Header Ads



வடமாகாண முதலமைச்சரை, எவ்வாறு சேர்ப்பது..? ரணில்

மீள்குடியேற்ற செயலணி கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில், வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

சபையில் இன்று உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண மீள்குடியேற்ற செயலணி குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.

வடமாகாண மீள்குடியேற்ற செயலணிக்குள் அங்கம் வகிக்கும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அண்மைக்காலமாக வடக்கு மக்களின் நம்பிக்கையை இழந்து வந்தவர் என்பதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களில் ஒருவராகவே கூறப்பட்டு வந்தவர்.

ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பினர் சார்பில் ஒருவரேனும் அந்தச் செயலணியில் இல்லாததினால் அதன் மீது மக்களது நம்பிக்கை வீழ்ந்துகொண்டிருப்பதால் வடமாகாண முதலமைச்சரை அச்செயலணிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் முன்வைத்தார்.

இதன்போது ஒன்றன்பின் ஒன்றாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதனும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்கள்.

அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்களே இந்தச் செயலணியில் அங்கம் வகிக்க முடியும். தற்போது மூன்று அமைச்சர்கள் இதில் உள்ளனர். இவ்வாறான நிலையில் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு இதில் சேர்ப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மஹிந்த ராஜபக்ச செய்ததையே நீங்களும் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு ஆசனத்தில் அமர்ந்தார்.

இதேவேளை வடமாகாண மீள்குடியேற்ற செயலணி சர்ச்சை குறித்து இவ்வாறு வாதவிவாதம் இடம்பெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் இருந்தபோதிலும் எதுவித குறுக்கீடுகளும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. நாட்டின் பிரதமருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுப்பவர் முஸ்லிம்களுக்கு எதிராக எப்படி செயட்படுவார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது .

    ReplyDelete
  2. மீள்குடியேற்ற செயலணி என்பது தமிழ் பயங்கரவாதி களினால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான ஒரு அமைப்பாகும். இங்கு ஒரு விடயத்தை இதில் பங்குபோட கேட்பவர்கள் புறிந்து கொள்ள வேண்டும் . அர்த்தமற்ற விடுதலை போராட்டத்தில் 1990 ஆம் ஆண்டு தானும் தன்பாடுமாக வாழ்ந்த ஒரு லெட்சத்துக்கும் மேற்பட்ட வடமாகாண முஸ்லிம்களை 24 மணி நேரத்துக்குள் கையில் வெறும் ரூபா 500 ஐ மாத்திரம் கொடுத்து உடுத்த உடையுடன் பல பில்லியன் ரூபா பணத்தையும் பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் பல ஆயிரக்கணக்கான கிலோ தங்க நகைகளையும் அபகரித்துவிட்டு தென்னிலங்கையை நோக்கி துரத்தியடிக்கப்பட்டார்கள் . எனவே மீண்டும் உங்களால் அபகரிக்கப் பட்ட சொத்துக்களை முஸ்லிம்களிடத்தில் வழங்கி விட்டு, உங்கள் முதலமைச்சரையும் சேர்த்துவிடுங்ஙள். அப்பொழுதுதான் உங்கள் கோரிக்கை நியாயமாகும். இங்கு சிங்கள மக்கள் மரண அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்தார்கள். எனவே இந்த ஜனாதிபதி மீள்குடியேற்ற செயலணி என்பது முஸ்லிம் சிங்கள மக்களுக்கானது என்பதனையும் புறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  3. மீள்குடியேற்ற செயலணி என்பது தமிழ் பயங்கரவாதி களினால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான ஒரு அமைப்பாகும். இங்கு ஒரு விடயத்தை இதில் பங்குபோட கேட்பவர்கள் புறிந்து கொள்ள வேண்டும் . அர்த்தமற்ற விடுதலை போராட்டத்தில் 1990 ஆம் ஆண்டு தானும் தன்பாடுமாக வாழ்ந்த ஒரு லெட்சத்துக்கும் மேற்பட்ட வடமாகாண முஸ்லிம்களை 24 மணி நேரத்துக்குள் கையில் வெறும் ரூபா 500 ஐ மாத்திரம் கொடுத்து உடுத்த உடையுடன் பல பில்லியன் ரூபா பணத்தையும் பல கோடிக்கணக்கான சொத்துக்களையும் பல ஆயிரக்கணக்கான கிலோ தங்க நகைகளையும் அபகரித்துவிட்டு தென்னிலங்கையை நோக்கி துரத்தியடிக்கப்பட்டார்கள் . எனவே மீண்டும் உங்களால் அபகரிக்கப் பட்ட சொத்துக்களை முஸ்லிம்களிடத்தில் வழங்கி விட்டு, உங்கள் முதலமைச்சரையும் சேர்த்துவிடுங்ஙள். அப்பொழுதுதான் உங்கள் கோரிக்கை நியாயமாகும். இங்கு சிங்கள மக்கள் மரண அச்சுறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்தார்கள். எனவே இந்த ஜனாதிபதி மீள்குடியேற்ற செயலணி என்பது முஸ்லிம் சிங்கள மக்களுக்கானது என்பதனையும் புறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. 1. முதலில் LTTE செய்தவைகளுக்கு மற்ற தமிழர்களில் பிழை பிடிப்பதை நிறுத்தங்கள்.
    2. வடக்கில் NPC அரசு உள்ளது. எனவே அங்கு என்ன செய்வதென்னறாலும் CMஇன் உள்ளீடு தேவை. மற்றவைகளை போல் இது dummy அரசு இல்லை.
    3. பதியுதீன் மன்னார் நீதிபதிக்கும் மதகுருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர், சட்டவிரோத
    காடழித்தல் செய்தவர், பின்னர் சட்டத்தை ஏமாற்றி தப்பியவர். இப்படியானவர் இங்கும் தில்லுமுல்லுகள் செய்ய பார்பார். வடக்கில் இருந்ததற்கான அத்தாட்சிகள் இல்லாதவர்களையும் குடியேற்ற பார்பார்.
    4. ஜெனிவா தீர்மானத்தில் படி அரசு இன்னும் இராணுவத்தை அகற்றவில்லை.

    இப்படி இதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே பொறுமை தேவை நண்பர்களே.

    ReplyDelete
  5. Tamil Politicians fought for their freedom against the sinhala Buddist Barbarousness for more than 30 years. Do you expect Northern Muslims to fight for their rights against Tamil barbarousness too??

    ReplyDelete

Powered by Blogger.