Header Ads



'கொண்டம்' வழங்கப்படும் என்றார் ராஜித - இப்பொழுது இருக்கா, தருவீர்களா? என்றார் விமல்

-Tm-

இலங்கையில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து சில தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு, எச்.ஐ.வி தொற்றுப் பரவுவதை தடுப்பதற்காக, மூன்று முறைகளைக் கையாள்வதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் "கொண்டம்" கொடுப்பதும் ஒரு முறையாகும்' என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில், (23), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இலங்கை சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு மத்தியில் எச்.ஐ.வி அல்லது வேறு சமூக நோய்கள் பரவியுள்ளதா என்பது தொடர்பிலான கேள்விகள் கேட்கப்பட்டது. அக்கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், 

'அவ்வாறானவர்களுக்கு எச்.ஐ.வி அல்லது வேறு சமூக நோய்கள் பரவியுள்ளன. இது சுற்றுலாத்துறையில் நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேற்படி ஆட்களுக்கு மத்தியில், எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களில் 20பேர் இனங்காணப்பட்டுள்ளனர். 2014ஆம் ஆண்டு 07 பேரும் 2015ஆம் ஆண்டு 05 பேரும் 2016ஆம் ஆண்டில் 08 பேருமென, 20 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்' என்றார். 

'சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு, எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில்,  சுற்றுலாத்துறையினரை வழிநடத்துவோருக்கு எச்.ஐ.வி பரிசோதனை நடத்துதல் மற்றும் கொண்டம் வழங்குதல், இரத்த பரிசோதனைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன' என்றும் அமைச்சர் மேலம் கூறினார். 

அமைச்சர் அளித்த பதிலில், 'கொண்டம்' வழங்கப்படும் என்று கூறியமையால், சபையில் சிரிப்பொலி எழுந்தன. இதன்போது,  'இப்பொழுது இருக்கா, இந்த நேரத்தில் தருவீர்களா? என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச சத்தமாகக் கேட்டார். 

No comments

Powered by Blogger.