Header Ads



இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் விமானம், ஞாயிற்றுக்கிழமை புறப்படுகிறது

இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்கும் முதல் விமானம் எதிர்­வரும் 14 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது.

இறுதி விமானம் அடுத்த மாதம் 4 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைக் கொண்டு செல்­ல­வுள்­ளது. 

இலங்கை யாத்­தி­ரி­கர்கள் தமது கட­மை­களைப் பூர்த்தி செய்து கொண்டு செப்­டெம்பர் மாதமும் அக்­டோபர் மாதம் முதல் வாரத்­திலும் நாடு திரும்­பு­வார்கள்.

சவூதி அரே­பியா ஜித்­தா­வி­லி­ருந்து இறுதி விமானம் அக்­டோபர் 7 ஆம் திகதி இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுடன் இலங்கை வந்­த­டை­ய­வுள்­ளது.

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள், முஸ்லிம் சமய கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், ஹஜ் முக­வர்கள் என்போர் இரண்டு வகை­யான உடன்­ப­டிக்­கை­களில் கைச்­சாத்­திட்டுக் கொள்­ள­வுள்­ளனர்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களும் திணைக்­க­ளமும் ஒரு உடன்­ப­டிக்­கை­யிலும் திணைக்­க­ளமும் ஹஜ் முக­வர்­களும்  ஒரு உடன்­ப­டிக்­கை­யிலும் கைச்­சாத்­தி­ட­வுள்­ளனர்.

இந்த உடன்­ப­டிக்­கை­களில் ஹஜ்­ஜா­ஜி­களின் நலன்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.

உடன்­ப­டிக்­கை­களை மீறும் ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக அரச ஹஜ் குழு நடவடிக்கைகளை எடுக்கும். குற்றவாளிகளாகக் காணப்படும் ஹஜ் முகவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்படும் என்றார். 

No comments

Powered by Blogger.