Header Ads



பிலிப்பைன்ஸில் முக்கிய இஸ்லாமிய, போராளி குழுவுடன் அரசு பேச்சு

பிலிப்பைன்சில் இரண்டு ஆண்டுகளுக்குமுன் நாட்டின் முக்கிய இஸ்லாமிய போராளி குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியினருடன் போட்ட சமாதான உடன்படிக்கையின்படி அரசாங்கமானது அமைதி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையை மலேசியா முன்னெடுத்து நடத்துகிறது.

பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ டுடர்டோ பதவியேற்றப்பின் கூட்டப்படும் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்டானோ தீவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இது ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும் என அதிபரின் அலோசகர் ஜீசஸ் டுரெஸா கூறியுள்ளார்.

இருதரப்புக்கும் ஏற்கெனவே உள்ள உடன்படிக்கையின்படி, மின் டானோவில் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கும், பிராந்திய அரசாங்கம் தேர்ந்தேடுக்கப்படுவதற்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு போராளிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்று உள்ளது.

இந்த முயற்சிகள் கடந்தாண்டு முடங்கியது. BBC

No comments

Powered by Blogger.