Header Ads



"உரசிக்கொண்டு நட்பு கொள்ளுதல், எனும் கேவலம்"

-Mohamed Aazir-

நமது சமூகத்திட்கு கல்வி எந்தளவு அவசியமானதோ அதை விட பல மடங்கு மார்க்கம் அவசியமானது. இன்றய நாட்களில் நமது கல்விமான்களை இரு வகைப்படுத்தலாம் பல்கலைக்கழகம் நுழைவின் முன், நுழைவின் பின். இங்கு குறிப்பிட்டு சொல்வது மேட்படிப்புகளை மேட்கொள்ளும், மேட்கொள்ளபோகும் முஸ்லீம் சகோதர, சகோதரிகளுக்காக மாத்திரம்.

பெரும்பாலானோர் (நல்லவர்களும் உண்டு) பல்கலைக்கழகம் நுழைந்த பிறகு பெண்களுடன் நட்பு கொள்ளுதல் அவர்களுடன் இணைந்து உரசிக்கொண்டு புகைப்படம் எடுத்தல் அதை சமூக வலைத்தளங்களில் தைரியமாக பதிவேற்றம் செய்தல் அல்லது "டேக்" மூலம் இணைத்துகொள்ளப்பட்டு சகலரும் பார்க்கும் வண்ணம் செய்தல் போன்ற செயட்பாடுகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கிறது.

மற்றும் பல்கலைக்கழக ஹொஸ்டல் வாழ்க்கை பெறும்பாலும் தவறுகளை தூண்டும், தவறுகளை கற்றுக்கொள்ளும் இடமாக காணப்படுகிறது. இதில் பெரும்பாலான சகல சமூகத்தவரும் ஒன்றாக இணைந்து இருக்கும் போது அவர்கள் மதத்தில் சரியாக இருக்கலாம் ஆனால் நமது மார்கத்திட்கு அப்பால்பட்ட விடயங்களை தொடர்ட்சையாக காணும் போது ஒரு கட்டத்தில் தவறா ? இல்லையா ? எனும் நிலைக்கு தள்ளப்பட்டு சிறிது காலத்தில் தைரியமாக அந்த தவறை செய்யும் நிலைக்கு அது இட்டுச்செல்கிறது. (முஸ்லீம்களிலும் இருக்கின்றனர் யாரும் அறியாத தவறுகள் எல்லாம் சொல்லிக்கொடுக்கும் அறிஞ்சர்கள்).

பெரும்பாலான நீங்கள் நல்ல மார்க்க பற்றுடன் இருந்து பல்கலைக்கழம் நுழைந்தவர்கள். தெரிந்தே செய்யும் இவ்வாறான தவறுகளால் நாளை அல்லாஹ்விடம் நஷ்டவாளியாக மாறிவிடகூடாது. மேலும் எதிர்கால சந்ததிகளுக்கு நீங்கள் பிழையாக வழிகாட்டிகொடுக்கும் வரலாற்று துரோகத்திட்கும் காரணமாக இருந்து மரணத்திட்கு பின்பும் தீமைகளை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது.

சில முஸ்லீம் பெண்கள் ஊர் தாண்டி சென்று பல்கலைக்கழக படிப்பை மேட்கொள்ள வேண்டிய வருகிறது. இதனால் ஒரு சில உதவிகளை எதிர்பார்த்து ஆண்களுடன் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை இருசாராரும் தவறான, இஸ்லாமிய மார்கத்திட்கு முரணான வகையில் காலப்போக்கில் நடந்துகொள்வது பற்றி அவர்களாக சிந்திக்க வேண்டிய தருணம் என சொல்லிக்கொண்டு, சரி இதெல்லாம் சொல்ற நீ நல்லவனா என்ற கேள்வியை என்னிடம் கேட்டு விடாதீர்கள்.

-ஆமா நான் கெட்டவன்தான் வாங்க சேர்ந்து திருந்துவம்-

1 comment:

  1. சகோதரர் சொன்னது உண்மையே. ஓர் நல்லவரை கெட்டவராக மாற்றிவிடும் சூழல் பல்கலைக்கழகச் சூழலுக்கு உண்டு. இருந்தாலும் சிலர் தமது ஈமானைப் பாதுகாத்துக் கொண்டும் படிக்கின்றனர். கட்டாயம் பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்குப் படிக்கச் செல்லுமுன்னர் மார்க்க அறிவும் ஈமானுடனும் செல்ல வேண்டும். அப்போதுதான் தமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதில் பெற்றோருக்கும் பாடசாலைக் கல்விச் சூழலுக்கும் பெரும் பங்குண்டு. ஏனெனில் பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆண்,பெண் கலந்தே படிக்க வேண்டிய கட்டாய நிலை காணப்படுகின்றது. உயர் கல்வி நிறுவனங்களில் நுழைய முன்னர் மாணவர்கள் பாடசாலைகளிலேயே ஒழுக்கம் போதிக்கப்பட வேண்டும். அங்கு வைத்தே பயிற்றுவிக்கப்பட வேண்டும். கலவன் பாடசாலைகளில் ஆண்,பெண் ஒன்றாகக் கலந்து படிக்கும் போது சகஜமாகப் பழகுவதால் வெட்க உணர்வு இல்லாமல் போகிறது. (முஸ்லிம் தனித்தனி பாடசாவைகள் இருப்பது சாலச்சிறந்தது.) இப்பழக்கம் திருமணத்தின் பின்னர்கூட தொடர்கிறது. எனினும் நல்ஒழுக்கமுள்ள மாணவர்களும் காணப்படுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.