Header Ads



மிகவும் கேடான மதுபானம், உலக தரவரிசையில் இலங்கை முதலிடம்

இலங்கையில் டெங்கு நோயால் மூன்று பேர் உயிரிழக்கும் போது, புகையிலை பாவனையால் நாள் ஒன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமன் குமார இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆண்டு ஒன்றுக்கு புகையிலை பாவனையால் இலங்கையில் 20,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊடக அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உலகில் 95 வீதமானோர் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் 22 வீதமான ஆண்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மதுபானம் பாவிப்பதில், காரத்தன்மையான அல்லது உடலுக்கு மிகவும் கேடான மதுபானம் பாவிப்பவர்களில், உலக தரவரிசையில் இலங்கை முதலிடம் வகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.