சுஜானி போகொல்­லா­கம கொழும்பின் பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் வீட்­டி­லி­ருந்து பணிக்கு சென்ற விமானப் பணிப் பெண்­ணான நித்­தியா நேற்று கட்­டு­நா­யக்­கவில் வைத்து கைதானார்.

இந் நிலையில் கைதான சந்­தேக நபரை மன்றில் நேற்று பொலிஸார் ஆஜர் செய்த போது அவர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சம்பத் மெண்டிஸ், ஆஜ­ரானார்.

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் மொஹமட் சாஜித் விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் ஆஜ­ரானார்.

இது குறித்த விசா­ர­ணைகள் நீதி­வானின் உத்­தி­யோ­க­பூர்வ அறை­யி­லேயே இடம்­பெற்ற நிலையில், சந்­தேக நபரை ஆஜர் படுத்தி, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் மொஹம்மட் சாஜித் பின்­வ­ரு­மாறு நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்தார்.

' நாமல் ராஜ­பக்ஷ ஹலோகோப்ஸ் நிறு­வ­னத்தைன் பங்­கு­களை கொள்­வ­னவு செய்ய சட்ட விரோ­த­மாக உழைத்­த­தாக கூறப்­படும் தொகை­யா­னது அவ­ருக்கு சொந்­த­மான இரு நிறு­வ­னங்­களை விற்­பனை செய்­யப்பட்டு பெறப்பட்­டது . அந்த நிறு­வ­னங்கள் ஊடா­கவே கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளமை தொடர்­பிலும் வெளிப்­ப­டுத்­தப்பட்­டது. இந் நிலையில் குறித்த இரு நிறு­னங்கள் தொடர்பில் தேடிய போது அவை நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு சொந்­த­மான என்.ஆர். கன்­சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்­ரேஷன் என தெரி­ய­வந்­தது. இந் நிறு­வ­னங்கள் அனைத்­தி­னதும் பங்­குகள் நாமல் ராஜ­ப­க்ஷ­வுக்கு சொந்­த­மா­னவை. இவி­ரண்டு நிறு­வ­னங்­களும் தமது கறுப்புப் பணத்தை ரொஹான் ஹிரி­யா­கொல்ல என்­பவர் தலைமை தாங்கும் பொஸ்டன் எனும் நிறு­வ­னத்தின் ஊடாக சுத்­தி­க­ரித்­துள்­ளனர். இது தொடர்பில் கொடுக்கல் வாங்கல் பத்­தி­ரங்­க­ளையும் வங்­கிக்­க­ணக்­கு­க­ளையும் மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களில் உறு­தி­யா­னது.

இதன்­படி என்.ஆர். கன்­சல்டன் நிறு­வனம் 15 மில்­லியன் ரூபா­வையும் கவர்ஸ் கோப்­ரேஷன் நிறு­வனம் 30 மில்­லியன் ரூபா­வையும் பொஸ்டன் நிறு­வ­னத்தில் இட்டு பின்னர் மீள தமது கணக்­கு­க­ளுக்குள் அவற்றை உள்­ளீர்த்­துள்­ளன.

என்.ஆர். கன்­சல்­டனின், கவர்ஷ் கோப்­ர­ஷனின் பணிப்­பா­ள­ராக நித்­தியா சேனாதி சம­ர­நா­யக்க எனும் இந்த சந்­தேக நபர் செயற்­பட்­டுள்ளார்.

என்.ஆர். கன்­சல்டன் குறித்து 25 கொடுக்கல் பத்­தி­ரங்­களும் கவர்ஸ் கோப்­ரேஷன் தொடர்பில் 14 கொடுக்கல் வாங்கல் ஆரா­யப்ப்ட்­டுள்­ள­துடன் அவை மன்­றுக்­குக்கும் சமர்­பிக்­கப்பட்­டுள்­ளன. இவை­ய­னைத்தும் பணிப்­பா­ளரின் ஆலோ­ச­னைக்கு அமை­யவே நடை பெற்­றுள்­ளன என்­பது விசா­ர­ணையில் உறு­தி­யா­னது.

நாமல் உள்­ளிட்ட சந்­தேக நபர்­களை மன்­றில் ஆஜர் செய்த போது கூறிய அனைத்து விட­யங்­களும் இந்த சந்­தேக நபர் தொடர்­பிலும் பொருத்­த­மா­னது. இது குறித்த விசா­ர­ணைகள் இன்னும் நிறை­வ­டை­ய­வில்லை. ஆகவே சந்­தேக நப­ரான இப்­பெண்ணை விளக்­க­ம­றி­யலில் வைக்க வேண்டும். எனக் கோரிக்கை முன்­வைத்தார்.'

இதன்­போது மன்ரில் கருத்­துக்­களை முன்­வைத்த சந்­தேக நபரின் சட்­டத்­த­ரணி சம்பத் மெண்டிஸ், தமது சேவை பெறுநர் பெய­ர­ளவு பணிப்­பா­ள­ரா­கவே இருந்­த­தா­கவும் அவ­ருக்கு குறித்த இரு நிரு­வன்­னக்கள் ஊடா­கவும் எவ்­வித கொடுப்­ப­ண­வு­களும் கூட கிடைக்கப் பெறாத நிலையில் அவ­ருக்கு பினை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதன்­போது நீதிவான் லங்கா ஜய­ரத்ன நிதிக் குற்றப் புல்­னய்வுப் பிரி­வி­ன­ரிடம் அது குறித்து விசாரித்தார்.

அவர் பெயரளவு பணிப்பாளராக இருந்தாலும், ஏதோ பிரதிபலனுக்காகவே இந் நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் பணப் பெற்றிருக்கலாம் என தமக்கு சாதாரண சந்தேகம் இருப்பதாகவும் அது குறித்தும் விசாரணை செய்வதாகவும் பொலிஸ் பரிசோதகர் சாஜித் இதன்போது நீதிவானுக்கு பதிலளித்தர்.

இதன்போது இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபர் குறித்த குற்ற சாட்டுடன் சில தொடர்புகளைக் கொண்டுள்ளமை தெளிவாவதால் விசாரணை நிறைவடையவில்லை என்பதை மையப்படுத்தி சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொன்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment