Header Ads



முஸ்லீம் பெண்கள் புர்கினி என்னும், முழுநீள நீச்சல் உடை அணியலாம் - பிரான்ஸ் நீதிமன்றம்

பிரான்சில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி ஃபிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வீல்நோவ் லூபெய் நகரத்தின் தடையை இந்த நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. ஆனால், 30 கடலோர நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உள்ளூர் விதிமுறைகள் இந்த தீர்ப்பால் மாற்றம் பெறும் என்று தெரிகிறது.

முஸ்லீம் பெண்கள் அணிய விரும்புகின்ற உடையை அணிவதிலிருந்து தடுக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் உரிமை மீறலுக்கு எதிரானவை என்று வாதிடும் பரப்புரையாளர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த தடை சட்டப்படி செல்லுமா, இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் வேறொரு நாளில் இறுதி முடிவு எடுக்கும்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, புர்கினி அணிந்ததால் அபராதம் விதிக்கப்பட்டோர் தங்களுடைய அபராதத் தொகையை திரும்ப்ப் பெற முடியும் என்று நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்கறிஞர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.