Header Ads



கேள்விக்குறியாகும் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்...

கடந்த சில வாரங்களுக்கு முன் அனைத்துப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தமது 7 கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி கடந்த மாதம் 13,14ம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். எனினும் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகள் கிட்டாத நிலையில் கடந்த மாதம் 27ம் திததி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத் தொடர் வேலை நிறுத்;த போராட்டம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. மேலும் இவ் வேலை நிறுத்தத்ததால் நீர், மின்சாரம், விடுதி வசதி, விடுதி குளியலறை வசதிகள் போன்றனவும் தடைப்பட்டுள்ளன. இதனால் அனைவரும்; பல்கலைககழகம் மற்றும் விடுதிகளை விட்டும் வெளியேறியுள்ளார்கள்.

இது இவ்வாறிருக்க, இவ்வாறான பணி பகிஷ்கரிப்புக்களால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருந்தால் மாணவர்கள் தம் கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது.??? மற்றும் இவர்களுடைய கல்வியாண்டு காலம் எவ்வாறு உரிய நேரத்தில் முடிவடையும்???

ஏற்கனவே 2012ஃ2013இ 2013ஃ2014இ 2014ஃ2015 கல்வியாண்டு மாணவர்களை உயர்தரப் பரீட்சை சித்தியடைந்த காலத்தில் இருந்து சுமார் 2 வருட காலத்திற்குப் பிற்பாடு தான் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கியுள்ளார்கள். தற்போதுள்ள கல்வித்திட்டத்தின் படி மாணவன் ஒருவன் உயர்தரப் பரீட்சை எழுதியதில் இருந்து 2 வருட காலம் பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்து, பின்னர் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ய குறைந்தது 3 ஆண்டுகளுமாக மொத்தமாக ஆகக் குறைந்தது 5 வருட காலத்தினை செலவு செய்ய வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறான வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடம்பெறுவதினால் இப் பல்கலைக்கழக மாணவர்கள்pன் கல்வியாண்டு காலம் வரையறையின்றி கூடிச் செல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்களாகிய நாங்களே.

மேலும் பல்கலைக் கழகங்கள், பல்கலைக்கழகங்களில் கடமையாற்றுபவர்கள் அனைவரும் மாணவர்களுக்காகவே என்று வாழையடிவாழையாக கூறப்பட்டு வந்தாலும் அது வெறும் சித்தாந்தமாக மாத்திரமே உள்ளது. உண்மையில், நடைமுறையில் மாணவர்களின் தேவைகளுக்கு அப்பால் மற்றவர்களின் தேவைகளுக்காக வேண்டித் தான் அதிகமான நேரங்களில் பல்கலைக் கழகங்கள் மூடப்படுகின்றன. 

இது ஒருபுறமிருக்க இன்று எவ்வித கஷ்டங்களும் இன்றி, பல்கலைக்கழக உள்வாரி மாணவர்கள் படும் கஷ்டங்களில் இருந்து அரைவாசி கஷ்டங்களைக் கூடப் பெறாமல் குறிப்பிட்ட 3 வருட காலத்திற்குள் பட்டப்படிப்பை முடித்துச் செல்லும் வெளிவாரி மாணவர்களுக்குத் தானா இந்த கல்வித்திட்டம்???

க.பொ.த (உஃத) பரீட்சையில் கூடிய ண வெட்டுப்புள்ளிகள் பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகி பல்வேறு கஷ்டங்கள், பகிடிவதை, வேலை நிறுத்தங்களுக்கு மத்தியில் அடிபட்டு பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து தொழிற்சந்தைக்குச் சென்றால் உள்வாரி பட்டதாரிகளுக்கும், வெளிவாரி பட்டதாரிகளுக்கும் சம பட்டம், சம கவனிப்பே... இது எந்த வகையில் நியாயம்.?? இதற்குத் தானா கஷ்டப்பட்டுப் படித்து, கூடிய ண வெட்டுப் புள்ளிகளைப் பெற்று, விடுதியில் தங்கி, பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அனைத்து விடயங்களையும் சகித்து, அனுசரித்து படித்துப் பட்டம் பெற்றது...????

ஆசியாவின் ஆச்சர்யம்மிக்க நாட்டின் கல்வித்திட்டம் இது தானா...??? இதற்நிடையில் வேலைநிறுத்தம் காரணமாக கல்வியாண்டு இன்னும் தள்ளிப் போகிறது...

எனவே இவ்வாறான செயற்பாடுகளால் கல்வியாண்டு காலங்களை அதிகரித்து மாணவர்ககளின் வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மிக விரைவில் பல்கலைக் கழகங்களில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு...

B.M Sakry

2ம் வருடம்,
அரசியல் விஞ்ஞான துறை,
தென்கிழக்குப் பல்கலைக் கழகம்

No comments

Powered by Blogger.