Header Ads



கனவில் கூட, என்னை நச்சரிப்பதையே தங்கள் பணியாகக் கருதுகின்றனர் - பள்ளிவாசலில் றிசாத் உருக்கம்


யாழ்ப்பாண முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதற்கான முயற்சிகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த விடயத்தில் நாம் வெற்றி பெறுவோம்' என்று தெரிவித்துள்ள கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், 'மக்களுக்கு பணியாற்றுவதற்காக எதிர்நீச்சல் போடுகின்றேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'இனவாதிகளும் என்மீது எரிச்சல் கொண்டவர்களும், என்னைத் தூற்றுவதையே தமது தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள், கனவில் கூட என்னை நச்சரிப்பதையே தங்கள் பணியாகக் கருதுகின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார். 

யாழ்ப்பாணத்துக்கு, நேற்றுச் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். முஸ்லிம் வட்டாரத்துக்குச் சென்று, அங்கு மஸ்ஜிதுல் மரியம் ஜும்ஆ பள்ளிவாசலில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். 

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அமைச்சர், எதிர்வரும் காலங்களில் இந்தக் கஷ்டங்களை படிப்படியாகத் தீர்க்கக்கூடிய நல்ல சூழ்நிலை உருவாகியுள்ளதென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அங்கு கருத்துரைத்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், 

'யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுப்பதில், எனக்குப் பல்வேறு தடைகளும் முட்டுக்கட்டைகளும், கடந்த காலங்களில் இருந்தன. யாழ்ப்பாண முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதற்கான முயற்சிகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம். இந்த விடயத்தில் நாம் வெற்றி பெறுவோம். என்னைப் பொறுத்தவரையில், மக்கள் பணியையே எனது முழு மூச்சாகக்கொண்டு செயற்பட்டு வருகின்றேன். எனக்குக் கிடைத்த பதவியை இறைவனுக்கு பொருத்தமான வகையில் பயன்படுத்துகின்றேன். எனினும், இனவாதிகளும், என்மீது எரிச்சல் கொண்டவர்களும் என்னைத் தூற்றுவதையே தமது தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் கனவில் கூட என்னை நச்சரிப்பதையே தங்கள் பணியாகக் கருதுகின்றனர். 

கொழும்பில், திங்கட்கிழமை (15) இடம்பெற்ற இனவாதத்துக்கு எதிரான பேரணியில் குழப்பம் விளைவித்த சிங்ஹலே அமைப்பினர், என்னை மையமாக வைத்தே தூசித்தனர். அவர்களின் ஏச்சுக்களுக்கும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கும், நான் ஆளானேன். எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில், நான் மன்னாரிலேயே இருந்தேன். இப்படித்தான் ஒவ்வொரு விடயத்திலும் எனக்கு வசைபாடுகின்றனர். 

யாழ்ப்பாண முஸ்லிம்கள், மீள்குடியேற்றத்தில் படுகின்ற கஷ்டங்களை நான் நேரடியாகக் கண்டவன். அடிப்படை வசதிகளின்றி அவர்கள் அவஸ்தைப்படுகின்றனர். இதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.   பிற மாவட்டங்களில் வாழும் யாழ். முஸ்லிம்களும் மீண்டும் தமது இடங்களில் குடியேறுவதற்கு ஆர்வம்கொள்ள வேண்டும். எல்லோரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் மீள்குடியேற்றம் எளிதாக அமையும்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2 comments:

  1. பாருங்கள், அரசியல் எவ்வளவு கஷ்டமான தொழில் என. வாக்குகள் பெறுவதற்காக
    நிறைய பொய்கள் சொல்லவேண்டும். சிவாஜி
    மாதிரி நடிக்கவேண்டும். அப்பாடா!!. நீங்க இதுல கில்லி சார்.

    ReplyDelete
  2. Ajan Antanyraj என்பவர் ஒரு மன நோயாளி போல் தெரிகிறது. அவ்வாறு இருந்தால் பறவாயில்லை. இல்லை என்றால் இயேசுநாதரின் போதனைகளையும் அவர் மக்களுக்காக பட்டகஷ்டங்களையும் தியாகங்களையும் நம்புவதோடு , அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு துரோகிகள் செய்த அநியாயங்களை அவர் சொல்கின்ற போது பொய் சொல்லுகின்றார் என்று சொல்வீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.