August 28, 2016

முஸ்லிம் மாண­வர்கள் மைத்­தா­னத்தை, பயன்­ப­டுத்த பொலிஸார் தடைவிதிப்பு

 (யு.எல்.முஸம்மில்)

மும்­மான்ன முஸ்லிம் வித்­தி­யா­லய மாண­வர்கள் 38 வரு­டங்­க­ளுக்கு மேலாக பயன்­ப­டுத்­தி­வந்த பாட­சாலை விளை­யாட்டு மைத்­தா­னத்தை பயன்­ப­டுத்த பொலிஸார் தடை­வி­தித்­துள்­ளனர். 

கடந்த சில வாரங்­க­ளுக்கு மேலாக குரு­நாகல் மும்­மான்ன முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்­துக்­கு­ரிய விளை­யாட்டு மைதானம் தொடர்பில் சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே முறுகல் நிலை தொடர்ந்­தது.

இதனை ஊர் பிர­மு­கர்கள் ஒன்­றி­ணைந்து முடி­வுக்கு கொண்­டு­வர முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் கை­கூ­ட­வில்லை. மும்­மான்ன முஸ்லிம் மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை முற்­றாக இல்­லா­தொ­ழிக்கும் நோக்­கிலும் இன­வா­திகள் பாரிய முயற்­சியை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இதனால் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சியடைவதுடன் இன­வா­திகள் சமா­தா­ன­மாக வாழ்­வ­தற்கு விரும்­பா­த­வர்­க­ளா­க அவர்­க­ளது செயற்­பா­டு­களை தொடர்கிறது. 

இந்­நி­லை­யி­லேயே கடந்த பத்தாம் திகதி மேற்படி முறுகல் நிலை உரு­வா­கி­யுள்ள மும்­மான்ன முஸ்லிம் கிரா­மத்தை அண்­டிய விகா­ரை­யொன்றில் ஞான­சார தேரர் பங்­கேற்கும் மத வழி­பாட்டு நிகழ்­வொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

ஞான­சார தேரர் சர்­சைக்­கு­ரிய விட­யங்கள் எத­னையும் அன்­றைய தினம் அவ­ரது உரையில் தெரி­விக்­கவும் இல்லை. முஸ்லிம் மக்கள் எதிர்­பார்த்­தது போன்று எந்­த­வித அசம்­பா­வி­தங்­களும் நிக­ழ­வில்லை. 

அதனால் பிர­தேச முஸ்­லிம்கள் சற்று நிம்­மதி பெரு­மூச்­சு­விட்­டனர். எனினும் இந்தப் பிரச்­சினை இன்னும் முற்றுப் பெற­வில்லை என்­ப­தற்கு சான்­றா­கவே நேற்று முன்­தினம் கல்விக் காரி­யா­லயம் ஊடாக மைதானத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்­பாக பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்க உறுப்­பி­னர்கள் தெரி­வித்­த­தா­வது,

கடந்த 24 ஆம் திகதி வழமை போன்று மாண­வர்கள் உடற்­ப­யிற்சி நேரத்தில் விளை­யாட்டு மைதா­னத்­துக்குச் சென்று அவர்­களின் வழ­மை­யான பயிற்­சியில் ஈடு­பட்­ட­துடன் சில மாண­வர்கள் அங்­கி­ருந்த காடு­க­ளையும் துப்­பு­ரவு செய்­துள்­ளனர்.

இதனை ஒரு சிலர் தூர இருந்து வீடியோ செய்­துள்­ள­துடன் பொலி­ஸா­ருக்கும் தகவல் வழங்­கி­யுள்­ளனர்.

இது தொடர்­பாக கிரி­யுல்ல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பாடசாலை அதி­பரை தொடர்பு கொண்டு வின­வி­யுள்­ள­துடன் சற்று நேரத்தில் பொலி­ஸாரும் பாட­சா­லைக்கு வந்­தனர். அவர்­க­ளது கோரிக்கை பிரச்­சினை ஏற்­படும் வகையில் நடந்து கொள்ள வேண்­டா­மென்­பது.

அத்­தோடு அதன் பின் அங்கு விஜயம் செய்த உத­விக்­கல்விப் பணிப்­பாளர் பதிவுப் புத்தகத்தில் “பாட­சாலை மைதானம் தொடர்­பாக சர்ச்சை நில­வு­வதால் பாட­சாலை மாண­வர்­களோ ஆசி­ரி­யர்­களோ ஊழி­யர்­களோ பாட­சாலை மைதா­னத்­துக்கு போக வேண்­டா­மென்று அதி­ப­ருக்கு  ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன்” என எழுதியுள்ளார்.

மும்­மான்ன பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கென ஒரு மைதானம் இல்­லாத நிலையில் சர்­சையை தீர்த்­து­வைக்­காது கல்வித் திணைக்­க­ளமும் பொலி­ஸாரும் நடந்து கொள்ளும் முறை நியா­ய­மா­னதா என பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்கம் கேள்வி எழுப்புகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment