Header Ads



முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், மும்மன்ன பாடசாலைக்கு காணியை பெற்றுக்கொடுக்கலாம்..!

குருநாகல் - மும்மன்ன பாடசாலைக்கு கட்டிடத்தை பெற்றுத்தருவதற்கு முழு முஸ்லிம்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டுமென மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.பீ. சுஹைப் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வட்ஸப் மூலமாக தெரிவித்தார்.

பொதுபல சேனா நேற்று 10 ஆம் திகதி குறித்த பிரதேசத்திற்கு சென்று கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், இன்று 11 ஆம் பேசிய அதிபர் மேலும் குறிப்பிட்டதாவது,

மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்தில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். எனினும் பாடசாலைக்கு வசிதிகள் போதாது. எனவேதான பாடசாலைக்கு காணி ஒன்று அவசியப்பட்டது. இதையுணர்ந்து அருகிலுள்ள ஒரு ஏக்கர் காணியை கொள்வனவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக ஆவணங்களும் தயார்படுத்தப்பட்டது. இதற்கு தற்போதைய அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்டவர்களும் உதவியிருந்தனர். எனினும் காணி உறுதி பெறப்படவில்லை.

மும்மன்ன முஸ்லிம் வித்தியாலயத்துடன் ஒப்பிடுகையில் ஏனைய மொழி பாடசாலைகள் சகல வளங்களையும் கொண்டுள்ளன. ஆனால் நாங்கள் குறைந்த வளங்களுடன் கூடிய மாணவர்களைக் கொண்டு கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்கிறோம்.

இந்நிலையில் பாடசாலைலக்கு காணி அவசியமாகிறது. காணி இருந்தால் பாடசாலைக்குரிய கட்டிடங்களை எழுப்பிக்கொள்ள முடியும். தற்போது பாடசாலைக்கு காணியைப் பெறுவதிலேயே சிக்கல் எதிர்நோக்கப்படுகிறது.

இங்குள்ள சிங்கள மக்களே பாடசாலைக்கு காணியை வழங்க எதிர்ப்புத் தெரிவிப்பதாக இங்குள்ளவர்களால் பேசிக்கொள்ளப்படுகிறது.

எதுஎப்படி இருந்தபோதிலும் இந்த முஸ்லிம் பாடசாலைக்கு, பாடசாலைக்கு அருகாமையிலேயே ஒரு காணி அவசிப்படுகிறது.

இந்த காணியைப் முஸ்லிம் பாடசாலைக்கு பெற்றுக்கொடுப்பதில் சகல முஸ்லிம் சக்திகளும் இணைந்து செயற்படுவார்களாயின்  நாம் நமது இலக்கில் வெற்றிபெறலாம். எனவே பேதங்களை மறந்துவிட்டு இந்த முஸ்லிம் பாடசாலைக்கு அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த காணியை பெற்றுத்தர முன்வருமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

2 comments:

  1. Pay the money and buy the land. What's the issue here. I don't understand

    ReplyDelete
  2. I sent three time bc onda mara mandaikku erathan

    ReplyDelete

Powered by Blogger.