Header Ads



"வடக்கின் அரசியல்வாதிகள், அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைக்கின்றார்கள்"

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போது விச ஊசி ஏற்றப்படவில்லை என அரசாங்க சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் விச ஊசி ஏற்றப்பட்டதாக செய்யப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளில் ஒருவரான நிமலாநந்தன் என்பவர் கூறியுள்ளார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும், இது குறித்து சர்வதே விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு இது குறித்து கருத்து வெளியிட்ட விமலானந்தன். நெலுக்குளம் புனர்வாழ்வு மையத்தில் சுமார் 1300 பேர் தங்கியிருந்தோம்.

உணவு வகைகளை நாமே சமைத்து உண்டோம். வெளியிலிருந்து உணவு கொண்டு வரப்படவில்லை. எம்மைப் போன்றே எம்மை பார்த்துக்கொண்ட படையினரும் நாம் சமைக்கும் உணவையே சாப்பிட்டார்கள்.

நான் 23 மாதங்கள் 20 நாட்கள் புனர்வாழ்வு மையத்தில் தங்கியிருந்தேன். எனினும் இவ்வாறான விச ஊசியோ அல்லது மாத்திரைகளோ வழங்கப்படவில்லை என்பதனை என்னால் பொறுப்புடன் கூற முடியும்.

வடக்கின் சில அரசியல்வாதிகள், அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கில் இனவாதத்தை விதைக்கும் ஊடகங்களுமே இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றன.

எனக்குத் தெரிந்த வகையில் அவ்வாறான ஊசி எதுவும் ஏற்றப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லிணக்கத்தை விரும்பாத தரப்பினரும் கூறும் இவ்வாறான கட்டுக்கதைகளை மக்கள் நம்பக் கூடாது என விமலானந்தன் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Appa nammantra BBSum ivar solvathai pontruthane.sollinam.

    ReplyDelete
  2. திரு நிமலானந்தன் நீங்கள் கூறுவதுபோல உண்மையாக இருந்தால் உங்கலை போன்ற இண்னும் பல பேர் இருப்பார்கள் அவர்களை கொண்டு உண்மையை வெளிப்படுத்துங்கள்
    இல்லையே உங்கலையும் பொய்வாதியேன்று முத்திரை குத்துவார்கள்,
    ஏன் என்றால நீங்கள் கூறியது போல்தான் இன்று வடமாகாண அரசியல் பலிவாங்கள் நடந்து
    கொண்டு இருக்கின்றது நீங்கள் கூறியது பொள் இன வாதமும் நடந்து கொண்டுள்ளது,
    இதற்கெல்லாம் காரணம் அரசியல் வங்கரோத்துதான் இதை நீங்கள் பலமாக பகிரங்கப்படுத்துங்கள்,

    ReplyDelete
  3. கனவு ஈழதேசத்திற்காகவும், சமஸ்டி எனும் வெத்து கோசத்திற்காகவும் இன்னும் எத்தனை பொய்களை அவிழ்த்துவிடுவார்களோ இந்த பிரிவினைவாதிகள். இவர்களிடம் ஆரம்பத்தில் இருந்து உண்மை இல்லை. அதனால் தான் அனைத்திலும் இன்றுவரை தோல்வியை ருசித்துக்கொண்டுள்ளனர்

    ReplyDelete

Powered by Blogger.