Header Ads



நாங்கள் ஏன், அலட்டிக் கொள்ள வேண்டும்..?

 (அப்துல் கையூம்)

முஸ்லிம் காங்கிரஸ் குறித்து, பத்திரிகைகளுக்கு அவதூறாகக் கடிதம் எழுவோர் குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவற்றுக்கெல்லாம் பதில் கூறி நேரத்தை வீணடிக்க முடியாது.

ஊர்களில் அநாமதேய அமைப்புகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸின் அபிமானிகள் என்ற பெயரில் கடிதம் எழுதுகின்றார்கள். இவ்வாறு பெயர் குறிப்பிடாத, அடையாளத்தை மறைத்து முளைத்தெழுகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? இவர்கள் யார், எத்தகையவர்கள் என்பதை கட்சித் தொண்டர்கள் அடையாளம் கண்டுவிட்டனர்.

இவற்றைத் தூக்கிப் பிடித்து, கட்சி முகங்கொடுத்த கடின சூழ்நிலைகள் எல்லாம் நீங்கி இப்போது வசந்த காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய இந்தப் பயணத்தில் சோர்வடைந்து, இயக்கம் தடைப்பட்டு அழிந்து போகவேண்டுமா என்பதை நாம் சிந்திப்பது முக்கியமாகும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸுக்குள் தற்பொழுது நிலவி வருகின்ற விடயங்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. இவ்வாறான பிரச்சினைகள் உருவெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இந்தக் கட்சியினுடைய இயக்கத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு சித்திரிக்கப்படுகின்றது. இவற்றைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொண்டு, அவற்றுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தால் ஒரு போதும் கட்சியினால் முன்னேறிச் செல்ல முடியாது.

நாங்கள் உற்சாகமாக கட்சியினுடைய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சொல்வோமானால், அவை அனைத்தும் தானாகவே தவிடு பொடியாகிவிடும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு கட்சி தொடங்கிய காலந்தொட்டே முகங்கொடுத்து வருகின்றோம். இவற்றைக் களைந்து உதறித் தள்ளிவிட்டு முன்னேறிச் செல்ல முயல வேண்டும்.

சிலர் திடீரென முளைத்து, தங்களுக்கு ஏதோ ஞானம் பிறந்து விட்டது போல் புதிய புதிய விடயங்களைக் கண்டு பிடிக்கின்றனர். காலத்தை வீணடித்துக் கொண்டு அவற்றை பின்தொடர்ந்து எம்மால் செல்ல முடியாது. கட்சியின் இயக்கத்தை எவராலும் முடக்கிவிட முடியாது.

சிலர் புதிய புதிய சிந்தாந்தங்களோடு வெளிவந்து பத்திரிகைகளில் வாழலாம் என்று நினைக்கிறார்கள். திட்டமிட்டப்படி, அறிக்கைகளும் கட்டுரைகளும் ஒவ்வொரு பத்திரிகைகளிலும் மாறிமாறி வருவதென்றால் அவை எங்கிருந்து முளைத்தன? இவ்வளவு காலமும் இந்தப் பெரிய பரம இரகசியங்கள் எங்கு ஒளிந்து கிடந்தன? ஒரேயடியாக புற்றுக்குள் இருந்து இத்தனை பாம்புகள் எவ்வாறு வெளிவந்தன? எனப் பார்த்தால் இதன் பின்னணி தெளிவாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. ராசா..! பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்த கதையாக, உங்களது இந்த கருத்து அமைகிறது என்றே நாம் பார்க்கிறோம். பல துன்பங்கள் பட்டு, தியாகங்கள் செய்து, உயிர்கள் பல இழக்கப்பட்டு வார்க்கப்பட்ட காட்ச்சி இது. இந்த கட்ச்சி உங்களின் தலைமையில் படிப்படியாக மக்களின் செல்வாக்கை இழந்து கொண்டு செல்கிறது. முஸ்லிம்களின் வாக்குப் பலம் சிதறடிக்கப்படுகிறது. இதனால் ஒரு தனி நபரான றிசாத் பதுர்டீனின் காட்டில் நல்ல மழை பெய்கிறது. இப்போது வசந்த காலம் ( உங்களை பொறுத்தமட்டில் பணமும் பதவியும் அந்தஸ்தும்) துவங்கி உள்ளது என்று கூறியுள்ளீர்கள். அது என்ன என்று கூறினால் நன்றாக இருக்கும். எங்களை பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் அரசியல் உரிமை போராட்டத்தில் தற்போது மிகவும் முக்கிய காலகட்டமாகும். சம்பந்தனும் அவரது கூட்டமும் அரசாங்கத்துடன் மிகவும் நெருக்கமாக ராஜதந்த்திரத்துடன் அவர்களது அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் ஞானமும், முஸ்லிம்களின் அரசியல் உரிமை போராட்ட பயணமும் இந்த தலைமைத்துவத்துக்கு சூனியமாகவே உள்ளது. இன்னமும் ஒரு தேசியப்பட்டியல் எம்பி யை நியம்மிக்க வக்கில்லாத, முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் தலைமைத்துவம். இது முஸ்லீம் இனத்துக்கே பெரும் அவமானமும் தலைகுனிவும் ஆகும். முடிந்தால் ஓரிரு வாரத்துக்குள் தேசிய பட்டியல் எம்பி யை நியமித்து உங்கள் அரசியல் வீரியத்தை வெளிப்படுத்துங்கள் பார்க்கலாம். இப்படி எழுதிக் கொண்டே போகலாம். இலங்கை அரசியல் வரலாற்றில் புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், பத்திரிக்கை துறையினரும் இப்படியான அரசியல் நெருக்கடியான, இக்கட்டான, முக்கியமான நேரத்தில் பெரும் பங்களிப்புக்களை செய்துள்ளார்கள். வீதியில் இறங்கி போராட்டமும் செய்துள்ளார்கள். இப்போதும் அதட்குரிய காலகட்டமும் நேரமுமாகும் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.