Header Ads



"சுதந்திரக்கட்சி ஒன்று சேரும்வரை, ஆதிவாசியான நான் தலைமுடி வெட்டப் போவதில்லை"

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒன்று சேரும் வரை தான் தலைமுடி வெட்டப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி ஒன்று சேரும் வரை தான் முடியை வெட்டப் போவதில்லையோ, அதே போல் கட்சி ஒன்று சேரும் வரை அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் முடியை வளர்க்கப் போவதில்லை என்றும், எனவே நான் முடிவெட்டுவதையும், அமைச்சர் துமிந்த முடிவளர்ப்பதை பார்க்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்று சேர வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் தம்புத்தேகம நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

1994ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் எமது நாட்டிற்கு வந்து எமது கட்சியை ஒன்றிணைத்து தேர்தலில் நின்ற போது மஹியங்கணை பகுதியில் தமது கட்சி தோற்றதை அடுத்து சந்திரிக்கா அம்மையார் தன்னை மஹியங்கணைப் பகுதியை பொறுப்பேற்குமாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு ஆதிவாசிகளின் தலைவர் என்றும், தனக்கும் ஆதிவாசியினருக்கும் உறவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர், தனது நடவடிக்கைகள் ,செயற்பாடுகள் என்பன தான் ஆதிவாசிககள் என்பதை உணர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஆதிவாசிகளின் உறவினர் என்று சந்திரிக்காவிடம் சொல்லாத போதும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அல்லது வேறு யாரோ சந்திரிக்காவிடம் சொல்லிவிட்டார்கள் நான் ஆதிவாசிகளின் உறவினர் என்று. இதனால் தான் தன்னை மஹிங்கணை தொகுதியை பொறுப்பேற்கும் படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் தெரிவித்துள்ளார்.

எனவே சந்திரிக்காவின் விருப்பதிற்கமைய மஹியங்கணை தொகுதியைப் பொறுப்பேற்றது போல அங்கு தமது கட்சி வெற்றியும் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. தலைமுடி வெட்டாமல் இருப்பதால் எந்தப்பிரச்னையும் இல்லை. இலங்கை வெளிநாட்டுத் தொழில் பணியகத்துக்கு நீர் பொருப்பான அமைச்சராக இருந்தபோது களவாடிய கோடான கோடி மக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதுதான் இப்போதைய அவசியமான அவசரமான தேவை.

    ReplyDelete

Powered by Blogger.