Header Ads



சிறுபான்மை விவகாரங்கள் ஐ.நா. நிபுணர் இலங்கை வருகிறார் - முஸ்லிம்களும் முறையிடலாமே..!


சிறுபான்மையின விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வரும் ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஒக்ரோபர் 10ஆம் நாள் தொடக்கம், 20ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையின மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், புலிகளின் இனச்சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அக்கிரமஙகள், அநீதிகள் தொடர்பில் முறையிடுவதற்கு இலங்கை முஸ்லிம்களுக்கும் இது அரிய வாய்ப்பாகும்.

எனவே முஸ்லிம்கள் சார்பில் தற்போதிருந்தே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி, குறித்த நிபுணரை சந்திக்க  நேரம் காலம் ஒதுக்கிக் கொள்வது சிறந்தது.

2 comments:

  1. UN இங்கு வருவது ஜெனிவாவில் அமேரிக்காவின் தீர்மானத்திற்கு அமைவாக, இலங்கையில் இறுதியில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை மட்டும் விசாரிப்பதற்காக.

    நீங்கள் ஜெனீவாக்கு போய் என்னொரு தீர்மாணம் போட்டுப்பாருங்கள் பார்பம்.

    ReplyDelete
  2. UN does not consider anything about Human Rights of Sri Lanka.

    They already acknowledged that Sri Lanka defeated Tamil terrorism.

    ReplyDelete

Powered by Blogger.