Header Ads



இது மனித நேயம்மடா..!

ரியோவில் கடந்த 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் வட்டு எறிதல் போட்டியில் போலந்து நாட்டின் பியோட்ர் மாலாசொவ்ஸ்கி 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

இவருக்கு ஒலெக் என்ற 3 வயது சிறுவனின் தாயார் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தனது மகள் கண் புற்றுநோயால் கடந்த இரண்டு வருடங்கள் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு நியூயார்க்கில் சிகிச்சை அளித்தால் நோய் குணமடைய வாய்ப்புள்ளது. ஆகவே, தாங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இதனால் 3 வயது சிறுவனுக்கு உதவ மாலாசோவ்ஸ்கி முடிவு செய்தார். அதன்படி தனது ரியோ பதக்கத்தை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை சிறுவனின் சிகிச்சை செலவிற்காக கொடுக்க முன்வந்தார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் இணைய தளத்தில் கருத்து பதிவு செய்தார். அதில் ‘‘நான் ரியோவில் தங்கம் பதக்கத்திற்காக போராடினேன். இன்றைக்கு, விலைமதிப்பற்ற ஒரு உயிருக்காக ஒவ்வொருவருக்கும் நான் அழைப்பு விடுத்து போராடுகிறேன்.

நீங்கள் எனக்கு உதவி செய்தால், என்னுடைய சில்வர் பதக்கம் தங்க பதக்கத்தை விட ஒலெக்கிற்கு சிறந்ததாக அமையும். இதில் கிடைக்கும் பணம் அந்த சிறுவனின் சிகிச்சை பெரிய உதவியாக இருக்கும்’’ என்று எழுதியிருந்தார். மேலும், இன்று அந்த பதக்கம் ஏலம் விடப்படும் என்றும் கூறியிருந்தார்.

பின்னர், ‘‘வெற்றி’’ என்னுடைய பதக்கத்தை ஒருவர் ஏலம் எடுத்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

சிறுவனுடைய சிகிச்சைக்காக தன்னுடைய பதக்கத்தை ஏலத்தில் விட்ட போலந்து வீரர் கோடான கோடி மக்களின் இதயத்தில் பதிந்து விட்டார். இந்த செய்தி இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும் தெரிய வந்தது.

இதுகுறித்து அறிந்த ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மனித நேயம், அந்த சிறுவனன் ஆசிர்வாதத்தால் நீங்கள் இன்னும் ஏராளமான பதக்கங்களை கைப்பற்றுவீர்கள். என்றாலும், இது உங்களுடைய சிறந்த பதக்கம்’’ என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.