Header Ads



இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கென, தனித்துவமான பாடத்திட்டம் உள்ளதா...?

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

இலங்கையில் கடந்த ஏழு எட்டு வருடங்களாக இத்திஹாதுல் மதாரிஸ் என்று மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களை ஒன்று படுத்தி இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சையும் நடாத்தி அதில் சிறப்புச் சித்தியடைகின்ற மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களும் வழங்குகின்ற ஒரு அமைப்பு உள்ளது அதில் கிட்டத்தட்ட 220 மத்ரஸாக்களுக்கும் மேல் அங்கத்துவம் வகிக்கின்றன. 

இது ஒன்றே போதும்....
மேலதிக தகவல்களுக்கு..

இரண்டாவது - எந்த இயக்கமாக இருப்பினும் இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட  மத்ரஸாக்களுக் கென்று பொதுவான சில பாடத்திட்டங்கள் (எழுதப்படாத விதியாக) அனைத்து மத்ரஸாக்களிலும் உள்ளன. நீங்கள் அரபு படித்தவராக இருந்தால் அது இலகுவில் புரிந்து விடும்.

மூன்றாவது - இலங்கை அரபு மத்ரஸாக்கள் என்பது தனியார் நிறுவனங்களே, அவரவர் நினைத்ததை பாடத்திட்டங்களாக போட்டு படிப்பித்தாலும் யாரும்  கேள்வி கேட்க முடியாது, இவை அரசாங்க பாடசாலைகள் அல்ல எனினும் கூட  அன்று தொட்டு இன்றுவரை ஒரே  பாடத்திட்டத்தில் அனைத்து மத்ரஸாக்களும் நகருவது இதன் வெற்றியை நோக்கிய பயணமாகவே கருத முடிகிறது.

நான்காவது - இயக்கங்கள் , ஜமாதுக்கள் , மத்ஹப்கள் , என்று முஸ்லிம் சமூகம் (பிரிந்து என்று சொல்ல முடியாது) பெயர் வைத்துக் கொண்டாலும் யாரும் மத்ரஸாக்களில் வெளியான ஒருவரை மௌலவி , ஆலிம் இல்லையென்று எங்கும் கூறியது கிடையாது ஒருவர் தனது நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளவரைக் கூட அந்த மௌலவி இவ்வாறு கூறினார் என்றே ஆரம்பிப்பார் இதுவும் ஒரு சிறப்பம்சமே.

ஐந்தாவது - தப்ஸீர் , ஹதீஸ் , பிக்ஹ் ,  போன்ற விடயங்களில் ஒவ்வொரு அமைப்பும் தமக்கு விருப்பமான அறிஞர்களின் நூலை பாடத்திட்டமாக போடுவதனால் புத்தகம் வேறாயினும் கற்பிக்கும் கலைகளின் அடிப்படை அறிவு போதிக்கப்படுபவர்களுக்கு சென்றடைகிறது என்ற உண்மையை இலகுவில் புரிந்து கொள்ளலாம். 

ஆசிரியர் ஆகிய பின் மௌலவியாகுவது அரிதோ அரிது ஆனால் மௌலவியாகிய பின் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்களை எம்மால் காட்டமுடியும்.

இதிலிருந்து என்ன புரிகிறது....!!

15 comments:

  1. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரிவுகள், இயக்கங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் வழிகேடு, காபிர், முஷ்ரிக், முர்தத் என்று சொல்லும் அத்தனை நிலைமைகளுக்கும் முன்னணி வகிப்பது மெளலவிகளே. இதனை மறைத்துவிட்டு பத்தாம் பசலித் தனமாக சின்னப்பிள்ளைகளுக்கு சீனிபோளை கொடுப்பது போன்ற கருத்துக்களை எழுத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வதற்கு முயற்சிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையின் தலைப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் Mr Ameer Umad

      Delete
  2. நல்லதொரு ஆய்வு

    ReplyDelete
  3. هذا الأمر شيء هام جدا ...ولاكن مسلموا سريلانكا لا يهتمون في هذا الأمر..العلماء ليس عندهم سلطان ولا نفوذ لكي تأخذ اي إجراءات.

    ReplyDelete
  4. onnume puriya illaye sheikh..

    ReplyDelete
  5. உங்களின் கருத்து எந்தஇயக்கம் நடத்தும் மத்ரசாவில் ஓதினாலு மௌலவி பட்டம் மட்டும் கிடைத்தால் போதும் அவர் எந்த பித்அத்தை,கபுறு வணக்கத்தை,ஷிர்க்கை செய்தாலும் மௌலவி பட்டம் இருதால் சிறப்புதான் என்று சொல்கிறிர்கள் .ஆகவே உங்களை போன்றவார்களுக்கு தீனும் சமுதாயமும் எக்கேடூ கெட்டாலும் பட்டம் மட்டும் கரட்டா இருக்க வேண்டும் .அடுத்து மௌலவி ஆசிரியர்களும் பாடசாலையில் நீங்கள் எந்தந்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் என்று மத்ரசாக்களில் படித்தீர்களோ அதே குப்பையைதான் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றீர்கள் உலமாக்கள் பட்டத்துக்காக அலையாதீர்கள் உண்மையான மார்க்கப்பட்டுள்ள முஸ்லிமாக முழு மனிதனாக வாழ பழகுங்கள் உங்களின் அறிவுகெட்ட நம்பிக்கையால்தான் இலங்கையில் இஸ்லாம் வழர்வது தடைப்பட்டு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது.மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரித்தாலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது மக்கள் இஸ்லாத்தின் பக்கம் குர்ஆனையும் ஹதீஸையும் பார்த்து சாரைசாரையாக படையடுக்குறார்கள் இலங்கையில் எதனை பார்த்து வருவது அடுத்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்ப்பு செய்யும்போது அதனை தடை செய்யுமாறு நீதி மன்றங்களை நாடிய வரலாறு இலங்கையில் உள்ள சில அறிவுகெட்ட உலமாக்களையே சாரும் இஸ்லாம் இலங்கையில் வழர தடையாக இருப்பது கடந்த காலங்களிலும் தற்போதும் இலங்கையில் இருக்கும் சில உலமாக்களும் அமைப்புகளும் சபைகளும்தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் .பழமைவாய்ந்த அமைப்பு என்று சொல்லி சொல்லி மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவது மட்டுமல்லாமல் இஸ்லாம் பரவ தடையாக இருப்பதும் இவர்கள்தான் இன்னும் எழுதப்போனால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் அதனால் தவிர்கிறேன்.

    ReplyDelete
  6. உங்களின் கருத்து எந்தஇயக்கம் நடத்தும் மத்ரசாவில் ஓதினாலு மௌலவி பட்டம் மட்டும் கிடைத்தால் போதும் அவர் எந்த பித்அத்தை,கபுறு வணக்கத்தை,ஷிர்க்கை செய்தாலும் மௌலவி பட்டம் இருதால் சிறப்புதான் என்று சொல்கிறிர்கள் .ஆகவே உங்களை போன்றவார்களுக்கு தீனும் சமுதாயமும் எக்கேடூ கெட்டாலும் பட்டம் மட்டும் கரட்டா இருக்க வேண்டும் .அடுத்து மௌலவி ஆசிரியர்களும் பாடசாலையில் நீங்கள் எந்தந்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் என்று மத்ரசாக்களில் படித்தீர்களோ அதே குப்பையைதான் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றீர்கள் உலமாக்கள் பட்டத்துக்காக அலையாதீர்கள் உண்மையான மார்க்கப்பட்டுள்ள முஸ்லிமாக முழு மனிதனாக வாழ பழகுங்கள் உங்களின் அறிவுகெட்ட நம்பிக்கையால்தான் இலங்கையில் இஸ்லாம் வழர்வது தடைப்பட்டு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது.மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரித்தாலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது மக்கள் இஸ்லாத்தின் பக்கம் குர்ஆனையும் ஹதீஸையும் பார்த்து சாரைசாரையாக படையடுக்குறார்கள் இலங்கையில் எதனை பார்த்து வருவது அடுத்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்ப்பு செய்யும்போது அதனை தடை செய்யுமாறு நீதி மன்றங்களை நாடிய வரலாறு இலங்கையில் உள்ள சில அறிவுகெட்ட உலமாக்களையே சாரும் இஸ்லாம் இலங்கையில் வழர தடையாக இருப்பது கடந்த காலங்களிலும் தற்போதும் இலங்கையில் இருக்கும் சில உலமாக்களும் அமைப்புகளும் சபைகளும்தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் .பழமைவாய்ந்த அமைப்பு என்று சொல்லி சொல்லி மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவது மட்டுமல்லாமல் இஸ்லாம் பரவ தடையாக இருப்பதும் இவர்கள்தான் இன்னும் எழுதப்போனால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் அதனால் தவிர்கிறேன்.

    ReplyDelete
  7. "என்ன ஹாஜியார் நேத்து குர்பான் குடுத்தீங்களாம் எங்கட வீடும் பக்கம்தான்"
    இதுதான் ஓதிய மௌலவிமார்களின் பண்பாடு.
    உலகம் தெரியாமல் வாலிப பருவத்தை மதரஸாவில் கழித்து விட்டு வந்தால். அங்கு எவ்வாறு உணவுக்காக சண்டை பிடித்தார்களோ, அல்லது தனக்கு கிடைக்காமல் போகுமோ என்ற ஆதங்கம் ( hostel இல் படித்தவர்களுக்கு இதன் அரத்தம் புரியும்) இதெல்லாம் தான் அவர்களின் பண்புகளில் பிரதிபலிக்கும்.
    " ஹாஜியார் எங்கட வீட்டுக்கும் அப்படியே ஒரு பார்சல் அனுப்புங்கோ" வாய் கூசாமல் கேறபார்கள்.
    உதாரணமாக சாகிர் நாயக் அவர் மௌலவி ஆகிவிட்டு , படித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
    மௌலவி ஆனவிடன் அரபிகள் போல் பெரிய ஒரு thobe ( jibba) ஐ போடுக்கொள்வார்கள். இந்த ஆனடக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு? தயவு செய்து இது சுன்னா என்று சொல்ல வேண்டாம் அப்படியென்றால் 80 இலட்சம் கொடுத்து காரை இறக்குமதி செய்யாமல் ஒரு ஒட்டகத்தை இறக்குமதி செய்து அதில் பயணிக்கவும்.
    ஆகவே மதரஸாவில் இருந்து வருபவர்களிடம் இஸ்லாமிய அறிவு இருக்குமே தவிர ( அதுவும் limited to the quality of that madrasa) பண்பாடு , நாகரிகம் என்பதை எதிர்பார்க்க முடியாது.
    முடிந்தால் அதையும் மதரஸாவில் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.
    இங்கிலாந்தில் இரண்டு பாடத்திட்டங்களையும் ஒன்றாக கற்றுவிக்கும் Arabic School கள் இருக்கின்றது. இலங்கையில் இருக்கின்றதா என தெரியாது? Jamiya Naleemiya?

    ReplyDelete
  8. اانا اتفق مع عماد . هذا العالم يتكلم في الاشياء لا خير فيه.

    ReplyDelete
  9. அறிவு, விஞ்ஞானம், சிந்தனை, தகவல் தொழில்நுட்பம் எல்லாம் மிக வேகமாக முன்னேறிவிட்ட இந்த நூற்றாண்டிலும் புரோகிதத்தை காப்பாற்ற கடும் கச்டபப்ட்டு இப்படியான கட்டுரைகளை எழுதுவது கண்டிக்கத்தக்கது.

    முஸ்லிம் சமூகத்தின் அறிவியல் வீழ்ச்சிக்கும், பிளவு, பிரிவு, மத ரீதியான வன்முறைகள் அனைத்திற்கும் மூல காரணம் இந்த புரோகித முல்லாக்களே.

    இந்த உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  10. The fact is , almost all Madrasas are ORPHANAGES! Just
    because the enrols are young , they are taught religion.
    It is just like the most popular social service is,
    gifting SEWING MACHINES TO WOMEN and donating EYE GLASSES
    to the aged . Have you ever done any research on the
    performances of the Moulavis through out their life time
    to their society ? Not too late .

    ReplyDelete
  11. இஸ்லாத்தைப சரியாக படித்துக் கொள்ளாததன் விளைவுகளே கீழே தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கள்

    ReplyDelete
  12. நல்ல கட்டுரை.

    மௌலவிமார்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. Nothing to worry.

    A good scholar never put SHIEK or ALIM infront of his name by himself, But others call him SHIEK.

    Further A TRUE Scholar do not Post Himself (Photo), which itself is not suitable for a learned person of Islam.

    So .. Do not worry for above article as it not from a proper source.

    ReplyDelete

Powered by Blogger.