Header Ads



இலங்கை வந்துள்ள மாலைதீவு, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவாரா..?

மாலத்தீவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முகமது நஷீத். இவர் தீவிரவாத குற்றச்சாட்டில் 13 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். அவரது தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஆபரேசன் செய்துகொள்வதற்காக பிரிட்டன் செல்ல அனுமதி கேட்டார். முதலில் மறுத்த அரசாங்கம், பின்னர் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி அளித்தது.

ஆனால், சிகிச்சைக்காக லண்டன் சென்ற நஷீத், உடல் நலம் தேறியபோதும் மாலத்தீவுக்கு திரும்பி வரவில்லை. சமீபத்தில் அவருக்கு அரசியல் அகதியாக தஞ்சம் அளித்துள்ளது பிரிட்டன்.

இந்நிலையில், நஷீத் அண்டை நாடான இலங்கைக்கு புறப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க அரசு அனுமதி கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம், நஷீத்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.