Header Ads



புத்தகங்களை மஹராக கேட்ட, இஸ்லாமியப் பெண்


கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவரிடம் புத்தகங்களை வரதட்சணையாகக் கேட்டுள்ளார்.

இஸ்லாமியர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது மணப்பெண் கேட்கும் வரதட்சணையை மணமகன் வீட்டார் கொடுப்பது வழக்கம். இதன்படி பெரும்பாலானோர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களையே கேட்டு வாங்குவார்கள்.

இதிலிருந்து வித்தியாசமாக கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் சாலா நெச்சியில் தனது கணவரிடமிருந்து புத்தகங்களை வரதட்சணையாக் கேட்டுள்ளார்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்ற சாலாக்கும் அனீஸ் நடோடி என்பவருக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது தனக்கு வழங்க வேண்டிய வரதட்சணையாக, இலக்கியம் மற்றும் அரசியல் குறித்த 50 புத்தகங்களை சாலா கேட்டுள்ளார்.

மணமகன் அனீசும், சாலா கேட்ட புத்தகங்களை பெங்களூரில் உள்ள கடைக்குச் சென்று தேடித்தேடி வாங்கியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த சாலா, 

தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தங்களது திருமணம் நடைபெற்றதை வெளி உலகுக்கு தெரிவிப்பதற்காகவே புத்தகங்களை வரதட்சணையாக கேட்டுப் பெற்றதாக தெரிவித்தார்.

சாலாவின் விருப்பம் தொடர்பாக, அவரது கணவர் தெரிவித்தபோது, 

மகர் என்பது பெண்களுக்கான உரிமை என்றும், ஆண்களுக்கான பெருந்தன்மை இல்லை என்றார்.

மேலும், தாங்கள் மதத்திற்கு எதிராக செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல் : நியூஸ் 18

No comments

Powered by Blogger.