August 21, 2016

வஹியைக் கற்ற உலமாக்களும், வேறு துறைசார் நிபுணர்களும் சமமானவர்களா..?

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

உலமா என்ற அறபுச் சொல் மொழிரீதியாக அனைத்து துறைசார் நிபுணர்களையும் ( காபிர்கள் , கிறிஸ்தவர்கள் , யூதர்கள் ) உள்ளடக்கிக் கொண்டாலும் குறித்த ஒரு சமூகத்தின் வழக்காறின் அடிப்படையிலோ வஹியின் ஆழமான புரிதலின் அடிப்படையிலோ எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதனை சரியாக தெரிந்து கொள்வது அவசியமாகும். 

உதாரணமாக முஸ்லிம் என்றால் யார் ? 
மொழி ரீதியாக கட்டுப்படுபவன் என்று பொருள்படும் அவன் கிறிஸ்தவனாக இருந்தாலும் அவனது மதத்திற்கு கட்டுப்படும் போது அவனும் முஸ்லிமே.. ஆனால் குர்ஆன் ஸுன்னாவின் ஒளியில் முஸ்லிம்கள் என்றால் அல்லாஹ்விற்கு மாத்திரம் கட்டுப்படுபவர்கள் என்றே பொருள் கொள்கிறோம். 

வஹியின் அடிப்படையில் நோக்கும் போது அல்குர்ஆன் ஸுன்னாவை கற்றுக் கொண்டவர்களையே அது உலமாக்கள் என்ற பதத்தினூடாக அடையாளப்படுத்துகிறது "அல்லாஹ்வை அவனது அடியார்களில் அதிகம் அஞ்சுபவர்கள் உலமாக்களே" 

தான் பெற்ற அறிவு அல்லாஹ்வை அஞ்ச வைக்குமாக இருந்தால் அந்த அறிவு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முழுமையாக படிப்பதினூடாகவே சாத்தியமாகும்.

கணக்கியல் ஆய்வாளரோ , விஞ்ஞானியோ , வரலாற்று ஆய்வாளரோ தமது சொந்த துறைசார் ஆய்வினூடாக ஒரு பொழுதும் அல்லாஹ்வை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது அவர் குர்ஆனை சுன்னாவை முறையாக கற்றுக் கொண்டாலே தவிர .

சூறதுல் பாதிஹாவையே ஒழுங்காக ஓதத்தெரியாத அதன் அர்த்தம் புரியாத ஒரு முஸ்லிம் இலக்கிய வாதியால்  அந்த இலக்கியத்தின் மூலம் அல்லாஹ்வைப் புரிந்து அல்லாஹ்வை அவன் சொன்ன முறைப்படி  அஞ்சிவிட முடியமா ?

அல்லது அவரையும் ஒரு ஆலிம்தான் என்று இமாமத் செய்யவோ, மக்களுக்கு வஹியை கற்றுக் கொடுக்கவோ,  மார்க்க உபதேசம் புரிவதற்கோ தப்ஸீர்களான ( தபரி , இப்னு கதீர் , குர்துபி , பைழாவி , துர்ருல் மன்தூர் , கஷ்ஷாப், ரூஹுல் மஆனி .....  ) போன்ற நூற்களை கற்றுக் கொடுக்க மத்ரஸாக்களில் உஸ்தாதாகவோ நியமிப்பீர்களா ?

சரி ஹதீஸ் நூற்கள் குதுபுஸ் ஸித்தா உற்பட ( முஸ்னத் அஹ்மத் , முஸ்னத் அபூ தாவுத் , தாரகுத்னி , பஸ்ஸார் , தபராணி , பைஹகி....... போன்ற நூற்களை கற்றுக் கொடுக்க மத்ரஸாக்களில் உஸ்தாதாக நியமிப்பீர்களா ?

புஹாரியின் 600 க்கும் மேற்பட்ட விரிவுரை நூற்களின் பெயர்களாவது ( பத்ஹுல் பாரி என்ற பெயரில் உள்ள மூன்று விரிவுரை நூற்கள் உற்பட , இர்ஷாதுஸ் ஸாரி , உம்ததுல் காரி , பைழுல் பாரி , இன்ஆமுல் பாரி ..... ) அவர்களுக்கு தெரியுமா ? 

விரிவஞ்சி வஹியின் இந்த இரண்டு அடிப்படைக் கலைகளோடு மட்டும் சுருக்கிக் கொள்கிறேன். 

தஹஜ்ஜுதிலிருந்து மறுநாள் வித்ரு வரை  கால அல்லாஹ் , கால ரஸூலுல்லாஹ் என்றே தனது பத்து, இருபது , முப்பது , வருடங்களை அல்லாஹ்வோடும் அவனது தூதரோடும் வாழும் உலமாக்களோடு கால  அல்லாஹ் என்று வரும் பதத்திலுள்ள அல்லாஹ் என்ற சொல்லின் லாமை தப்ஹீமாக உச்சரிப்பதா ? தர்கீகாக உச்சரிப்பதா என்று கூட தெரியாதவர்களுடன் ஒப்பிடுவதை புத்தியள்ள ஒருவரால் ஜீரணிக்க முடியுமா ?

வஹிக்கு மேற்கு சாயம் பூசாமல் வஹியை வஹியின் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம். 

குறிப்பு - பயனுள்ள கல்விகள் எந்த பெறுமானமும் அற்றது என்று சொல்லவரவில்லை, அதற்கு கொடுக்க வேண்டிய இடத்தை கொடுப்போம் , எதனை எந்த இடத்தில் வைக்க வேண்டுமே அதனை அந்த இடத்தில் வைப்போம் என்பதே எனது கருத்து.

19 கருத்துரைகள்:

வஹியை படித்து அதனை வயிறு வளர்க்க உலக சுகத்துக்காக பயன் படுத்தும் உலமாக்களை விட

வேறு துறையில் படித்தவர்களோ படிக்காதவர்களோ இஸ்லாத்தை வளைத்து பணம் சம்பாதிக்காதவர்கள் 100 மடங்கு சிறந்தவர்கள்

கட்டுரையின் படி தற்காலத்தில் அல்லாஹ்வை அஞ்சும் உலமாக்களை காண்பது மிகவும் அரிது எல்லாம் வேஷம்

ஒரு வடை கடைக்காரனுக்கு இருக்கும் அச்சம் கூட இன்றைய உல மாக்களுக்கு இல்லை என்பதை சமூகத்தில் காணலாம்

ஷேக் அவர்களின் கருத்து எட்டு வருடம் மதரசாவில் ஓதியவர்கள் மட்டும்தான் இஸ்லாம் பற்றி பேச வேண்டும் மற்றவர்கள் பேசக்கூடாது என்பதாக இருக்கிறது.மதரசாக்களில் கற்றுக்கொடுக்க வேண்டிய முறையும் சாதாரண மாக இஸ்லாத்தைப்பற்றி பிரச்சாரம் செய்வதும் சமனாக மாட்டாது என்பது எல்லோருக்கும் புரியும் அதன் காரணத்தால் உலமாக்களை தவிர யாரும் தீன் சம்மந்தமான விடயங்களை வாய் திறக்க கூடாது தொனியில் இவர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.எட்டு வருடம் மதரசாவில் ஓதி முடித்த உலமாமை விட அதிகமான தக்வாவுடனும்,இஸ்லாமிய அறிவுடனும் ,குர் ஆண் ஹாதீஸ் ஞாபகம் இருக்கக்கூடியவர்களும்,பேச்சு திறமை உள்ளவர்களும் உலாமா இல்லாதவர்கள் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்கள் மார்க்கத்தைப்பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.இவரின் கருத்துப்படி பார்த்தால் மௌலவிகள் மட்டும் தான் மார்க்கப்பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றொரு கட்டுப்பாடு இருந்தால் இஸ்லாத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் வித்தியாசம் இல்லை.ரசூலுல்லாஹ் சொன்னார்களே என்னை தொட்டும் ஒரு வார்த்தை தெரிந்தால் அதனை எத்தி வைக்கும் படி அது எவ்வாறு சாத்தியமாகும்?அந்நிய மதங்களைப்போன்று மதப்போதகர்களை கடுமையாக உச்சத்து உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது இஸ்லாம் ஆகாது.எவ்வாறு வரக்கூடாது என்ற காரணத்தால் நபியவர்கள் தன தோழர்களை மாணவர்கள் என்று பாராமல் தோழர்கள் என்ற பதத்தோடு சேர்த்து வைத்தார்கள்.எட்டு வருடம் தஹஜ்ஜத்தொடு என்ற வார்த்தைகளை பாவித்துள்ளார்.அவ்வாறென்றால்.மதரசாவில் ஓதாத பிள்ளைகள் தாய் தந்தையாரின் வழி காட்டலில் சிறு வயதில் இருந்து தஹஜ்சத் தோலும் பழக்கம் உள்ளவர்கள் உண்டு.அமல்களை கொண்டு அறிவை அளக்க முடியாது அதேவேளை அர்வைக்கொண்டும் தக்வாவை அளக்க முடியாது,அல்லாஹ் அறிந்தவன்.உலமாவாகவும் இருந்து அமலும் செய்து த்க்வாவோடும் இருந்தால் அவர்களை மரியாதக்குரியவர்களாக பார்ப்பதற்கு நிலைமைகளை ஏற்படுத்துவது அல்லாஹ் ஒருவனே.தக்வாவை யாராலும் அளக்க முடியாது.நான் தக்க்வாதாரி ,நான் உலமா,நான் வானக்கவாளி,என்று மரியாதையை எதிர் பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தோடு மரியாதையாக நடந்து கொள்வதுதான் இஸ்லாம் யாருக்கும் யாரும் தனியாக மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றால் அது அந்நிய கலாச்சாரத்தை கலக்க சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தும்.உலகில் எல்லோரும் மரியாதைக்கு உரியவர்கள்தான்.அதேவேளை கல்வி உள்ளோருக்கு சிறப்பு உண்டு.அதனை அவர்கள் கண்ணியமாக வைத்திருக்கும் வரைதான்.

هذه الآية لفتة كونية عجيبة من اللفتات الدالة على مصدر هذا الكتاب، تبدأ بإنزال الماء من السماء، وإخراج الثمرات المختلفات الألوان، ثم تنتقل إلى ألوان الجبال، ففي ألوان الصخور شبه عجيب بألوان الثمار وتنوعها وتعددها، واللفتة إلى ألوان الصخور وتنوعها داخل اللون الواحد، تهز القلب هزا وتوقظ فيه حاسة الذوق الجمالي العالي بما يستحق النظر والالتفات، ثم ألوان الناس، وهي لا تقف عند حد، وكذلك ألوان الدواب والأنعام، ذات الألوان والأصباغ العجيبة كلها معروضة للأنظار في هذا الكتاب الكوني، الجميل الصفحات العجيب في التكوين والتلوين.....يفتحه القرآن الكريم، ويقلب صفحاته ويقول: إن العلماء الذين يتلونه ويدركونه ويتدبرونه هم الذين يخشون الله حق خشيته:إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ....والعلماء هم الذين يتدبرون هذا الكتاب العجيب، ومن ثم يعرفون الله معرفة حقيقية، يعرفون بآثار صنعته، ويدركون بآثار قدرته، ويستشعرون حقيقة عظمته برؤية حقيقة إبداعه، ومن ثم يخشونه حقا، ويتقونه حقا، ويعبدونه حقا، لا بالشعور الغامض الذي يجده القلب أمام روعة الكون.
ومما سبق يتبين لنا أن العلماء الذين يقرأون آيات الله المنزلة في كتابه العظيم والذين يتأملون في آيات الله المبثوثة في هذا الكون هم الذين يخشون الله حق الخشية ويقدرونه حق قدره.
والله أعلم.

هذه الآية لفتة كونية عجيبة من اللفتات الدالة على مصدر هذا الكتاب، تبدأ بإنزال الماء من السماء، وإخراج الثمرات المختلفات الألوان، ثم تنتقل إلى ألوان الجبال، ففي ألوان الصخور شبه عجيب بألوان الثمار وتنوعها وتعددها، واللفتة إلى ألوان الصخور وتنوعها داخل اللون الواحد، تهز القلب هزا وتوقظ فيه حاسة الذوق الجمالي العالي بما يستحق النظر والالتفات، ثم ألوان الناس، وهي لا تقف عند حد، وكذلك ألوان الدواب والأنعام، ذات الألوان والأصباغ العجيبة كلها معروضة للأنظار في هذا الكتاب الكوني، الجميل الصفحات العجيب في التكوين والتلوين.....يفتحه القرآن الكريم، ويقلب صفحاته ويقول: إن العلماء الذين يتلونه ويدركونه ويتدبرونه هم الذين يخشون الله حق خشيته:إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ ....والعلماء هم الذين يتدبرون هذا الكتاب العجيب، ومن ثم يعرفون الله معرفة حقيقية، يعرفون بآثار صنعته، ويدركون بآثار قدرته، ويستشعرون حقيقة عظمته برؤية حقيقة إبداعه، ومن ثم يخشونه حقا، ويتقونه حقا، ويعبدونه حقا، لا بالشعور الغامض الذي يجده القلب أمام روعة الكون.
ومما سبق يتبين لنا أن العلماء الذين يقرأون آيات الله المنزلة في كتابه العظيم والذين يتأملون في آيات الله المبثوثة في هذا الكون هم الذين يخشون الله حق الخشية ويقدرونه حق قدره.
والله أعلم.

'(நபியே) நீர் கூறும்: "அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள்தாம்."' (39:9)

'(நபியே) நீர் கூறும்: "அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள்தாம்."' (39:9)

Good and correct answer.

an article without any direction. Those books quoted are related to their area of study. Same applies to other professions also.

We can't appoint a sheikh to teach medicine in University or to teach accounting in a professional studies.

I'm not saying both are equal. Islam has never said not to peruse the knowledge other than Al Quran and Sunnah. in fact it raises the curiosity of the reader by raising questions of various creatures of Allah. Our ignorance and the search of truth by other communities has led to the remarkable achievements in the areas of science, physics, medicine by none Muslims and our community lagging behind.

Please don't write crap just because you've a pen and a paper, sometime it stinks.

This comment has been removed by a blog administrator.

I am not an Aalim. But- just to answer your Q: When you just say Allah, it is Thafgheem. If it is proceeded by Harful jarr or Mudhaf, then it is Tharqeeq. Ie. Bisamillahi,Billahi. If the Aalim in SL teach these, why should this be a Q??. Al Islam lysath birijaal. Anyone can challenge ACJU.

As usual Jaffna Muslim didn't publish my comment.
Photos பற்றி ஏதாவது ஹதீஸ் உண்டா ஷேக்கு அவர்களே?

@ haha Mafaz. It certainly does stink. If you give pen and paper to an attention seaker this is how it's going to be. This article more of self publicity than about Islamic scholars and learned scholars. One should ask what is this article got to do with his picture ? And Islam says about pictures? And self proclaim of who he is.

Nebosh , Mustafa Jawfer , Mafaz ,Hats off to you guys !

These Ulamas are becoming a kind of Mafia ! They are the
ones who are preaching to Muslims how to be hypocrites .
They are wrongly thinking about themselves and behaving
like God-sent saints among vulnerable uneducated Muslims.
In Srilanka , free education and liberal economy have
created professionals and business opportunities for its
citizens and not Ulemmas or monks ! Ulemmas and Monks are
dependent on people benefitting from these systems while
being ungrateful to the system and furthermore there are
Muslims and non Muslims who know better and more about
religions in our society . And there are millions of
people more civilized and more respectful to all human
beings irrespective of religious bias. The world is
more advanced today . You can not see this because you
think only what you know is the whole world .You are,
knowingly or otherwise , acting against the interest of
Muslims by preaching one thing and practicing another
and trying to claim you are the best in knowledge .

Don't comment like a munafic.

Dr,ABDUL WAHAB நீங்கள் உங்களை Dr போட்டு Doctor என்ற பொருள் பட பெயர் சூட்டி எழுதியுள்ள நிலையில் நீங்கள் உண்மையான அந்தப் பதவிக்கு உரியவரா என்பது அல்லாஹ் அறிந்தவன்.உங்களின் பின்னூட்டம் ஒரு படித்துப் பட்டம் பெற்ற நாகரிகமான ஒரு சராசரி மனிதனின் அறிவுள்ளவன் போன்று எழுதப்படவில்லை இவ்வாறு அநாகரிகமாக பொது இணையதளம் ஒன்றில் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த காட்டுமிராண்டிகளும் இப்படி எழுதி இருக்க மாட்டான் மற்றவர்களின் குறைகளை எழுதமுன் தனது குறை என்னவென்பதை மண்டையில் போட்டு யோசித்து எழுத வேண்டும் குற்றங்கள் குறைகளை சுட்டிக் காட்ட பொதுவான வழி முறைகள் உண்டு அதை பின்பற்றி நாகரிகமாக எழுத வேண்டும் நாம் தட்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் மறுமையில்கேள்வி கணக்கு உண்டு என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் JAFFNA MUSLIM இவ்வாறான அநாகரிகமான பின்னூட்டங்களை தயவுசெய்து பதிவிடுவதை தவிர்த்து கொள்வது மிகச்சிறந்தது.

Munafic = hypocrisy . That is the point of my comment
to the article. You better learn a bit more about
how to understand a different point of view without
bias .

Instead of writing this whole crap, Sheikh could have just written the note written in the end, which is the only thing making sense.

Post a Comment