August 15, 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி, தவறுதலாக முஸ்லிம்க்கு கைமாறிவிட்டது - யோகேஸ்வரன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் ஆனால் அது தவறுதவாக கைமாறிவிட்டது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1.47 மில்லியன் ரூபாய் செலவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாட்டத்தில்தான் விவசாயம், மீன்பிடி, கால்நடை, உணவு பாதுகாப்பு, கூட்டுறவு போன்றவற்றை உள்ளடக்கிய கிழக்கு மாகாண அமைச்சர் இருக்கின்றார்.

அவர் எமது கட்சியைத் சேர்ந்தவர் அவ்வமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவிருக்கின்ற அமைச்சர் கி.துரைசாரசிங்கத்தைப் பயன்படுத்தி எமது மக்கள் முன்னேற்றமடைய வேண்டும்.

எமது மக்கள் அவரை உசார்ப்படுத்த வேண்டும். இல்விட்டால் அவரும் பேசாமல் இருந்துவிடுவார்.

அதுபோல் கல்வி, விளையாட்டு, மீள்குடியேற்றம் உள்ளடக்கிய அமைச்சும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம்தான் உள்ளன.

அவ்வமைச்சுக்களை வைத்திருக்கின்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணியை எமது மக்கள் நன்கு பயன்படுத்தி முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக சில அரசியல்வாதிகள் அவர்களின் அரசியலைத் தக்கவைப்பதற்காக அவர்களுக்கு வேண்டியவர்களை மையப்படுத்தியே வேலைத் திட்டங்களை மேற்கொள்வார்கள்.

அது ஒரே கட்சியாக இருந்தாலும் இவ்வாறுதான் நடைபெறும். கிராமங்களிலுள்ள பல தேவைகளை மாகாணசபை மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ஒருசில அதிகாரங்கள் மாகாண சபைக்கு கொடுக்காமலிருந்தாலும், மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அதனைப்பயன்படுத்தி மக்களின் தேவைகளை மாகாணசபை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மத்திய அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சியாக இருந்தலும், அவர்களிடம் வாதிட்டு மக்களின் தேவைகள் சிலவற்றை நிவர்த்தி செய்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதி அபிவிருத்தியிலே பாரிய பின்னடைவை எதிர் கொண்டிருக்கின்றது. ஆனாலும் நாம் அதனை அப்படியே விட்டு விடமாட்டோம். எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளத் தாயாராகவிருக்கின்றோம்.


நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்கப்பட்டுவரும் சிறு உதவிகள் மக்களுக்கு போதாது. இருந்த போதிலும் எம்மால் முடிந்த உதவிகளை மேற்கொள்ள நாம் பின் வாங்கப்போவதில்லை.

அரசாங்கத்தை நாம் பயன்படுத்தி உதவிகளைப் பெற்று எந்தளவிற்கு எமது பகுதிகளை அபிவிருத்தி செய்யமுயுமோ அவற்றைச் செய்வதற்குத் நாம் தயாராகவுள்ளோம்.

ஆன்மீகம் வளர்க்கப்பட வேண்டும். அதுபோல் எமது மக்களின் வாழ்வாதாரமும் வளர்க்கப்பட வேண்டும். இதற்காக வேண்டி கிழக்கு மாகாண சபையையும், மத்திய அரசாங்கத்தையும் எமது மக்கள் நன்கு பயன்படுத்தி அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான். ஆனால் அது தவறுதவாக கைமாறிவிட்டது.

ஆனாலும் தற்போது கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக்கட்சியாகவிருந்து 2 அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 கருத்துரைகள்:

யாருக்கு எது கிடைக்கனுமோ அதுதான் நடந்து்ள்ளது,தவறு எதுவும் நடக்கவில்லை

Hon Yogeswaran,

Hon Sir,

You do not like to have the CM of the EP from the Muslim Community and try to tell us it is a mistake. Having that idea in your mind, how can you can you expect the Muslim community to agree for a merged North-East Province. Do you know the Muslims are the majority in two districts - Ampara and Trincomalee out of three districts in the Eastern Province and they are entitle for the CM position of the Eastern Province? Please refrain from limit less voice and put the Tamil-Muslim unity under ???.

Appadi kuduttittaaa ellar nettiyilum intha vellai kodaithaan pooosiduveenga MP ayyar saar!!

ஆன்மீகத்தை வளங்க ஆனால் விதண்டாவாதத்தை வளக்காதிங்க

Post a Comment