Header Ads



பாஸ்போர்ட் அலுவலகம், பத்தரமுல்லைக்கு மாறுகிறது


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் பத்தரமுல்லையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

பொதுமக்கள் விரைவாக தமது சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த திணைக்களம் பத்தரமுல்லையில் அமைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பத்தரமுல்ல 'சுஹுருபாய' என்ற புதிய கட்டத்தில் இதன் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 10 ஆனந்த ராஜகருணா மாவத்தையில் தற்போது அமைந்திருக்கும் பிரதான அலுவலகம், கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா போன்ற நகரங்களில் அமைந்துள்ள கிளைக்காரியாலயங்களில் குடிவரவு, குடியகல்வு தொடர்பான விடயங்கள் நடைபெற மாட்டாதென அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மாதம் 29ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டு, விசா வழங்குதல், கடவுச்சீட்டுகளில் திருத்தம், பொது சேவைகள், வழங்குதல், வெளிநாட்டு பயண உரிமம் தொடர்பான பணிகள் போதிய குடியுரிமை ஆகியவற்றின் ஒருநாள் சேவைகள் இடம்பெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தமாதம் 26 மற்றும் 29ஆம் திகதிகளில் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பயணிகளின் நடவடிக்கைகள் சாதாரணமாக நடைபெறும் என்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.