Header Ads



கோவில் நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ள முஸ்லிம்கள், உடனடியாக காலி செய்ய வேண்டும் - அரசு கெடு விதிப்பு

கோவில் நிலங்களை குத்தகை எடுத்துள்ள தலித் மற்றும் முஸ்லீம் விவசாயிகள் அந்நிலங்களை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் என ஆந்திர அரசு கெடுபிடி விதித்துள்ளது. 

ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கலயா ராவ் மற்றும் முதன்மை செயலர் ஜெ எஸ் வி பிரசாத் ஆகியோர் இதனை அறிவித்துள்ளனர்.

அமைச்சர் மாணிக்கலயா ராவ் பாஜக வில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு வந்தவர்.

மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு முஸ்லீம் ஐக்கிய முன்னணி முக்கிய பிரமுகர் ஹபீபுர்ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குண்டூர் ஜும்மா மஸ்ஜிதிற்கு சொந்தமான கடைகளில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் அல்லாத சகோதர்கள் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.

இது போல நாடெங்கும் உள்ள மத நிறுசனங்களுக்கு உட்பட்ட சொத்துக்களில் மத மாச்சரியம் இன்றி எல்லா மக்களும் பங்கு பெற்று வரும் நிலையில் ஆந்திர அரசின் இந்த அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்கிறார் அவர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ரகுராம் கோயிலில் 1200 ஏக்கர் விவாசாய நிலத்தில் 1568 குத்தகை தரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதில் 204 பேர் தலித்துகள், 199 பேர் முஸ்லிம்கள் 5 பேர் பழங்குடியினர்

குண்டூரில் உள்ள வேணுகோபால் சாமி கோயிலுக்கு சொந்தமான 800 ஏக்கர் விவசாய நிலங்களில் கணிசமான முஸ்லீம் மற்றும் தலித் குத்தகை தாரர்கள் உள்ளனர்.

அனைவரும் குறித்த காலத்தில் வெளியேறாவிட்டால் காவல்துறை உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே காரணத்துக்காக பாஜக போல் நடப்பது என்ன நியாயம் என கொதிக்கின்றனர், முஸ்லிம்கள்.

இந்து அற நிலையத்துறை மீது நீங்கள் காட்டும் அக்கறையை லட்சக்கணக்கான கோடிகளுக்கு பெறுமதியான வக்ப் சொத்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆட்டையை போடும் முஸ்லீம் அல்லாத சக்திகளிடம் இருந்து மீட்டுத்தர தயாரா ?

அவ்வாறே தலித் மக்களுக்கே சொந்தமான பஞ்சமி நிலங்களை அபகரித்து வைத்து இருக்கும் தலித் அல்லாத ஆதிக்க சக்திகளிடம் இருந்து தலித் மக்களுக்கே பெற்று தரத்தயாரா ? என்ற கேள்விகளுக்கு மோடியின் நண்பர் நாயுடு பதில் தரட்டும்

No comments

Powered by Blogger.