Header Ads



தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக, பொதுபல சேனா வழக்கு ஒத்திவைப்பு

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொது பல சேனா தாக்கல் செய்துள்ள மத நிந்தனை வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு (SLTJ) எதிராக பொது பல சேனா தாக்கல் செய்த மத நிந்தனை குற்றச்சாட்டு வழக்கு எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொது பல சேனா சார்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (04.08.2016) கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜமாஅத்தின் தலைவர் சகோ. ரியாழ், செயலாளர் சகோ. அப்துர் ராசிக், துணை தலைவர் சகோ. பர்சான், பொருளாளர் சகோ. ரிழ்வான் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் இணையதள பொறுப்பாளர் சகோ. தவ்சீப் அஹ்மத் ஆகியோர் விசாரனைக்கு ஆஜரானார்கள்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள்  குழு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழக்கில் ஆஜரானார்கள்.

வழக்கின் மேலதிக விசாரனை 15.12..2016ம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

-ஊடகப் பிரிவு தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

No comments

Powered by Blogger.