August 10, 2016

இனவாதமும், இனவாத அரசியலும்..!!

யு.எச். ஹைதர் அலி

இலங்கையின் பிரபல தலபாட நிறுவனமாகிய டொன் கரோலிஸ் என்பவரின் புதல்வாரன டொன் டேவிட் கிலார்க் தனது வியாபார நலனுக்காக போர்திய அனகாரிக்க தர்மபால என்கின்ற பெயரையும் அனகாரிக்கவையும் நாம் நன்கறிவோம். அனகாரிக்க தர்மபாலவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயான முரண்பாடு வர்த்தகரீதியான போட்டியே, அதனை நாம் இனவாத மாக பார்க்க முடியாது, பெரும்பான்மை சிங்கள மக்கள் கூட தர்மபாளவின் கருததுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் அதனை நிராகரித்தனர். ஆரம்ப காலத்தில் தோன்றிய ஜாதிக விமுக்தி பெரமுன, சிங்ஹல மஹஜன பக்ஷய போன்ற இனவாதத்தைத் துண்டும் கட்சிகளையும்  மக்கள் நிராகரிக்கவே செய்தனர். இதில் இருந்து ஓரு உண்மை எமக்கு புலப்படுகிறது பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இனவாதத்தை விரும்புபவர்கள் அல்ல என்று.

தேசியவாதம் என்பது வேறு, இனவாதம் என்பது வேறு, தேசியவாதத்தை இனவாதமாகப் பார்க்கக் கூடாது. ஆசிய நாடுகளில் இனவாதமும் சாதி வேறுபாடுகளும் தேசியவாதத்தைப் படாத பாடுபடுத்தியுள்ளன. இன்று எமது இலங்கை வாழ் முஸ்லீம்கள் தேசியவாதத்தை இனவாதமாக பார்க்க முற்படுகின்றனர்.

சிங்கள இனவாதக் கட்சிகள் செயலிழந்து போகும் தறுனத்தில் 1977ம் ஆண்டு J.R. ஜயவர்தன என்கின்ற வேட்டியனிந்த முதலாலித்துவ வாதியின் ஆசீர்வாதத்தோடு திட்டமிட்டு தனது சொந்த அரசியல் நலனுக்காக இந்த நாட்டில் சிறுபான்மை கற்சிகள் இன றீதியாக உருவாக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாலர் காங்ரஸ் போன்றவை.

பிற்காலத்தில் இக் கற்சிகள் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாவும் மாறின,  இவையெல்லாம் சிங்களவர் மத்தியில் பீதியையும் பொறாமையையும் தோற்றுவித்தது. இதனாலேயே சிஹல உறுமய, சிங்ஹலே மாகா சம்மத பூமி புத்ர, RAVANA BALAYA , BBS, BJP போன்ற கடசிகள் காளான்களைப் போல தோன்றி இனவாதத்தைக் கக்கி மக்களைத் தூண்டின.

அது இயல்பானதே. முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்களின் வீராப்புகள், முன்யோசனையற்ற பிரகடனங்கள் அரசியல் முதிர்ச்சியின்மை போன்றவை அவற்றுக்கு மேலும் எண்ணையூற்றின. முஸ்லிம் காங்ரஸ் தொடக்கம் BBS வரை அனைத்து கட்சிகளும் இந்த இன வாதத்தை மையமாக வைத்துத்தான் தங்களது அரசியல் மேடைகளை அலங்கரிக்கவும் தொடங்கின. முஸ்லிம் அரசியல் வாதிகள் கூட தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன வாத கருத்துக்களால் முஸ்லிம் சமூகத்தை தூண்டி வாக்குப் பெற முயற்சிப்பததையும் நாம் அறிவோம்.

கசப்பான மற்றும் சில உண்மைகளையும் நாம் இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.

இன்று அரசியல்தொடக்கம் பாதால உலகம் வரை முஸ்லீம்கள் செயற்படுகின்றார்கள்.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நாட்டில் வியாபாரிகளாக அறிமுகமாகிய முஸ்லீம்கள் வர்தக வானிப துறைகளில் பெயர் பதித்து சிறந்து விளங்கினார்கள் முஸ்லிம் வியாபாரிகள் என்றால் நன் மதிப்பும் மரியாதையும் இருந்தது.

காலப்போக்கில் முஸ்லிம்களது நடத்தையில் பாரிய மாற்றங்கள் அதாவது, விரைவாக பணத்தைக் குவிக்கும் ஆசையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கினர்,  இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி செயல்களில் எமது முஸ்லிம்கள் சமபந்தப்பட்டிருக்கிறார்கள், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய   கொலைச்சம்பவத்தில்; முஸ்லிமகளுக்கும்  தொடர்பு இருக்கின்றது, மற்றும் கள்ளக் கடத்தல், பாதாள உலகத் தொடர்பு, பாதாள உலகின் முக்கிய நபர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள் போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் கூடிய ஈடுபாடு….

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு கௌரவமும் அந்தஸ்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் அன்னிய சமூகங்கள் மத்தியில் இருந்தன.

ஆனால் இன்று அரசியல் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் ஒன்றுசேர அவர்களது நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியலைக் கொண்டு நடத்த குண்டர் படைகள், தனது அரசியல் நலன்களுக்காக தனது சமூகத்தையே ஏலம் போடும் அரசியல் கோமாளிகள், இவர்களை எமது சமூகத்தின் தலைமைகலாக ஏண்ணும் காலமெல்லாம் நாம் இந்த நாட்டில் அரசியல் அநாதைகலாக்கப்படுவோம், இது மட்டுமல்லாது ஏனைய சமூகங்கள் எம்மை எதிரியாகவே  பார்க்க முற்படும்.

முஸ்லிம்களின் நடத்தையிலும் பழக்கவழக்கங்களிலும் மாற்றம் ஏற்படாத வரையில் இந்த சமூகம் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை;.

மக்களை இனவாதிகளாக பிரதேசவாதிகளாக நடத்துவதை  முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் நிறுத்தவேண்டும்;. மக்களை சுயமாக சிந்தித்து செயல்பட வைக்கவேண்டும் அதற்கு அவர்கள் கல்வியில் கரிசனை காட்ட வேண்டும். மற்றவர்கள் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மார்க்க நெறி முறைகளை சரியான முறையில் பின்பற்றும் சமூகமாக நமது சமூகம் மாற்றம் பெற வேண்டும். அவையெல்லாம் எம்மிடம் இருந்த காலத்தில் நாங்கள் மதிக்கப்பட்டோம் அவற்றைக் கைவிட்டதனால் நாங்கள் மிதிக்கப்படுகிறோம் அவ்வளவுதான்!

7 கருத்துரைகள்:

இவ்வாறான கட்டுரைகள் நமது முகத்தில் நாமலே வானத்தை நோக்கி எச்சிலை துப்புவது போன்றதாகும்.இந்த இணையத்துக்கு இது பொருத்தமற்ற செய்தியாகும்.

ஒரு சில அரசியல் வாதிகலை வைத்து ஏல்லோரையும் ஏலனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது நல்லவர்களும் வாழ்ந்ததுன்டு எல்லா சமூகத்திலும் தவர்கள் செய்பவர்கள் இருக்கின்றார்கள் அதை அவர்அவர்கள்தானக திருந்த வேண்டும் அதற்காக மொத்த சமுதாயமும் தப்பாக நடப்பதாக கூற முடியாது,
அதற்காக ஒரு சமுதாயத்தை இன்னோரு சமுதாயத்தால் நசுக்க இடம்மளிக்ககூடாது

உள்ளதை சொன்னால் உடம்பெல்லாம் வருத்தமாம்,மேலே சொல்லப்பட்ட விடயங்களைவிடவும் அதிகமாக மற்றவர்கள் எங்களைப்ப்ற்றி விளங்கி வைத்துள்ளனர் என்பதை சகோதரர் அறியவில்லையா???

கசப்பாகினும் கட்டுரையாளர் சொல்வது உண்மையே

Well said bro Hyder ali,thanks

May be you must be slmc..or..acmc or nother stupid political party member.

Post a Comment